ஐபாட் மினி 6 அம்சங்கள் குறித்து வெளியான தகவல்!

|

ஐபாட் மினி 6 அம்சங்கள் குறித்த தகவல் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. மினி ஐபாட் ஏர் 4 போன்ற சில அம்சங்களை இது கொண்டுள்ளதாக வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபாட் மினி 6 அம்சங்கள்

ஐபாட் மினி 6 அம்சங்கள்

ஐபாட் மினி 6 அம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இதுகுறித்த டிப்ஸ்டரின் அறிக்கையின்படி, அடுத்த ஜெனரேஷன் ஐபாட், மினி ஐபாட் ஏர் 4 உடன் பல ஒருமித்த அம்சங்களை பெற்றுள்ளது. ஐபாட் மினி 6 ஆப்பிள் பென்சில் 2 ஆதரவு மற்றும் ஏ 14 பயோனிக் சிப் ஆகிய அம்சங்களோடு வரும். கடந்தாண்டு நடைபெற்ற ஐபாட் மினி 5 வெளியீட்டு நிகழ்வில் ஆப்பிள் ஐபாட் மினி மேம்படுத்தப்பட்ட அம்சங்களோடு வரும் என தெரிவிக்கப்பட்டது.

டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள அறிக்கை

டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள அறிக்கை

டுவிட்டரில் 0-0-0 என்ற எண்ணுடன் ஐபாட் 6 மினி அம்சங்களை டிப்ஸ்டர் வெளியிட்டுள்ளது. புதிய சலுகை சமீபத்திய வெளியான ஐபாட் ஏர் மற்றும் ஐபாட் ப்ரோ மாடல்களைப் போன்ற ஒரு பாக்ஸி டிசைனுடன் ஐபாட் 6 வரும் என தெரிவிக்கப்படுகிறது.

8.5 இன்ச் டிராப் ரெட்டினா டிஸ்ப்ளே

8.5 இன்ச் டிராப் ரெட்டினா டிஸ்ப்ளே

ஐபாட் மினி 6 8.5 இன்ச் டிராப் ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் 4 ஜிபி ரேம் கொண்ட ஏ 14 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படும் என்றும் டிப்ஸ்டர் தெரிவித்துள்ளது. ஐபாட் மினி 6 சாதனத்தில் இரண்டு பேட்டரிகள் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளது. அதேபோல் ஐபாட் 5 மாறுபாட்டில் இருந்து மாறுபட்டதாக இருக்கிறது. புதிய ஐபாட் மினி மாடல் ஆப்பிள் பென்சில் 2-வை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.

வெளியீட்டு தேதி குறித்த தகவல்

வெளியீட்டு தேதி குறித்த தகவல்

ஐபாட் மினி 6 வெளியீட்டு தேதி குறித்து டிப்ஸ்டர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. அதேபோல் ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குவோ., ஜூன் மாதம் வெளியிட்ட ஒரு தகவலில் 8.5 அங்குல ஐபாட் மினி 2021 நடுப்பகுதியில் தொடங்கப்படலாம் என தெரிவித்தார். அதேபோல் 20W பவர் அடாப்டருடன் இந்த சாதனம் வரும் என தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Ipad Mini 6 Specification Leaked Online: Expected Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X