இதத்தான் ராத்திரி பூரா உக்காந்து ஒட்டுனீங்களா? Android-ஐ காப்பி அடித்து iOS 26-ல் சேர்க்கப்பட்ட 5 அம்சங்கள்!
ஐபோன் யூசர்கள் அனைவரும் "ஆஹா.. ஓஹோ!" என்று சில்லறைகளை சிதற விடும் அளவிற்கு.. ஆப்பிள் (Apple) நிறுவனமானது, பல புதிய அம்சங்களுடன், அதன் லேட்டஸ்ட் ஐஓஎஸ் 26 அப்டேட்டை (iOS 26 Update) அறிமுகம் செய்துள்ளது. ஆனால் நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு யூசர் (Android User) ஆக இருந்தால் "இதுக்கு முன்ன இதை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே" என்று டக்கென்று கண்டுபிடித்து விடுவீர்கள்!
ஆம்! ஆப்பிளின் புதிய ஐஓஎஸ் 26 அப்டேட் வழியாக வரும் சில அம்சங்கள் ஆனது - ஐபோன்களுக்கும் மற்றும் ஐபோன் யூசர்களுக்கும் வேண்டுமானால் முற்றிலும் புதியதாக இருக்கலாம். ஆனால் ஆண்ட்ராய்டு டிவைஸ்களுக்கும், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அவைகள் ஏற்கனவே பழக்கப்பட்ட அம்சங்களாகவே உள்ளன.

அதாவது புதிய வடிவமைப்பு, புதிய அம்சங்கள் மற்றும் புதிய மேம்படுத்தல்கள் என ஆப்பிளின் புதிய ஐஓஎஸ் 26 அப்டேட் ஆனது ஐபோன் பயனர்களுக்கு நம்பிக்கைக்குரியதாக தோன்றினாலும், ஆண்ட்ராய்டு அடிப்படையிலான டிவைஸ்களில் நாம் ஏற்கனவே பார்த்த சில அம்சங்கள் ஐஓஎஸ் 26 இல் உள்ளன (Android-like Features in Apple iOS 26). அதென்ன அம்சங்கள்?
1. விஷூவல் இன்டெலிஜென்ஸ் ஆன் ஸ்க்ரீன் சேர்ச் (Visual Intelligence on-screen search): ஐஓஎஸ் 26 வழியாக ஆப்பிள் அதன் விஷூவல் இன்டெலிஜென்ஸ் திறன்களை மேம்படுத்தியுள்ளது. இப்போது ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை கொண்டுள்ள பயனர்கள் எந்தவொரு ஆப்பிலும் தாங்கள் பார்க்கும் எதையும் ஒரு ஸ்கிரீன்ஷாட் எடுப்பதன் மூலம் அதன் சேர்ச் செய்யலாம். இந்த அம்சம் பல ஆண்டுகளாக கூகுள் லென்ஸ் (Google Lens) வழியாக ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் கிடைக்கிறது.
2. கால் ஸ்க்ரீனிங் (Call Screening): ஐஓஎஸ் 26 வழியாக ஆப்பிள் அறிமுகப்படுத்திய மற்றொரு ஆண்ட்ராய்டு அம்சம் - அழைப்பிற்கான காரணம் போன்ற தகவல்களை பிரித்தெடுக்க, பயனரின் சார்பாக தெரியாத எண்களுக்கு பதிலளிக்கும் கால் ஸ்க்ரீனிங் அம்சம் ஆகும். இந்த தகவல் லாக் ஸ்க்ரீனில் காட்டப்படும், இது பயனர் அழைப்பை எடுக்க விரும்புகிறீர்களா அல்லது புறக்கணிக்க விரும்புகிறீர்களா என்பதை தீர்மானிக்க அனுமதிக்கிறது. இந்த அம்சம் ஏற்கனவே பிக்சல் போன்களில் கிடைக்கிறது. இது கூகுள் அசிஸ்டென்ட்டால் (Google Assistant) இயக்கப்படுகின்றன.
3. ஹோல்ட் அசிஸ்ட் (Hold Assist): இந்த அம்சம் பிக்சலின் "ஹோல்ட் ஃபார் மீ" (Hold For Me) அம்சத்தை ஒத்திருக்கிறது. இந்த அம்சம் ஹோல்ட் ம்யூசிக் மற்றும் நியூஸ்களை அங்கீகரித்து, ஒரு முகவர் அல்லது நபர் அழைப்பை எடுக்கும்போது அதை பயனருக்கு அறிவிக்கிறது. ஆப்பிள் இதை ஐஓஎஸ் 26 வழியாக "ஹோல்ட் அசிஸ்ட்" என்கிற பெயரின் கீழ் கொண்டுவந்துள்ளது. இது ஐபோன் பயனர்களை சலிப்பூட்டும் ஹோல்ட் ம்யூசிக் மற்றும் ப்ரீ ரெகார்ட்டட் மெசேஜ்களிலிருந்து காப்பாற்றும்.
4. லைவ் டிரான்ஸ்லேஷன் (Live Translation): கூகுள் சில காலமாக நேரடி மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்கி வருகிறது. இது டெக்ஸ்ட் மற்றும் வாய்ஸ்-ஐ மொழிபெயர்க்க உதவுகிறது. இப்போது, ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் இன்டெலிஜென்ஸை அறிமுகப்படுத்திய ஒரு வருடத்திற்கு பிறகு - மெசேஜ்கள், ஃபேஸ்டைம் மற்றும் போன் ஆப்பிற்கு லைவ் டிரான்ஸ்லேஷன் அம்சத்தை, பல மொழிகளில் கொண்டு வந்துள்ளது.
5. விசிடட் பிளேசஸ் ஆன் மேப்ஸ் (Visited places on Maps): ஐஓஎஸ் 26 வழியாக ஆப்பிள் மேப்ஸில் இப்போது "விசிடட் பிளேசஸ்" எனப்படும் புதிய டூல் சேர்க்கப்பட்டுள்ளது. இது பயனர்கள் தாங்கள் பார்வையிட்ட இடங்களின் பட்டியலை கொண்டிருக்கும். இந்த அம்சம் கூகுள் மேப்ஸ் டைம்லைன்-ஐ போன்றது. இது பயனர்கள் அடிக்கடி பார்வையிடும் இடங்களை ஒரே இடத்தில் அணுக உதவுகிறது.


Click it and Unblock the Notifications








