ரூ. 40K விலை வரம்பு.. Apple சத்தமில்லாமல் iPad Mini-ல் செய்த மாற்றங்கள்.. A17 Pro சிப்.. பவர்ஃபுல் Tablet..
ஆப்பிள் (Apple) நிறுவனம் சத்தமே இல்லாமல் அதன் ஐபேட் மினி 7வது தலைமுறை மாடலை (iPad mini 7th Gen) அப்கிரேட் (Upgrade) செய்துள்ளது. என்னது திடீரென ஐபேட் மினி மாடலை ஆப்பிள் நிறுவனம் அப்கிரேட் செய்துள்ளதா? என்று ஆப்பிள் ரசிகர்களே விபடையும் வகையில் ஆப்பிள் நிறுவனம் இந்த மேம்படுதலை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய அப்கிரேடில் ஆப்பிள் நிறுவனம் அதன் iPad mini (7th Gen) மாடலை A17 ப்ரோ சிப் மற்றும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ், ஆப்பிள் பென்சில் ப்ரோ போன்ற ஆதரவை ஆதரிக்கும் வகையில் அதிக சக்தி கொண்ட டேப்லெட்டாக மாற்றியுள்ளது.
ரூ. 40,000 விலை வரம்பில் புதிதாக ஐபேட் வாங்க முடியுமா? என்ற ஏக்கத்தில் இருந்தவர்களை குஷி அடைய செய்த ஒரு மாடல் என்றால், அது நிச்சயமாக iPad mini (7th Gen) மாடலாக தான் இருக்க முடியும். இந்த பட்ஜெட் செக்மென்ட் ஐபேட் சக்தியை ஆப்பிள் நிறுவனம் இப்போது அடுத்தநிலைக்கு எடுத்து சென்றுள்ளது. iPad mini (7th Gen) இல் இனி ஆப்பிள் பயனர்களை எதிர்கால அம்சங்களையும் கொண்டுவந்துள்ளது.

Apple சத்தமில்லாமல் iPad Mini-ல் செய்த மாற்றங்கள்.. A17 Pro சிப்.. பவர்ஃபுல் Tablet:
முதலில், ஆப்பிள் நிறுவனம் iPad mini (7th Gen) இல் வழங்கப்பட்டிருந்த பழைய சிப்பை நீக்கிவிட்டு, நிறுவனத்தின் புதிய மற்றும் சக்தி வாய்ந்த சிப் ஆன A17 ப்ரோ சிப்பை நிறுவனம் இப்போது வழங்க துவங்கியுள்ளது. இதன் மூலம், இந்த சாதனத்தின் CPU 30% பூஸ்ட் உயர்வை அடைந்துள்ளது. அதேபோல், 25% GPU உயர்வையும் இந்த அப்கிரேட் செய்யப்பட்ட ஐபேட் மினி 7வது ஜென் வழங்குமென்று ஆப்பிள் உறுதியளித்துள்ளது.
A17 ப்ரோ சிப் மூலம் ஹார்ட்வேர் ஆக்சிலரேட்டட் ரே ட்ரேஸிங் மற்றும் டைனமிக் கேசிங் அம்சங்களை 4X வேகமாக ஆப்பிள் நிறுவனம் மாற்றி மேம்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் iPad mini (7th Gen) வரிசையில் இதற்கு முன்பு வழங்கி வந்த 64GB வேரியண்ட் மாடலை நிறுத்திவிட்டு, இப்போது புதிதாக 512GB வேரியண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய அப்கிரேட்டிற்கு பிறகு, iPad mini (7th Gen) சாதனம் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் ஆதரவையும் ஆதரிக்குமென்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, ஆப்பிள் பென்சில் ப்ரோ (Apple Pencil Pro) ஆதரவையும் இனி இந்த சாதனங்கள் ஆதரிக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. இந்த டிவைஸின் கேமராவிலும் சில மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 12MP வைடு பேக் கேமரா இப்போது ஸ்மார்ட் எச்டிஆர்4 ஆதரவை வழங்குகிறது.
iPad Mini 2024 விலை என்ன?
அதேபோல், இது மெஷின் லேர்னிங் மூலம் டாக்குமெண்ட்களை துல்லியமாக ஸ்கேன் செய்யுமென்றும் கூறப்பட்டுள்ளது. இதில் 5ஜி (5G) விருப்பம், வைஃபை 6 (Wi-Fi 6) மற்றும் 10Gbps வரை டேட்டா டிரான்ஸ்பர் செய்ய அனுமதிக்கும் USB-C 3 போர்ட்டையும் இந்த சாதனம் கொண்டுள்ளது. இது தற்போது, ஸ்டர்லைட் (Starlight), ஸ்பேஸ் க்ரேய் (Space Grey), ப்ளூ (Blue) மற்றும் பர்பிள் (Purple) நிறத்தில் வருகிறது.
புதிய iPad mini விலை பற்றி பேசுகையில், இதன் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ. 49,900 விலையிலும், 128GB Wi-Fi + செல்லுலார் மாடல் ரூ. 64,900 விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் 256GB WiFi மாடல் ரூ. 59,900 விலையிலும், வைஃபை + செல்லுலார் மாடல் ரூ. 74,900 விலையிலும் வாங்க கிடைக்கும்.
இறுதியாக 512GB வைஃபை மாடல் ரூ. 79,900 மற்றும் வைஃபை + செல்லுலார் மாடல் ரூ. 94,900 விலையிலும் வாங்க கிடைக்கும். இத்துடன் ஆப்பிள் பென்சில் ப்ரோ விலை ரூ. 11,900 என்றும், சாதாரண ஆப்பிள் பென்சில் USB-C மாடல் ரூ. 7900 விலையிலும் வாங்க கிடைக்கும். இந்த புதிய ஐபாட் மினி 7வது ஜென் 29 நாடுகளில் வாங்க கிடைக்கும். அக்டோபர் 23ம் தேதிக்குள் எல்லா இடங்களிலும் கிடைக்குமென்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








