Home
News

புதிய ஐஓஎஸ் அப்டேட்டினால் இப்படி ஒரு பிரச்சனையா? பயனர்கள் புகார்.!

ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் சாதனங்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.

 ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் புதிய

மேலும் ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் புதிய ஐஓஎஸ்15.4 அப்டேட்-ஐ ஐபோன் 13, ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்,ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் Xs, ஐபோன் Xs Max, ஐபோன் Xr, ஐபோன் எக்ஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ்,ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 6s, ஐபோன் 6s பிளஸ், ஐபோன் எஸ்இ, ஐபாட் டச் போன்ற சாதனங்களுக்கு வழங்கியுள்ளது.

 புதிய அப்டேட்-இல் மாஸ்க் போட்டிருந்தாலும்

இந்த புதிய அப்டேட்-இல் மாஸ்க் போட்டிருந்தாலும் கூட ஃபேஸ் ஐடியை பயன்படுத்தி ஐபோனை அன்லாக் செய்யும் அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த புதிய அப்டேட்-ல் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ள இந்த

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ள இந்த ஐஓஎஸ்15.4 அப்டேட்-இல் பல பிரச்சனைகள் இருப்பதாக ஐபோன் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த அப்டேட்டிற்கு பிறகு பேட்டரி சார்ஜ் விரைவாக குறைவதாக தெரிவித்துள்ளனர்.

பாக பயனர்கள் போனை 97 சதவீதம்

குறிப்பாக பயனர்கள் போனை 97 சதவீதம் வரை சார்ஜ் செய்த பின்பு, சார்ஜிலிருந்து எடுத்தால் பேட்டரி 100 சதவீதம் காட்டுவதாகவும், மேலும் 5
நமிடத்திறகு பிறகு அல்லது போனை ரீ-ஸ்டார்ட் செய்தவுடனேயே பேட்டரி திறன் குறைந்து விடுவதாக தெரிவித்துள்ளனர். இதுதவிர சிலருக்கு பேட்டரிவெறும் 10 நிமிடத்தில் 5 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த புகார்களுக்கு ஆப்பிள் நிறுவனம் இதுவரை விளக்கம்
ஏதும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 மாடலை அ

அதேபோல் சமீபத்தில் ஆப்பிள் ஐபோன் எஸ்இ மாடலை அறிமுகம் செய்யப்பட்டது. 2020-ல் அறிமுகம் செய்யப்பட்ட சிறிய ஐபோன் மாடலின் சமீபத்திய பதிப்பாக இது இருக்கிறது. ஆனால் முந்தைய சாதனத்தில் பயன்படுத்தப்பட்ட ஏ13 பயோனிக் சிப்செட்டிற்கு பதிலாக இதில் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் 5ஜி ஆதரவோடு வருகிறது

ஐபோன் எஸ்இ 5ஜி பி

ஐபோன் எஸ்இ 5ஜி பின்புறத்தில் 12 எம்பி கேமரா சென்சார் உடன் வருகிறது. புகைப்பட அம்சங்களை பொறுத்தவரையில், இது ஸ்மார்ட் எச்டிஆர் 4, டீப் ஃப்யூஷன் மற்றும் போர்ட்ரெய்ட் பயன்முறை போன்ற ஐபோன் 13 கேமரா அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய ஐபோன் எஸ்இ 5ஜி ஆனது ஐஓஎஸ் 15 மூலம் இயக்கப்படுகிறது. மேலும் பல வருடங்களுக்கு புதுப்பிப்புகள் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. புதிய ஆப்பிள் ஐபோன் எஸ்இ ஆனது ஐபோன் 12-ல் அறிமுகம் செய்யப்பட்ட செராமிக் ஷீல்ட் பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இது அலுமினியம் மற்றும் கண்ணாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் பொருத்தப்பட்ட 12 எம்பி சென்சார் உடன் இது வருகிறது. இது நீர் மற்றும் தூசி எதிர்ப்புக்கான ஐபி67 மதிப்பீடு உடன் இது வருகிறது.

ஆப்பிள் ஐபோன் எஸ்இ ஆ

ஆப்பிள் ஐபோன் எஸ்இ ஆனது ஸ்டார்லைட், மிட்நைட் மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மூன்று சேமிப்பக கட்டமைப்புகளில் கிடைக்கிறது. இதன் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.43,900 ஆகவும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.48,900 ஆகவும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.58,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 ஐபோன் எஸ்இ 2022 ஆனது 1334 x 750

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 ஆனது 1334 x 750 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 625 cd/m2 அதிகபட்ச பிரகாசம் கொண்ட 4.7-இன்ச் எச்டி ரெடினா ஐபிஎஸ் டிஸ்ப்ளே உடன் வெளியிடப்பட்டது. ஹூட்டின் கீழ் இந்த சாதனம் 16 கோர் நியூரல் எஞ்சிந் மற்றும் 64 பிட் கட்டமைப்புடன் 5 என்எம் செயல்முறை அடிப்படையிலான ஏ15 பயோனிக் சிப்செட்டை கொண்டுள்ளது. இந்த சாதனம் ஐஓஎஸ் 15 மூலம் இயக்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 ஆனது இரட்டை சிம் ஆதரவுடன் வருகிறது. இரண்டாவது சிம் இசிம் ஆகும். ட்ரூ டோன் ஃப்ளாஷ், 60 எஃப்பிஎஸ் இல் 4கே வீடியோ பதிவு, ஓஐஎஸ் மற்றும் 240 எஃப்பிஎஸ் மூலம் முழு எச்டி 1080 பிக்ச்ல வீடியோ பயன்முறை ஆதரவைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் ஒற்றை 12 எம்பி வைட் ஆங்கிள் கேமரா சென்சார் உடன் வருகிறது. முன்பக்கத்தில் முழு எச்டி 1080 பிக்சல் வீடியோ பதிவுடன் கூடிய 7 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 சாதனத்தின் பிற அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டச் ஐடி கைரேகை ஸ்கேனர், 5ஜி, எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.0, ரீடர் பயன்முறையுடன் கூடிய என்எஃப்சி மற்றும் ஜிபிஎஸ் இணைப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. இது உள்ளமைக்கப்பட்ட லி அயன் பேட்டரி ஆதரவோடு வருகிறது. இது 15 மணிநேரம் வரையிலான வீடியோ ப்ளேபேக் அம்சத்தை கொண்டுள்ளது

Best Mobiles in India

English summary
iOS 15.4 update causing problems with the battery: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X