Home
News

100 ரூபாய்க்கு தங்கம் வாங்கினால் இலவச தங்கம்.. மக்களை ஈர்க்கும் புது Mobile ஆப்ஸ்.. எப்படி தங்கம் வாங்குவது?

என்னங்க சொல்றீங்க வெறும் 100 ரூபாய்க்கு தங்கம் (Gold for Rs 100) வாங்க முடியுமா? வெறும் 100 ரூபாய்க்கு தங்கம் வாங்கினாலும் (Buy gold for Rs 100 and get free gold) கூடவே இலவச தங்கமும் கிடைக்குமா? இது நிஜமா இல்லை கனவா? என்று சந்தேகத்துடன் நிறைய கேள்விகளை அடுக்கடுக்காக முன்வைக்கும் உங்களுக்கு இந்த செய்தி நம்ப முடியாத மகிழ்ச்சியை வழங்கப்போகிறது என்பதில் துளியளவு கூட சந்தேகமே இல்லை.

காரணம், இந்த கேள்விகள் அனைத்திற்கும் "ஆம் இது உண்மை தான்.. உண்மையை தவிர வேறெதுவும் இல்லை" என்ற பதில் மட்டுமே உண்மையானது என்று கூறும் அளவிற்கு இந்த தகவல் நிஜமானது மக்களே. இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளபடி நீங்கள் ரூ.100-க்கு தங்கம் வாங்கினால், இலவச தங்கத்தையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலையில் எப்படி தங்கம் வாங்குவது என்று பார்க்கலாம்.

100 ரூபாய்க்கு தங்கம் வாங்கினால் இலவச தங்கம்.. புது Mobile ஆப்ஸ்..

பாரத்பே (BharatPe) என்ற நிறுவனம் இந்திய ஃபின்டெக் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நிலைமையில் உள்ள ஒரு முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் இப்போது 'இன்வெஸ்ட் பாரத்பே' (Invest BharatPe) என்ற புதிய மொபைல் ஆப்ஸ் செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதுவொரு இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஸாக செயல்படுகிறது. இந்த புதிய ஆப்ஸ் இந்தியா மக்களிடையே முதலீட்டுத் துறையில் ஒரு பெரிய நகர்வை மேற்கொண்டுள்ளது.

இந்த புதிய இன்வெஸ்ட் பாரத்பே மொபைல் ஆப்ஸ் (Invest BharatPe Mobile Apps) இப்போது ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) ஆகிய இரண்டு தளங்களிலும் பயன்படுத்த கிடைக்கிறது. கூகிள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) ஆகிய இடங்களில் Invest BharatPe என்று டைப் செய்து சர்ச் செய்தால், இந்த ஆப்ஸ் உங்களுக்கு நேரடியாக காண்பிக்கப்படுகிறது.

இந்த Invest BharatPe மொபைல் ஆப்ஸ் மூலம் இப்போது நீங்கள் டிஜிட்டல் கோல்டு வாங்கலாம். டிஜிட்டல் கோல்டு (Digital gold) என்பது, ஆன்லைன் தங்கமாகும் (online gold). இதை நீங்கள் டிஜிட்டல் தங்கமாக வாங்கி, தங்கத்தின் விலை மாறும் பொழுது டிஜிட்டல் தங்கமாகவே விற்பனை செய்து லாபத்தை (profit) பார்க்க முடியும். மற்றொரு புறம் இது எளிமையான முதலீடாக அமைகிறது. காரணம், இந்த தளத்தில் நீங்கள் வெறும் 100 ரூபாய்க்கு கூட தங்கம் (100 rupees gold) வாங்க முடியும்.

இந்த மொபைல் ஆப்ஸ் மூலம் யார் வேண்டுமானாலும் தங்கம் வாங்கலாம். இங்கு வாங்கும் தங்கம் 100 சதவீதம் தூய்மையான (100% pure), 24K டிஜிட்டல் தங்கம் (24K digital gold) என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் 100 ரூபாய் முதல் தங்கம் வாங்கி, உங்கள் இன்வெஸ்ட் பாரத்பே லாக்கரில் நீங்கள் சேமித்து வைத்துக்கொள்ளலாம். குறுகிய காலத்திற்கு மட்டும், இப்போது டிஜிட்டல் கோல்டு வாங்கும் ஒவ்வொரு பர்சேஸிற்கும் பாரத்பே நிறுவனம் 1.1 சதவீத தங்கத்தை இலவசமாக (Free gold with every digital gold purchase) வழங்குகிறது.

இது பண்டிகை கால சிறப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. டிஜிட்டல் கோல்டு சேஃப்கோல்டு (Safegold) கூட்டுடன் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு நீங்கள் டிஜிட்டல் கோல்டு வாங்கவும் முடியும், அதே நேரத்தில் நீங்கள் விரும்பிய நேரத்தில் உங்களிடம் இருக்கும் டிஜிட்டல் கோல்டை விற்பனை செய்யவும் (Sell digital gold) முடியும். இந்த டிஜிட்டல் கோல்டின் சிறப்பு என்னவென்றால், இதை யாரும் திருட முடியாது. இது மிகவும் பாதுகாப்பானது. முழுமையாக லாபகரமானது.

Best Mobiles in India

English summary
Invest BharatPe Free gold if you buy gold for 100 rupees New mobile app that attracts people How to buy digital gold
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X