iPhone பயனர்களுக்கு குட் நியூஸ்.. iOS 27 அப்டேட் வெளியீடு.. என்னென்ன புதிய அம்சங்கள்? இதோ முழு விவரம்..
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐஒஎஸ் 27 (iOS 27) மென்பொருள் அப்டேட்டை இன்று, செப்டம்பர் 14ஆம் தேதி, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் வெளியிட உள்ளது. WWDC 2026 நிகழ்ச்சியில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட iOS 27, இதுவரை டெவலப்பர் மற்றும் பொது பயனர்களுக்கான பல பீட்டா பதிப்புகள் மூலம் சோதிக்கப்பட்டது. பின்பு கடந்த வாரம் நடைபெற்ற Surprise and Shine நிகழ்ச்சியில் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் மற்றும் ஐபோன் டியோ ஆகியவை ஐஒஎஸ் 27 உடன் நேரடியாக விற்பனைக்கு வரும் முதல் ஐபோன்களாக இருக்கும் என்று ஆப்பிள் தெரிவித்தது.
ஐஒஎஸ் 27 அப்டேட்டில் பல புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ஆப்பிளின் ஃபவுண்டேஷன் மாடல்கள் (Foundation Models) மற்றும் கூகுள் ஜெமினி (Google Gemini) தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேம்படுத்தப்பட்ட சிரி (Siri) அறிமுகமாகிறது.

இதனுடன் புதிய லிக்விட் கிளாஸ் (Liquid Glass) வடிவமைப்பு, விஷுவல் இன்டலிஜென்ஸ் (Visual Intelligence) அம்சத்தில் மேம்பாடுகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் புதிய பேரண்டல் கண்ட்ரோல் ( Parental Controls) வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய மாற்றங்கள் ஐபோன் பயன்பாட்டை மேலும் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஒஎஸ் 27 அப்டேட் இன்று அமெரிக்க பசிபிக் நேரப்படி காலை 10 மணியளவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்திய நேரப்படி இரவு சுமார் 10:30 மணிக்கு ஐஒஎஸ் 27 அப்டேட் கிடைக்க வாய்ப்புள்ளது.
புதிய ஐஒஎஸ் 27 அப்டேட், ஆதரவு வழங்கப்படும் ஐபோன் மாடல்களுக்கு OTA (Over-the-Air) முறையில் நேரடியாகக் கிடைக்கும். இதனால் பயனர்கள் தங்களது ஐபோனிலேயே மென்பொருள் அப்டேட்டை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம். அப்டேட் வெளியாகும் நேரத்தில், Settings பகுதியில் உள்ள Software Update வசதி மூலம் புதிய iOS 27 பதிப்பு வந்துள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம்.
ஐஒஎஸ் 27 அப்டேட் கிடைத்தவுடன், ஐபோனில் அதை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்வதற்கான வசதி தோன்றும். அப்டேட்டை தொடங்கும் முன் முக்கியமான தரவுகளை பேக்கப் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. மேலும், ஐபோனில் போதுமான பேட்டரி இருப்பதையோ அல்லது சார்ஜரில் இணைக்கப்பட்டிருப்பதையோ உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஐஒஎஸ் 27 அப்டேட் ஐபோன் 11 மற்றும் அதற்கு அடுத்த மாடல்களுக்கு கிடைக்கும். இதனுடன் இரண்டாம் தலைமுறை மற்றும் மூன்றாம் தலைமுறை ஐபோன் எஸ்இ (iPhone SE) மாடல்களும் புதிய அப்டேட்டை பெறுகின்றன. குறிப்பாக ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ், ஐபோன் டியோ ஆகியவை ஐஒஎஸ் 27 உடன் விற்பனைக்கு வரும். இப்போது இந்த புதிய அப்டேட் பெறும் போன்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
ஐஒஎஸ் 27 அப்டேட் பெறும் போன்களின் பட்டியல்
ஐபோன் 18 சீரிஸ்
ஐபோன் டியோ
ஐபோன் 17 சீரிஸ்
ஐபோன் 16 சீரிஸ்
ஐபோன் 15 சீரிஸ்
ஐபோன் 14 சீரிஸ்
ஐபோன் 13 சீரிஸ்
ஐபோன் 12 சீரிஸ்
ஐபோன் 11 சீரிஸ்
ஐபோன் எஸ்இ (3rd generation, 2022)
ஐபோன் எஸ்இ (2nd generation, 2020)
ஐஒஎஸ் 27 முக்கிய அம்சங்கள்
ஐஒஎஸ் 27-ல் புதிய ஏஐ வசதிகளுடன் சிரி (Siri) மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகத் தனியாக Siri செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் Siri-யுடன் உரையாடவும், பழைய உரையாடல்களை மீண்டும் பார்க்கவும் முடியும். புதிய Siri ஆனது ஆப்பிளின் Foundation Models மற்றும் Google Gemini AI தொழில்நுட்பத்தை இணைத்துச் செயல்படுகிறது. மேலும், Personal Context வசதி மூலம் பல்வேறு செயலிகளில் உள்ள தகவல்களைப் புரிந்துகொண்டு, தேவையான பணிகளை Siri செய்து தரும்.
ஐஒஎஸ் 27-ல் விஷுவல் இன்டலிஜென்ஸ் (Visual Intelligence) வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஐபோன் கேமரா மூலம் பொருட்கள் மற்றும் சுற்றுப்புற காட்சிகளை ஸ்கேன் செய்து தகவல்களை தெரிந்துகொள்ளலாம். மேலும், திரையில் உள்ள தகவல்களையும் இந்த வசதி பகுப்பாய்வு செய்யும்.

லிக்விட் கிளாஸ் (Liquid Glass) வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் திரையின் வெளிப்படைத்தன்மையை பயனர்கள் தங்களுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளலாம்.
ஐஒஎஸ் 27-ல் பெற்றோர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் பல மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஆஸ்க் டு பை( Ask to Buy), Ask to Browse, Contact Approvals, Time Allowances மற்றும் Schedule போன்ற புதிய கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் ஐபோன் செயலிக்கு புதிய வடிவமைப்பு, Messages மற்றும் Mail செயலிகளில் தேவைக்கேற்ற பரிந்துரைகள், Safari-ல் தலைப்புகளுக்கு ஏற்ப Tab-களை ஒழுங்குபடுத்தும் வசதி ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications
