இவ்ளோ கம்மி விலைக்கு இனி கிடைக்காது.. ஆளுக்கு 1 ஆர்டர் போடும் விலையில் iPhone 12!
ஒருவேளை பழைய ஐபோன்கள் (Old iPhones) மீது கிடைத்த எந்தவொரு ஆஃபரையும், டிஸ்கவுண்ட்டையும் (Offer and Discount) நீங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றால்.. கவலையை விடுங்கள், பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) ஐபோன் 12 (iPhone 12) மாடலை மிகவும் மலிவான விலைக்கு (Cheap Price) விற்பனை செய்கிறது.
ஐபோன் 15 (iPhone 15) உடன் ஒப்பிடும் போது ஐபோன் 12 ஆனது மிகவும் பழைய மாடலாக தெரியலாம். இருப்பினும் பட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்டில் இருந்து ஐஓஎஸ்-க்கு (Android to iOS) மாற விரும்பும் எவருக்குமே இதுவொரு சிறந்த வாய்ப்பாகும். பிளிப்கார்ட் வலைத்தளமானது ஐபோன் 12 மீது 17% நேரடி தள்ளுபடியை (Direct Discount) அறிவித்துள்ளது.

ஐபோன் 12 மாடலின் அதிகாரப்பூர்வ விலை ரூ.49,900 ஆகும். இருப்பினும் (இந்த கட்டுரையை எழுதும் நேரத்தில்) இது பிளிப்கார்ட்டில் ரூ.40,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது தவிர ஐபோன் 12-இன் விலையை மேலும் குறைக்கக்கூடிய பல வங்கி சலுகைகளும் (Bank Offers) அணுக கிடைக்கின்றன. கூடுதலாக எக்ஸ்சேன்ஜ் சலுகையும் (Exchange Offer) இருக்கிறது.
பிளிப்கார்ட்டில் ரூ.40,999 க்கு கிடைப்பது ஐபோன் 12 மாடலின் பேஸிக் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் (Basic 64GB Storage Option) ஆகும். ஒருவேளை நீங்கள் மேலதிக ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை வாங்க விரும்பினால் இதை விட அதிகம் செலவாகும் இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 128ஜிபி ஆப்ஷன் (128GB Storage Option) 14% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ. 46,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஹை-எண்ட் ஸ்டரோஜ் ஆப்ஷன் ஆன 256ஜிபி வேரியண்ட் (256GB Storage Option) வெறும் 1% தள்ளுபடியை பெற்று ரூ.63,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 12 மீது கிடைக்கும் வங்கி சலுகைகளை பற்றி பேசுகையில், ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு (Axis Bank Credit Card) வழியிலான இஎம்ஐ (EMI) பரிவர்தனைகளின் போது கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும்.
இதேபோல பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு (Flipkart Axis Bank Credit Card) மற்றும் சிட்டி பேங்க் கிரெடிட் கார்டு (Citi Bank Credit Card) வழியிலான இஎம்ஐ பரிவர்தனைகளுக்கும் கூட கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும் என்று பிளிப்கார்ட் பட்டியலிட்டுள்ளது.

எக்ஸ்சேன்ஜ் ஆஃபரை பொறுத்தவரை ஐபோன் 12 மாடலின் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது ரூ.39,800 வரையிலான தள்ளுபடி கிடைக்கும். இதேபோல 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மீது ரூ.42,700 எக்ஸ்சேன்ஜ் ஆபர் கிடைக்கும். இந்த எக்ஸ்சேன்ஜ் வேல்யூவானது (Exchange Value) நீங்கள் பரிமாற்றம் செய்யும் பழைய போனின் நிலையை (Old Smartphone Status) பொறுத்து வேறுபடும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் 12 ஆனது 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி (Super Retina XDR OLED) டிஸ்பிளேவுடன் வருகிறது. இது ஆப்பிளின் சொந்த ஏ14 பயோனிக் சிப் (A14 Bionic Chip) மூலம் இயக்கப்படுகிறது. பழைய மாடலாக இருந்தாலும் கூட இது செராமிக் ஷீல்ட் (Ceramic shield) மற்றும் ஐபி68 ரேட்டிங் (IP68 Rating) உடன் வருகிறது.
கேமராவை பொறுத்தவரை, இதன் பின்புறத்தில் 12எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் நைட் மோட் (Night Mode), 4கே டால்பி விஷன் எச்டிஆர் ரெக்கார்டிங்கிற்கான (4K Dolby Vision HDR recording) ஆதரவுடன் 12எம்பி ட்ரூட்ப்த் செல்பீ கேமரா உள்ளது. ஒட்டுமொத்தமாக ஐபோன் 12 ஆனது இன்னமும் நல்ல அளவிலான விற்பனையை சந்திக்கும், பிரீமியம் அம்சங்களுடன் வரும், கொடுக்கும் பணத்திற்கான மதிப்புடைய ஒரு ஐபோனாக திகழ்கிறது!


Click it and Unblock the Notifications








