Home
News

அடிமட்ட விலைக்கு இறங்கிய iPhone 11.. கண்ண மூடிக்கிட்டு வாங்க.. நச்சுனு 4 காரணங்கள்!

வாங்கினால்.. ரூ.80,000 க்கு ஐபோன் 15 தான் வாங்குவேன் என்கிற எண்ணமெல்லாம் எனக்கில்லை.. சற்றே பழைய மாடலாக இருந்தாலும் கூட பரவாயில்லை.. பட்ஜெட் விலையில், கொடுக்கும் பணத்திற்கு 'வொர்த்' ஆன ஒரு ஐபோன் கிடைத்தால் போதும்.. என்கிற எண்ணம் கொண்டவரா நீங்கள்?

ஆமென்றால் இதுவே அதற்கான சரியான நேரம். ஏனென்றால் பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது, ஆப்பிளின் பழைய மாடல்களில் ஒன்றான ஐபோன் 11 (iPhone 11) மீது அட்டகாசமான நேரடி தள்ளுப்படி (Flat Discount), வங்கி மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆஃபரை அறிவித்துள்ளது.

அடிமட்ட விலைக்கு இறங்கிய iPhone 11!

எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த செப்.12 ஆம் தேதி அறிமுகமான ஐபோன் 15 சீரீஸ் (iPhone 15 Series) மாடல்கள் ஆனது இந்திய சந்தையில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. ஏன் என்பதறகு நிறைய காரணங்களை முன்வைக்கலாம். அதில் மிகவும் முக்கியமான காரணம் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் விலை நிர்ணயம் தான்!

இவ்விரு மாடல்களின் இந்திய விலை நிர்ணயமானது ஓராண்டுக்கு முன் அறிமுகமான ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் மாடலின் அறிமுக விலையுடன் ஒற்றுப்போகிறது. புதிய 2023 ஐபோன் மாடல்கள் அறிமுகமான வேகத்தில் ஐபோன் 14, 14 பிளஸ் மாடல்களின் விலைகள் இன்னும் குறைக்கப்பட்டு விட்டன என்றாலும் கூட.. ஐபோன் 14, 14 பிளஸ் பட்ஜெட் வாசிகளுக்கானதாக இல்லை!

இந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் நோக்கத்தின் கீழ் தான் பிளிப்கார்ட் வலைத்தளமானது ஐபோன் 11 மீது 13% நேரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதாவது ஐபோன் 11-ன் விலையில் ரூ.5901 குறைக்கப்பட்டுள்ளது. ரூ.43,900 க்கு அறிமுகமான ஐபோன் 11 மாடலானது தற்போது ரூ.37999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த இடத்தில், ஐபோன் 11 மாடலின் சில யூனிட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன, எனவே நீங்கள் இதை விரைவில் கைப்பற்ற வேண்டும்.

ஐபோன் 11 மீது கிடைக்கும் மற்ற சலுகைகள்: வங்கி சலுகைகளை பொறுத்தவரை, ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். ஒன்கார்டு கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.1250 தள்ளுபடி கிடைக்கும். பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டில் 5 சதவீத கேஷ்பேக் கிடைக்கும்.

எக்ஸ்சேஞ்ச் சலுகையை பொறுத்தவரை, பிளிப்கார்ட் வலைத்தளமானது ரூ.30600 வரையிலான தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதற்காக நன்றாக வேலை செய்யும், நல்ல நிலையில் உள்ள உங்கள் பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்ய வேண்டியிருக்கும். இதன்கீழ் கிடைக்கும் எக்ஸ்சேன்ஜ் வேல்யூவானது, நீங்கள் கொடுக்கும் போனின் மாடல் மற்றும் நிலையை பொறுத்து வேறுபடும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

4 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான.. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகமான ஐபோன் 11 மாடலை 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்.. நம்பி வாங்கலாமா என்கிற கேள்வி உங்களுக்குள் எழுந்தால்.. அதுவொன்றும் பெரிய தேசியகுற்றமல்ல; நியாயமான சந்தேகம் தான்!

இப்போதும் கூட ஐபோன் 11 மாடலை ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கு 4 முக்கியமான மற்றும் நியாயமான காரணங்களை முன்வைக்க முடியும். முதல் காரணம்: ஐபோன் 11 ஆனது 6.1 இன்ச் அளவிலான லிக்விட் ரெட்டினா எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இரண்டாவது காரணம்: இது சீரான பெர்ஃபார்மென்ஸை வழங்கும் ஏ13 பயோனிக் சிப்பை பேக் செய்கிறது.

மூன்றாவது காரணம்: ஐபோன் 11 மாடலானது 64 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. கடைசி மற்றும் நான்காவது காரணம்: இது 12 எம்பி டூயல் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது; முன்பக்கத்தில் 12 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது, இது கூர்மையான புகைப்படங்களை உறுதி செய்கிறது.

Best Mobiles in India

English summary
iPhone 11 Available To Buy in Discounted Price in Flipkart After iPhone 15 Sale Started in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X