Home
News

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி பயனர்கள் கவனத்திற்கு.. இனி ரீப்பிளேஸ் தேவையில்லை..

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி ஆகியவற்றில் ஏற்படும் ஹார்ட்வேர் சிக்கல்களைச் சரிசெய்ய ஆப்பிள் ஒரு புதிய பழுதுபார்க்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்பிள் அதன் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர்கள் மூலம் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி போன்களில் ஏற்படும் ஹார்ட்வேர் சிக்கல்களைச் சரி செய்ய இந்த புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி பயனர்கள் கவனத்திற்கு..

பின்புற கண்ணாடி, பேஸ் ஐடி, லாஜிக் போர்டு போன்ற சிக்கல்களைப் பிப்ரவரி 23 முதல் புதிய பழுதுபார்க்கும் முறையைப் பயன்படுத்தி ஆப்பிள் சர்வீஸ் நிபுணர்கள் சரி செய்து கொடுப்பார்கள் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. சேவை வழங்குநர்கள் பழுதுபார்ப்புகளைச் சாத்தியமாக்கும் புதிய "ஐபோன் ரியர் சிஸ்டம்" என்ற புதிய பகுதியைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

மேக்ரூமர்ஸ் காட்டிய ஒரு உள் மெமோவில், ஆப்பிள் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி ஆகிய போன்களில் ஃபேஸ் ஐடி சிஸ்டம், லாஜிக் போர்டு அல்லது ரியர் கிளாஸ் கிராக் செய்யப்பட்ட பின்புற கண்ணாடி போன்ற சாதனத்தின் இயங்க முடியாத அல்லது சிக்கல்களை எதிர்கொள்ளும் மாதிரிகள் புதிய பழுதுபார்க்கும் முறையைப் பயன்படுத்தி தொழில்நுட்ப வல்லுநர்களால் சரிசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கேமராக்களுடனான சில சிக்கல்கள் போன்ற சிக்கல்களுக்கு வாடிக்கையாளர்கள் போனை மாற்றீடு செய்தாக தான் வேண்டும், அவை இந்த புதிய சிஸ்டத்தின் கீழ் பழுதுபார்க்கப்படமாட்டாது என்று நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக எந்த நாடுகளுக்கு இந்த சேவை இப்போது கிடைக்கிறது என்று குறிப்பிடாமல் நிறுவனம் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி விற்பனை செய்யப்படும் பகுதிகளில் புதிய யூனிட் பழுதுபார்ப்பிற்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
iPhone 12, iPhone 12 mini Cracked Rear Glass Repairs Now Possible Without Replacement : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X