ஆப்பிள் ஐபேட் வெடித்து மருத்துவமனையில் 3 பேர் அனுமதி.!
உலக முன்னணி பிராண்ட்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் தயாரிப்புகளுக்கென்றே தனி வாடிக்கையாளர் கூட்டம் இருக்கிறது. ஆப்பிள் இன் தயாரிப்புகள் உலக அளவில் புகழ்பெற்றுள்ளதற்கு முக்கிய காரணம் அதன் தர
உலக முன்னணி பிராண்ட்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் தயாரிப்புகளுக்கென்றே தனி வாடிக்கையாளர் கூட்டம் இருக்கிறது. ஆப்பிள் இன் தயாரிப்புகள் உலக அளவில் புகழ்பெற்றுள்ளதற்கு முக்கிய காரணம் அதன் தரம் மற்றும் செயல்திறன் தான்.

நேற்று ஆம்ஸ்டர்டம் இல் உள்ள ஒரு ஆப்பிள் ஸ்டோர் இல் ஐபேட் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிள் ஐபேட் வெடித்ததற்குக் காரணம் பேட்டரி லீக்கேஜ் அல்லது அதிக சூடானதினால் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த எதிர்பாராத சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. ஆனால் ஆப்பிள் ஸ்டோர் இல் இருந்த
மூன்று நபர்களுக்கு மட்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது
ஆப்பிள் ஐபேட் வெடித்தவுடன் ஆப்பிள் ஸ்டோர் இல் வேலை பார்க்கும் நபர்கள் வெடித்த ஐபேட் ஐ மணல் வாளியில் போட்டுவிட்டனர். இருப்பினும் வெடித்த ஐபேட் இல் இருந்து வெளிவந்த நஞ்சு புகை அங்கு இருந்து மூன்று பேரையும் பாதித்துள்ளது.
ஆம்ஸ்டர்டம் தீயணைப்பு படை விரைந்து வந்து நிலையைச் சரிசெய்தது. பின்பு ஆப்பிள் ஸ்டோர் 3 மணி போல் மக்களின் பயனிற்கு திறக்கப்பட்டது.
இதற்கு முன்பு இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் சூரிச் ஆப்பிள் ஸ்டோர் இல் ஆப்பிள் ஐபோன் பேட்டரி அதிக சூட்டினால் வெடித்து அங்கு வேலை பார்க்கும் ரிப்பேர்மேன் தீ காயங்கள் அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications