'FREE'DOM விற்பனை- சார், ஐபோனே வாங்குறோம்: ரூ.12,500 தள்ளுபடியில் ஐபோன் 12!
ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் சுதந்திர தின சலுகையாக ஆகஸ்ட் 15 வரை விஜய் சேல்ஸ் தளத்தில் ஆப்பிள் தின சேல் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விற்பனையில் சிறந்த சலுகையில் ஒன்று ஐபோன் 12 சாதனத்துக்கு கிடைக்கிறது. இந்த சாதனத்தை தற்போது நீங்கள் ரூ.67,400-க்கு கிடைக்கிறது. ஐபோன் 12 சாதனத்தின் உண்மை விலை ரூ.79,900 ஆகும். இந்த சாதனம் தற்போது ரூ.10,000-த்துக்கு மேல் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

தள்ளுபடி விலையில் ஐபோன் 12
நீங்கள் ஐபோன் 12 சாதனத்தை ரூ.67,400 என்ற விலையில் பெற எச்டிஎஃப்சி வங்கி கடன் அட்டையை பயன்படுத்த வேண்டும். அதேபோல் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது ரூ.6000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. அதன்படி ஐபோன் 12 மீதான மொத்த தள்ளுபடி ரூ.12,500 ஆகும். இந்த தள்ளுபடியை விஜய் சேல்ஸின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும். ஐபோன் 12 சலுகைகளுடன் கூடுதலாக அதிக ஆப்பிள் தயாரிப்புகளை வாங்கலாம். ஐபோன் எக்ஸ்ஆர் சாதனம் ரூ.39,199-க்கு கிடைக்கிறது. ஏர்பாட்ஸ் ப்ரோ எச்டிஎஃப்சி வங்கி மூலம் ரூ.18,490 என தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

ஐபோன் 12 சாதனத்தின் முக்கிய அம்சங்கள்
ஐபோன் 12 சாதனத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 6.1 இன்ச் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஐபோன் செராமிக் ஷீல்ட் கண்ணாடி தொழில்நுட்த்தையும் கொண்டுள்ளது. இந்த அம்சமானது ஐபோன் 11-ல் வழங்கப்பட்ட எல்சிடி பேனலை விட மிகவும் சிறந்தவையாகும். ஐபோன் 12 5ஜி ஆதரவோடு வருகிறது. இது ஏ14 பயோனிக் எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஏ14 பயோனிக் ஆனது நான்கு கோர் ஜிபியூ உடன் ஆறு கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது டால்பி விஷன் அம்சத்தை கொண்டுள்ளது.

இரட்டை 12 மெகாபிக்சல் கேமரா
ஐபோன் 12 சாதனமானது இரட்டை 12 மெகாபிக்சல் அகல கோண சென்சார்கள் ஆதரவோடு வருகிறது. இது குறைந்த ஒளி நிலையிலும் கூட சிறந்த புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. முன்புற கேமரா உட்பட அனைத்து கேமராக்களும் ஆப்பிள் நைட் மோட் அம்சத்தோடு வருகிறது. முன்புறத்திலும் 12 எம்பி ட்ரூ டெப்த் நைட்மோட் கேமராவோடு வருகிறது. நைட் மோட் அம்சமானது டைம் லேப் ஆதரவையும் கொண்டிருக்கிறது. குறைந்த ஒளி அளவிலும் படம்பிடிக்க இது உதவுகிறது. 4கே டால்பி விஷன் எச்டிஆர் ரெக்கார்டிங் ஆதரவோடு இது வருகிறது.

17 மணிநேர வீடியோ ப்ளேபேக் அம்சம்
ஐபோன் 12 மேக் சேஃப் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவோடு 15 வாட்ஸ் சார்ஜிங் மற்றும் க்விக் வயர்லெஸ் சார்ஜிங் 7.5 வாட்ஸ் ஆதரவையும் கொண்டுள்ளது. இது 2815 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 17 மணிநேர வீடியோ ப்ளேபேக் அம்சத்தை இது வழங்குகிறது. ஐபோன் 12-ல் இருக்கும் இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில் வைஃபை 6, ப்ளூடூத் 5, அல்ட்ரா வைட்பேண்ட் பொசிஷனிங், ஐபிஎஸ் மற்றும் என்எஃப்சி ஆகியவையும் இதில் அடங்கும்.


Click it and Unblock the Notifications