iPhone வைத்து இருக்கும் இந்தியர்கள் தலையில் இடியை இறக்கிய Tim Cook.. iOS 18.1 அப்டேட் கேட்டது ஒரு குற்றமா?
ஆப்பிள் (Apple) நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும், ஏஐ அம்சங்கள் உடனான ஐஓஎஸ் 18.1 அப்டேட் (iOS 18.1 Update) ஆனது சரியாக எந்த தேதியில் வெளிவரும் என்கிற தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இது எப்போது ரோல் அவுட் ஆகும்? இதற்கு எவ்வளவு ஸ்டோரேஜ் தேவைப்படும்? முதலில் எந்தெந்த நாடுகளில் வெளிவரும்? அந்த பட்டியலில் இந்தியா உள்ளதா? ஐஓஎஸ் 18.1 அப்டேட்டில் என்னென்ன முக்கிய அம்சங்களை உள்ளன? இந்த அப்டேட் எந்தெந்த ஐபோன்கள், ஐபேட்கள் மாற்று மேக்களுக்கு கிடைக்கும்? இதோ விவரங்கள்:
ஐஓஎஸ் 18.1 அப்டேட் எப்போது வெளியாகும்? ப்ளூம்பெர்க்கின் சமீபத்திய அறிக்கையானது, ஆப்பிள் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஐஓஎஸ் 18.1 அப்டேட்டை வருகிற அக்டோபர் 28 அன்று வெளியிடும் என்று கூறுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஐபோன் பயனர்கள் புதிய அப்டேட்டிற்கான அலெர்ட் பாப்-அப்பை மேற்க்குறிப்பிட்ட தேதியில் பார்க்கக்கூடும்.

ஐஓஎஸ் 18.1 அப்டேட்டில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம்பெறும்? இந்த அப்டேட்டில் மேம்படுத்தப்பட்ட போட்டோ சேர்ச் திறன்கள், மிகவும் உள்ளுணர்வு மிக்க சிரி, மேம்படுத்தப்பட்ட ரைட்டிங் டூல்ஸ் மற்றும் இமேஜ் பிளேகிரவுண்ட் மற்றும் ஜென்மோஜி போன்ற ஆக்கப்பூர்வமான அம்சங்கள் உள்ளன. ஆப்பிள் இன்டெலிஜென்ஸின் மற்ற முக்கிய அம்சங்களில் - மேம்படுத்தப்பட்ட போட்டோஸ் ஆப், நோட்டிபிக்கேஷன் சம்மரீஸ், ப்ரையாரிட்டி மெசேஜஸ் இந்த மெயில், ஸ்மார்ட் ரிப்ளைஸ் மற்றும் பலவற்றை கூறலாம்.
ஐஓஎஸ் 18.1 அப்டேட்டிற்கு எவ்வளவு ஸ்டோரேஜ் தேவைப்படும்? லேட்டஸ்ட் ஐஓஎஸ் 18.1 டெவலப்பர் பீட்டா 5 அப்டேட் ஆனது, மேற்கண்ட அம்சங்களை பெற (அதாவது இந்த அப்டேட்டை பெற) உங்கள் டிவைஸில் எவ்வளவு ஸ்டோரேஜ் தேவைப்படும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி தகுதியான ஐபோன் மாடல்களில் 4ஜிபி ஸ்டோரேஜ் தேவை. அதாவது ஒரு பயனர் இணக்கமான ஐபோனில் ஆப்பிள் ஏஐஅம்சங்களை அணுக விரும்பினால், அந்த டிவைஸில் இந்த அம்சங்களை இயக்க 4ஜிபி கிடைக்க வேண்டும்.
முதலில் எந்தெந்த நாடுகளுக்கு ஐஓஎஸ் 18.1 அப்டேட் வரும்? முதல் கட்டமாக ஆப்பிளின் ஐஓஎஸ் 18.1 அப்டேட் ஆனது அமெரிக்காவிற்கு வருகிறது. அதனை தொடர்ந்து நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எப்போது ஐஓஎஸ் 18.1 அப்டேட் வெளியாகும்? மேற்கண்ட நாடுகளில் இந்த 2024 ஆம் ஆண்டிற்குள் வெளியான பின்னர், ஏஐ அம்சங்கள் உடனான ஆப்பிளின் ஐஓஎஸ் 18.1 அப்டேட் ஆனது இந்தியா உட்பட பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் அடுத்த ஆண்டு (அதாவது 2025 ஆம் ஆண்டு) தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த ஐபோன்கள் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களை பெற தகுதியான மாடல்கள் ஆகும்? புதிதாக அறிமுகமான ஐபோன் 16 சீரீஸின் கீழ் உள்ள எல்லா மாடல்களுமே (ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்) ஐஓஎஸ் 18.1 அப்டேட்டை பெறும். இதேபோல் கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவைகளும் ஆப்பிள் ஏஐ அம்சங்களை பெறும்.
ஒருவேளை உங்களிடம் ஆப்பிள் ஐபேட் அல்லது மேக் இருந்தால், அவைங்கள் எம் சீரீஸ் ஆப்பிள் சிலிக்கான் இருந்தால், அவைகள் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-க்கு தகுதி பெறும். 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட, ஆப்பிள் சிலிகான் கொண்டு இயங்கும் முதல் மேக்புக் ஏர் எம்1 (MacBook Air M1) மாடலும் இந்த பட்டியலில் அடங்கும் மற்றும் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபேட் ப்ரோ எம்1 (iPad Pro M1) மாடலும் கூட ஆப்பிள் ஏஐ அம்சங்களை பெறும்.


Click it and Unblock the Notifications








