Home
News

ஐபோனை சொந்தமாக்க சரியான நேரம்: அமேசான், பிளிப்கார்ட்டில் ஐபோன் 12, 12மினி மற்றும் ஐபோன் 11-க்கு அதீத தள்ளுபடி!

ஐபோன் 12, 12 மினி மற்றும் ஐபோன் 11 இந்தியாவில் பெரும் விலைக் குறைப்புகளை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் 12 12 மினி மற்றும் ஐபோன் 11 ஆகியவை நாட்டில் பண்டிகை விற்பனையின் போது பெரும் விலைக் குறைப்பை பெற்றது. உங்களுக்கு பிடித்தமான ஐபோனை பெறும் தள்ளுபடியுடன் தற்போது வாங்குவதற்கு சரியான நேரமாகும். ஆப்பிள் ஐபோன் 12, 12 மினி மற்றும் ஐபோன் 11 ஆகிய சாதனங்கள் பெரும் விலைக் குறைப்பை பெற்றுள்ளது. ஆப்பிள் ஐபோன் 12, 12 மினி மற்றும் ஐபோன் 11 சானத்தின் விலைக் குறைப்பு ஆனது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இரண்டிலும் பிரதிபலிக்கிறது. இருப்பினும் அமேசானைவிட பிளிப்கார்ட்டில் சிறந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிளிப்கார்ட்-ல் ஐபோன் 12, 12 மினி மற்றும் ஐபோன் 11 விலை விவரங்கள்

பிளிப்கார்ட்-ல் ஐபோன் 12, 12 மினி மற்றும் ஐபோன் 11 விலை விவரங்கள்

பிளிப்கார்ட்டில் நீங்கள் ஐபோன் 12 அடிப்படை மாடலான 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.59,999 ஆக இருக்கிறது. இருப்பினும் இதன் ப்ளூ கலர் மாறுபாட்டின் விலை ரூ.60,499 ஆக இருக்கிறது. அதேபோல் இந்த மாடலின் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.64,999 ஆகவும் 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.74999 ஆகவும் இருக்கிறது. ஐபோன் 12 மினி சாதனத்தின் 64 ஜிபி மாடல் விலை ரூ.49999 ஆகவும் 128 ஜிபி மாடலின் விலை ரூ.54999 ஆகவும் 256 ஜிபி மாடலின் விலை ரூ.64999 ஆகவும் இருக்கிறது. இந்த விலை ஆனது பிளிப்கார்ட் தளத்தில் எதிரொலிக்கிறது. முந்தைய ஜென் ஐபோன் 11 மாடலானது தற்போது வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படை மாடல் விலை ரூ.49,990 ஆகவும் உயர்நிலை மாடலான 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.64990 ஆகவும் இருக்கிறது. இந்த விலை பிளிப்கார்ட் தளத்தில் எதிரொலிக்கிறது.

அமேசானில் காட்டப்படும் சலுகை விவரங்கள்

அமேசானில் காட்டப்படும் சலுகை விவரங்கள்

அமேசானில் காட்டப்படும் சலுகை விவரங்கள் குறித்து பார்க்கையில், ஐபோன் 12, 12 மினி மற்றும் ஐபோன் 12 விலைகள் குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.63990 ஆகவும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.70900 ஆகவும் ஐபோன் 12 மினி சாதனத்தின் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.53900 ஆகவும் கிடைக்கிறது. இதன் வெள்ளை நிற வேரியண்ட் இதே ரூ.49999 என்ற விலையில் பிளிப்கார்ட்டில் பெறலாம்.

ஐபோன் 12 ப்ரோ 6.1 இன்ச் டிஸ்ப்ளே

ஐபோன் 12 ப்ரோ 6.1 இன்ச் டிஸ்ப்ளே

ஐபோன் 12 ப்ரோ 6.1 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஐபோனில் உள்ள கேமராக்கள் மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளது. ஐபோன் 12 ப்ரோ டிரிபிள் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. ஐபோன் 12 ப்ரோ எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் டால்பை விஷன் ஆதரவுகள் இதில் இருக்கிறது. ஐபோன் 12 ப்ரோ ஐஓஎஸ் 14 அடிப்படையாகக் கொண்டு இயக்கப்படுகிறது. ஐபோன் 12 ப்ரோ இரட்டை சிம் ஆதரவோடு வருகிறது. இது 64ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. நானோ சிம்களின் ஆதரவுகள் இதில் இருக்கிறது. மேலும் இந்த சாதனம் கோல்ட், கிராஃபைட், பசிபிக் ப்ளூ மற்றும் சில்வர் ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது. மேலும் இதில் ஐபி 68 மதிப்பிடப்பட்ட வாட்டர் மற்றும் தூசி ரெசிஸ்டன்ட் ஆதரவு இதில் உள்ளது.

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அம்சங்கள்

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அம்சங்கள்

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அம்சங்கள் குறித்து பார்க்கையில் ஐபோன் 12, ஐபோன் 12 மினி ஒரே கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் இரண்டுக்குமான வேறுபாடு இதன் காட்சி அளவு மற்றும் பேட்டரி திறன் ஆகும். ஐபோன் 12 சாதனமானது 6.1 இன்ச் ரெடினா எக்ஸ்டி ஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதேபோல் ஐபோன் 12 மினி 5.4 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.இரண்டு ஸ்மார்ட்போன்களும் டால்பி ஆதரவோடுவருகிறது. அதேபோல் இரண்டும் ஒரே ஏ14 பயோனிக் அம்சத்துடன்இயக்கப்படுகின்றன.

2851 எம்ஏஎச் பேட்டரி

2851 எம்ஏஎச் பேட்டரி

ஐபோன் 12 சாதனத்தில் 2851 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஐபோன் 12 மினி சாதனத்தில் 2227 எம்ஏஎச் பேட்டரி உடன் இருக்கிறது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த சாதனம் கேமரா அமைப்பில் 12 எம்பி அகல கோண லென்ஸ் ஆதரவு, 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் ஆதரவு இருக்கிறது. அதேபோல் செல்பி, வீடியோ அழைப்புகளுக்கு4கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுடன் 12 எம்பி செல்பி கேமரா இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Iphone 12, 12 mini and Iphone 11 Gets Huge Discount in Amazon and Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X