ஆரம்பம்தான்: தலைநகர் சென்னையில் ஆப்பிள் உற்பத்தி தொடக்கம்- ஐபோன் விலை குறையுமா?

|

ஆப்பிள் நிறுவனம் முன்னணி மாடலான ஐபோன் 11-ஐ இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியுள்ளது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மேக் இன் இந்தியா திட்டம்

மேக் இன் இந்தியா திட்டம்

நாட்டின் வளர்ச்சியை முன்நோக்கி எடுத்துச் செல்லும்விதமாக மத்திய அரசு ஆத்மநிர்பார் (மேக் இன் இந்தியா) திட்டத்தை அறிவித்தது. மேக் இன் இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதற்கான செயல்பாடு என்பது குறைவாகவே இருந்தது.

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறியது.

59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை

59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை

இதையடுத்து சீன பொருட்களுக்கு எதிராக இந்தியாவில் குரல் வலுக்கத் தொடங்கியது. முதற்கட்டமாக 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அதேநேரத்தில் இந்தியாவில் தயாரிப்புகளை ஊக்குவிக்க மேக் இன் இந்தியா திட்டம் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் ஃபாக்ஸ்கான் ஆலை

சென்னையில் ஃபாக்ஸ்கான் ஆலை

இதன் முதல்வெற்றி என்று கருதப்படும் வகையில் ஆப்பிள் நிறுவனம் முன்னணி ஐபோன் மாடல்களில் ஒன்றான ஐபோன் 11-ஐ சென்னையில் ஃபாக்ஸ்கான் ஆலையில் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு 22 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும். இனி இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு இது இருக்காது என்றே கூறப்படுகிறது.

2019 ஆம் ஆண்டில் ஐபோன் எஸ்இ

2019 ஆம் ஆண்டில் ஐபோன் எஸ்இ

ஆப்பிள் நிறுவனம் ஐபோனின் முதன்மை மாடலை இந்தியாவில் தயாரிப்பது இதுவே முதன்முறை. முன்னதாக 2019 ஆம் ஆண்டில் ஐபோன் எஸ்இ வகை மாடல் உற்பத்தி பெங்களூருவில் மேற்கொண்டதாகவும் 2017 ஆண்டு ஐபோன் எக்ஸ்ஆப் மாடலை இந்தியாவில் அசெம்பிள் செய்ததாகவும் கூறப்படுகிறது. முதன்மை மாடல் மற்றும் காஸ்ட்லி விலை ஐபோன் தயாரிப்பு என்பது இதுவே முதன்முறை.

குவிந்த ஆர்டர்கள்: பிரியாணி பொட்டலம் மட்டும் 5 1/2 லட்சம்- ஊரடங்கில் கோலகல விற்பனை- ஸ்விகி அறிக்கை!குவிந்த ஆர்டர்கள்: பிரியாணி பொட்டலம் மட்டும் 5 1/2 லட்சம்- ஊரடங்கில் கோலகல விற்பனை- ஸ்விகி அறிக்கை!

சென்னையில் ஐபோன் 11 மாடல் தயாரிப்பு

சென்னையில் ஐபோன் 11 மாடல் தயாரிப்பு

சீனாவிற்கும் அமெரிக்காவுக்குமான வர்த்தக போர், இந்தியா சீனா இடையேயான எல்லை பிரச்சனை, இந்தியாவில் சீன செயலிகளுக்கு தடை என தொடர் சூழ்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கானம் சென்னையில் ஐபோன் 11 மாடலை தயாரிக்க தொடங்கியுள்ளது.

ஐபோன் விலை குறையுமா

ஐபோன் விலை குறையுமா

இதன்மூலம் இந்தியாவில் ஐபோன் விலை குறையுமா என்றால் தற்போதுவரை இறக்குமதி செய்யப்பட்ட யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் தயாரிக்கப்படும் ஐபோன் 11 விற்பனைக்கு வரும்போது இறக்குமதி வரி நீக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

மேக் இன் இந்தியா திட்டம்

மேக் இன் இந்தியா திட்டம்

"மேக் இன் இந்தியா திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கம் கிடைத்துள்ளது! ஆப்பிள், இந்தியாவில் ஐபோன் 11 ஐ தயாரிக்கத் தொடங்கியுள்ளது. நமது நாட்டில் முதல் முறையாக ஒரு சிறந்த மாடலை ஆப்பிள் தயாரிக்க தொடங்கியுள்ளது. " என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
iPhone 11 now Made in India at Chennai City

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X