Home
News

இந்தியவிற்கான அம்சம், 100 வகை இமோஜிக்கள் உடன் ஐஓஎஸ் 10.2 ரிலீஸ் ஆனது.!

இந்த அப்டேட்தனை எப்படி பெறுவது...? இந்த ஐஓஎஸ் 10.2 எந்தெந்த ஆப்பிள் கருவிகளுக்கு கிடைக்கும்..? எஸ்ஓஎஸ் அல்லது பேனிக் பட்டனை எப்படி நிறுவுவது..? போன்ற உங்களின் பல கேள்விகளுக்கு பதில் தான் - இந்த தொகுப்

By Muthuraj

ஐஓஎஸ் 10.2, மிகவும் குறிப்பிடத்தக்க எஸ்ஓஎஸ் அல்லது பேனிக் பொத்தான் கொண்டு வெளியாகியுள்ளது. அரசாங்கத்தின் புதிய ஆணையை தொடர்ந்து முதல் முறையாக இந்த மேம்படுத்தல் இந்தியாவிற்காகவே நிகழ்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக, ஐஓஎஸ் 10.2 ஆனது 100 புதிய ஈமோஜிகள், ஐமெஸேஜ் அம்சங்கள், புதிய டிவி ஆப், மற்றும் மேம்பட்ட கேமரா அம்சங்கள் உள்ளிட்ட பிற முன்னேற்றங்களையும் வழங்குகிறது.

இந்த அப்டேட்தனை எப்படி பெறுவது...? இந்த ஐஓஎஸ் 10.2 எந்தெந்த ஆப்பிள் கருவிகளுக்கு கிடைக்கும்..? எஸ்ஓஎஸ் அல்லது பேனிக் பட்டனை எப்படி நிறுவுவது..? போன்ற உங்களின் பல கேள்விகளுக்கு பதில் தான் - இந்த தொகுப்பு.!

எந்தெந்த ஆப்பிள் கருவிகளுக்கு.?

எந்தெந்த ஆப்பிள் கருவிகளுக்கு.?

இந்த மேம்படுத்தல் ஆனது ஐபோன் 5 மற்றும் அதற்கு பிந்தைய சாதனங்கள், ஐபாட் நான்காம் தலைமுறை மற்றும் அதற்கு பின்னர் வெளியான சாதனங்கள், மற்றும் ஐபாட் டச் 6வது தலைமுறை மற்றும் அதற்கு பின்னர் வெளியான ஆப்பிள் சாதனங்களில் கிடைக்கப்பெறும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டவுண்லோட், இன்ஸ்டால்

டவுண்லோட், இன்ஸ்டால்

இந்த புதிய மேம்படுத்தல் பெற செட்டிங்ஸ்> ஜெனரல் > சாப்ட்வேர் அப்டேட் சென்று டவுண்லோட் செய்து மேம்படுத்தலை நிறுவிக்கொள்ளலாம். அல்லது நீங்கள் இதை ஐட்யூன் மூலமாகவும் இதை நிகழ்த்தலாம்.

செயல்முறை#01

செயல்முறை#01

அதை நிகழ்த்த முதலில் ஐடியூன்ஸ் நிறுவவும், பின்னர் உங்கள் பிசி அல்லது மேக் கருவியில் உங்கள் ஐஓஎஸ் சாதனத்தை இணைக்கவும். பின்னர் டாப் பாரில் இருந்து உங்கள் சாதனத்தின் ஐகானை கிளிக் செய்யவும். பின்னர் செக் பார் அப்டேட் கிளிக் செய்து அடுத்ததாக டவுண்லோட் கிளிக் செய்யவும்.

செயல்முறை#02

செயல்முறை#02

இந்த கட்டத்தில், நீங்கள் ஐஓஎஸ் 10.2 நிறுவ எளிய திரை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். புதுப்பிக்க முயற்சி செய்யும் போது நீங்கள் குறைந்தது 50 சதவீதம் பேட்டரியை கருவிகளில் கொண்டிருக்க வேண்டும் மற்றும் ஒரு வலுவான வைஃபை இணைப்பும் வேண்டும். முக்கியமாக அப்டேட் செய்வதற்கு முன்பு உங்கள் கருவியில் பேக்-அப் நிகழ்த்த மறக்க வேண்டாம்.

எஸ்ஓஎஸ்

எஸ்ஓஎஸ்

மேம்படுத்தலுக்கு பிறகு, எஸ்ஓஎஸ் விருப்பத்தை நீங்கள் செட்டிங்ஸ்-ல் காணலாம். இந்த அம்சத்தை வழங்கப்பட்டுள்ள ஆப்ஷன்கள் மூலம் நீங்கள் அதை பெர்சனலைஸ் செய்து கொள்ளலாம். அதாவது ஒரு எமெர்ஜென்சி கால் நிகழ்த்த எத்தனை முறை பவர் பொத்தானை அழுத்த வேண்டும், டீபால்ட் எண்ணை தவிர்த்து பிற எண்களை ஆட் செய்து கொள்வது போன்றவைகளை நிகழ்த்திக்கொள்ளலாம்.

100 புதிய யுனிகோட் 9.0 ஈமோஜிகள்

100 புதிய யுனிகோட் 9.0 ஈமோஜிகள்

மேற்குறிப்பிட்டவைகளை தவிர்த்து பெரிய மாற்றமாக பல்வேறு தொழில்கள், விளையாட்டு, விலங்குகள், மற்றும் உணவுகள் பிரதிநிதித்துவம் கொண்ட 100 புதிய யுனிகோட் 9.0 ஈமோஜிகள் இந்த அப்டேட்டில் வழங்கப்படுகிறது. தவிர வேறுபட்ட கதாபாத்திரங்கள் மற்றும் முகபாவனைகள் போன்ற வெளிப்பாடுகள் மற்றும் விரல்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டிவி ஆப்

டிவி ஆப்

கூடுதலாக இப்போது ஒரு புதிய டிவி ஆப் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க பயனர்களுக்கு மட்டும் என்பதும் இதன் மூலம் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிரீமியம் உள்ளடக்கம் மற்றும் ஸ்ட்ரீமிங் ஆகியவைகளை ஆப் மூலம் நிகழ்த்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐமெஸேஜ்

ஐமெஸேஜ்

இந்த அப்டேட்டில் ஐமெஸேஜ் முழு ஸ்க்ரீன் எபெக்ட் கொண்ட புதிய காதல் மற்றும் கொண்டாட்டம் சென்ட் அம்சம் பெறுகிறது. ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் பயனர்களுக்கு இந்த மேம்படுத்தலின் புதிய வால்பேப்பர்கள் கிடைக்கும்.

கேமிரா ஆப்

கேமிரா ஆப்

கேமிரா துறையிலும் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன, கடைசியாக கேமிரா ஆப்பில் நீங்கள் பயன்படுத்திய மோட் ஆனது வைக்கப்படும். நீங்கள் ஒவ்வொரு முறையும் ஆப்பினுள் நுழையும் போது மோட்தனை செட் செய்ய வேண்டிய வேலை இனி கிடையாது. இறுதியாக, பல தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் திருத்தங்களும் இந்த மேம்படுத்தலில் ஒரு பகுதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அப்பாடா.. ஆர்வமுடன் எதிர்பார்த்த ஐபோன் 8 லீக்ஸ் தகவல்கள், வெளியானது.!

Best Mobiles in India

English summary
iOS 10.2 Released, Brings India-Specific SOS Button, 100 New Emojis, and More. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X