ஆப்பிள் ஐபோன் 12 மீது நம்ப முடியாத சலுகை.. இப்படி ஒரு விலை குறைவா? உடனே வாங்கிடலாம் போலயே..
ஆப்பிள் ஐபோன் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி, முன்னெப்போதையும் விட இப்போது ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தின் மீது நம்ப முடியாத அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Apple நிறுவனத்தின் ஆப்பிள் iPhone 12 தொடர் சாதனங்கள் மீது அமேசான் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தியர்களுக்கு மிக அதிகமான தள்ளுபடியை இப்போது அறிவித்துள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள ஆப்பிளின் ஐபோன்கள்
ஆப்பிளின் ஐபோன்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன்களுக்காக மக்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவழிக்கத் தயாராக உள்ளனர். சிறந்த மறுவிற்பனை மதிப்பு, ஆண்ட்ராய்டு போன்களை விட அதிகமான OS புதுப்பிப்புகள் மற்றும் ஐபோன்களின் நிலை சின்னமாக மாறியது உள்ளிட்ட பல காரணங்களால் இது ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஐபோன்களை சிலர் பெருமைக்காக வாங்குவதும் இங்கு காரணமாக உள்ளது.

ஆப்பிள் ஐபோன் 11 தொடர் கூட இன்னும் விற்பனையில் உள்ளதா?
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் சாதனங்கள் தான் தற்போது ஆப்பிளில் இருந்து கிடைக்கும் சமீபத்திய முதன்மையாக இருந்தாலும், பயனர்கள் இன்னும் ஐபோன் 12 சாதனங்களை வாங்குகிறார்கள். உண்மையைச் சொல்லப் போனால், இன்னும் ஆப்பிள் ஐபோன் மீது மோகம் கொண்ட ரசிகர்கள் தொடர்ந்து புதிய ஆப்பிள் ஐபோன் 11 தொடர் சாதனங்களைக் கூட பலர் வாங்கி செல்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. இதற்கான காரணம், புதிய வரவுகள் விலை அதிகமாக இருக்கும் நேரத்தில் முந்தைய மாடல்களின் விலை கணிசமாகக் குறைகிறது.

காத்திருந்த ஆப்பிள் சாதனத்தைச் சாமர்த்தியமாக வாங்கும் ரசிகர்கள்
இதை ஆப்பிள் ரசிகர்கள் காத்திருந்து சரியாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். இப்படி காத்திருந்து சரியான நேரத்தில் சலுகையுடன் ஆப்பிள் ஐபோன்களை வாங்கும் ரசிகர்களை பார்க்கும் போது, "ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு" என்ற வரிகள் தான் நினைவிற்கு வருகிறது. இதற்கான பொருள், தண்ணீருக்கு நடுவே ஒரு கொக்கு வாட்டத்துடன் நின்றுகொண்டு இருக்கிறது. அதன் காலைச் சுற்றிப் பல சிறிய மீன்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அந்தக் கொக்கு அவற்றைக் கவ்வித் தின்பதில்லை.

பொறுத்தார் ஐபோன் வாங்குவார்
ஏன்? அந்தக் கொக்குக்கு மீன் பிடிக்கத் தெரியாதா? இல்லை. தன் பசியைத் தீர்க்கக்கூடிய பெரிய மீன் சரியான நேரத்தில் வரும்வரை அந்தக் கொக்கு பொறுமையாகக் காத்திருக்கும். அவசரப்படாது. இதேபோல், தான் ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்திருக்கும் ரசிகர்கள் இப்போது கிடைக்கும் அபார சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் நேரம் இது. தற்போது, இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் சாதனங்களின் மீது கிடைக்கும் சலுகை விலை மற்றும் விபரங்களைப் பார்க்கலாம் .

இந்தியாவில் iPhone 12 சீரிஸ் விலை நம்ப முடியாத அளவிற்குக் குறைந்துள்ளதா?
ஆப்பிள் iPhone 12 இன் அடிப்படை மாறுபாடான 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை இப்போது இந்தியாவில் ரூ. 53,999 என்று குறைந்துள்ளது. இது இப்போது Amazon தளத்தில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. அதே சமயம், ஆப்பிள் ஐபோன் 12 மடலின் 128 ஜிபி வேரியண்ட் மாறுபாடு ரூ. 60,999 என்ற விலைக்கு இப்போது வாங்குவதற்குக் கிடைக்கிறது. அதேபோல், ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தின் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை இப்போது ரூ. 69,999 என்று விற்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 12 மீது கிடைக்கும் சலுகை இந்த மாடலுக்கு மட்டுமா?
ஆனால், இந்த சலுகை ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தின் குறிப்பிட்ட இரண்டு நிறங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை ஆப்பிள் ரசிகர்கள் கவனிக்க வேண்டும். அமேசான் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள தகவலின் படி, இது கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய இரண்டு வண்ணங்களில் உள்ள ஐபோன் 12 மாடல்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை விட குறைந்த விலையில் ஒரு ஐபோன் வாங்க வேண்டும் என்றால், நீங்கள் உடனே பிளிப்கார்ட் செல்ல வேண்டும்.

ஆப்பிள் iPhone 12 மினி மீது நம்ப முடியாத தள்ளுபடி
இங்கு, ஆப்பிள் iPhone 12 மினி சாதனம் அதிரடியான சலுகையுடன் Flipkart தளத்தில் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 12 மினி இப்போது அதிக தள்ளுபடி உடன் பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது. ஐபோன் 12 வாங்க விரும்பாதவர்கள் ஐபோன் 12 மினி சாதனத்தைக் கூட இப்போது வாங்கலாம். ஆப்பிள் ஐபோன் 12 மினி சாதனத்தின் 64ஜிபி மாறுபாடு இப்போது ரூ. 50,099 விலைக்குக் கிடைக்கிறது. அதே சமயம், 128ஜிபி மாறுபாடு மாடல் ரூ.55,099 விலைக்கு கிடைக்கிறது. அதேபோல், இதன் 256ஜிபி மெமரி வேரியன்ட் மாடல் ரூ.65,099 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications