iPhone 11 பயனர்களுக்கு இலவச டிஸ்பிளே ரீபிளேஸ்மென்ட்.. உங்களுக்கும் வாய்ப்பு இருக்கானு செக் பண்ணுங்க..

|

டச் ஸ்க்ரீன் சிக்கல்களை அனுபவிக்கும் ஐபோன் 11 பயனர்கள் இப்போது ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து இலவச டிஸ்பிளே ரீபிளேஸ்மென்ட் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான ஐபோன் 11 டிஸ்பிளேக்கள் "டிஸ்பிளே மாடுயள் (display module) தொகுதியில் உள்ள சிக்கல் காரணமாக டச் ஸ்கிரீனில் இந்த கோளாறு ஏற்பட்டிருக்கிறது" என்று ஆப்பிள் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

ஐபோன் 11 மாடல் டச் ஸ்கிரீன் சிக்கல்

ஐபோன் 11 மாடல் டச் ஸ்கிரீன் சிக்கல்

நவம்பர் 2019 முதல் மே 2020 வரை தயாரிக்கப்பட்ட ஐபோன் 11 மாடல் ஐபோன்களில் இந்த தொடுதிரை சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும், குறிப்பிட்ட தகுதியான சில வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் இந்த கோளாறை இலவசமாக சர்வீஸ் செய்து தருவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலவச டிஸ்பிளே ரீபிளேஸ்மென்ட்

இலவச டிஸ்பிளே ரீபிளேஸ்மென்ட்

இந்த குறிப்பிட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட ஐபோன் 11 சாதனத்தில் மட்டுமே இந்த டச் ஸ்கிரீன்கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும், இந்த சிக்கலால் அவதிப்படும் பயனர்களுக்குமட்டும் ஆப்பிள் நிறுவனம் தனதுஇலவச சேவையை வழங்கும் என்றுகூறியுள்ளது. இவர்களுக்கு இலவச டிஸ்பிளே ரீபிளேஸ்மென்ட் கிடைக்கும்.

ஒரே நேரத்தில் வீட்டுக்கு வந்த 40 டெலிவரி பாய்ஸ்: 7 வயது சிறுமியின் ஒரு தவறு!ஒரே நேரத்தில் வீட்டுக்கு வந்த 40 டெலிவரி பாய்ஸ்: 7 வயது சிறுமியின் ஒரு தவறு!

இலவச ரீபிளேஸ்மென்ட் தகுதி உங்களுக்கு உள்ளதா? எப்படி செக் செய்வது?

இலவச ரீபிளேஸ்மென்ட் தகுதி உங்களுக்கு உள்ளதா? எப்படி செக் செய்வது?

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இலவச ரீபிளேஸ்மென்ட் தகுதி உள்ளதா என்பதைக் கண்டறிய நிறுவனம் தனது வலைத்தளத்தில் ஒரு ஆதரவு பக்கத்தை வைத்துள்ளது. ஆப்பிள் புதிதாக டச் சிக்கல்களுக்கான ஐபோன் 11 காட்சி தொகுதி மாற்று திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் டச் ஸ்கிரீன் கோளாறு உடைய ஐபோன் 11 உரிமையாளர்களுக்கு இலவச சேவையை வழங்கும்.

உங்கள் ஐபோனின் சீரியல் எண்ணை எப்படி கண்டுபிடிப்பது?

உங்கள் ஐபோனின் சீரியல் எண்ணை எப்படி கண்டுபிடிப்பது?

நவம்பர் 2019 மற்றும் மே 2020 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 11 மாடல்கள் இந்த சிக்கலால் பாதிக்கப்படக்கூடும், இந்த காலகட்டத்தில் உங்கள் ஐபோன் தயாரிக்கப்பட்டிருந்தால், ஆப்பிள் ஆதரவு பக்கத்திற்குச் சென்று உங்களுக்கு இலவச சேவை இருக்கிறதா என்பதை சரிபார்க்க உங்கள் ஐபோனின் சீரியல் எண்ணை உள்ளிடவும். உங்கள் ஐபோனின் சீரியல் எண்ணை கண்டுபிடிக்க, Settings > General > About கிளிக் செய்யுங்கள்.

இலவச சேவைக்கு நீங்கள் தகுதி பெற்றிருந்தால்.. இதை செய்யுங்கள்

இலவச சேவைக்கு நீங்கள் தகுதி பெற்றிருந்தால்.. இதை செய்யுங்கள்

மேற்கூறிய வரம்பிற்கு இடையில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 11 பயனர்களுக்கு மட்டுமே இந்த இலவச சலுகை செல்லுபடியாகும். இலவச சேவைக்கு நீங்கள் தகுதி பெற்றிருந்தால், ஆப்பிள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநரைக் கண்டுபிடிக்க வேண்டும், ஆப்பிள் சில்லறை கடை அல்லது ஆப்பிள் பழுதுபார்க்கும் மையம் வழியாக உங்கள் சேவைக்கான தேவைக்கு நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
iPhone 11 Users Facing Touchscreen Issues Can Get Free Display Replacement : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X