தியாகம் : கண்டுபிடித்தவர்களையே கொன்ற கருவிகள்..!

|

எதிர்காலம் பற்றி தான் நம் அனைவர் எண்ணமும் இருக்கிறது. ஆனால் எதிர்காலம் மற்றும் நிகழ்காலம் என்ற இரண்டு காலத்தை விடவும் மிக முக்கியமானது எது தெரியுமா..? அது வேறு ஒன்றுமில்லை, முடிந்து போன காலம் தான், அதாவது வரலாறு..!

இரத்த நிலா : இயேசு மறுபிறப்பு; பூகம்பம்; பூமியின் அழிவு..?!

வரலாறு என்பது மிகவும் சிறப்பான ஒன்று அதில் இடம் பிடிப்பது என்பது சாதாரான விடயம் இல்லை. அப்படியாக 'கண்டுபிடிப்பாளன்' என்று வரலாற்றில் இடம் பிடிக்க, தன் உயிரையும் 'துச்சமென' கருதி கண்டுபிடிப்பிற்காக மற்றும் கண்டுபிடிப்பால் உயிர் விட்ட மாபெரும் கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய தொகுப்பே இது..!

சேயர் ஃப்ரீமினன்ட் (Sieur Freminet) :

சேயர் ஃப்ரீமினன்ட் (Sieur Freminet) :

1772 : மறு சுவாசக்கருவி, அதாவது நம் சுவாசத்தை மறுசுழற்சி செய்து நமக்கே தரும் கருவி. பரிசோதனையின் போது இதை கண்டுபிடித்த சேயர் ஃப்ரீமினன்ட் இறந்து போனார்..!

மாக்ஸ் வலியர் (Max Valier) :

மாக்ஸ் வலியர் (Max Valier) :

1930 : இது ஒரு லிக்யூட்-ஃபூயல்டு ராக்கெட் கார் (Liquid-Fuelled Rocket Car) ஆகும். இதை பரிசோதிக்கும் போது வெடிப்பில் இறந்து போனார் இதை உருவாக்கிய மாக்ஸ் வலியர்..!

ஹென்றி ஃப்லியஸ் (Henry Fleuss) :

ஹென்றி ஃப்லியஸ் (Henry Fleuss) :

1876 : இது ஒரு ஆக்ஸிஜன் ரீப்ரீதர் (Oxygen Rebreather) கருவி ஆகும். இதை தண்ணீருக்குள் 30 அடி ஆழத்தில் பரிசோதிக்கும் போது இறந்து போனார் ஹென்றி.

ப்ரான்ஸ் ரிச்சல்ட் (Franz Reichelt) :

ப்ரான்ஸ் ரிச்சல்ட் (Franz Reichelt) :

1912 : தான் கண்டுபிடித்த பாராசூட் ஸூட்டை (Parachute Suit) அணிந்து கொண்டு பறக்க முயற்சி செய்த போது, சூட் வேலை செய்யாமல் கீழே விழுந்து இறந்து போனார் ப்ரான்ஸ்.

வீடியோ :

ப்ரான்ஸ் ரிச்சல்ட், ஈஃபில் டவர் மேல் இருந்து குதித்து பரிசோதனை மேற்க்கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ..!

கரெல் சொசெக் (Karel Soucek) :

கரெல் சொசெக் (Karel Soucek) :

1985 : தன் கண்டுபிடிப்பான ஷாக்-அப்சார்ப்பென்ட் பேரல் (Shock-Absorbent Barrel) மூலம் உயிர் இழந்தார் கரெல்.

வில்லியம் புல்லாக் (William Bullock) :

வில்லியம் புல்லாக் (William Bullock) :

1867 : தான் உருவாக்கிய ரோட்டரி பிரிண்ட்டிங் பிரஸ் (Rotary Printing Press) கருவியின் முழு வேகத்தை பரிசோதிக்கும் போது இயந்தரத்தில் கால் சிக்கி நசுங்கி, பின் நோய் வாய்ப்பட்டு இறந்து போனார் வில்லியம்.

ஆயர்‌ல் லைக்கு (Aurel Vlaicu: ) :

ஆயர்‌ல் லைக்கு (Aurel Vlaicu: ) :

1913 : தன் ஏரோபிளேன் லைக்கு 2 (Airplane Vlaicu II) பரிசோதனை போது இறந்து போனார் ஆயர்‌ல்.

தாமஸ் மிட்ஜ்லீ (Thomas Midgley) :

தாமஸ் மிட்ஜ்லீ (Thomas Midgley) :

1944 : நோயாளிகளுக்கான சுருங்கி விரியும் ஸ்பிரிங் கட்டிலை (System of Strings and Pulleys) உருவாக்கிய தாமஸ், தன் 55-வது வயதில் அதே கட்டிலில் உள்ள கயிறு ஒன்று அவர் கழுத்தை இருக்கியதின் மூலம் உயிர் இழந்தார்.

ஹாரெஸ் லாஸன் ஹன்லே (Horace Lawson Hunley) :

ஹாரெஸ் லாஸன் ஹன்லே (Horace Lawson Hunley) :

1863 : தான் உருவாக்கிய காம்பெட் நீர்மூழ்கி (Combat Submarine) மூலம் உயிர் இழந்தார் ஹாரெஸ்.

ஓட்டோ லிலிஎந்தல் (Otto Lilienthal) :

ஓட்டோ லிலிஎந்தல் (Otto Lilienthal) :

1896 : பறக்க உதவும்படியாக ஓட்டோ உருவாக்கிய ஹாங் கிளைடர்ஸ் (Hang Gliders) மூலமே அவர் உயிர் இழந்தார்.

ஜீன்-ப்ரான்ஸ்ஸோயிஸ் பில்லட்ரே டி ரோஸீயர் (Jean-François Pilâtre de Rozier) :

ஜீன்-ப்ரான்ஸ்ஸோயிஸ் பில்லட்ரே டி ரோஸீயர் (Jean-François Pilâtre de Rozier) :

1785 : தான் கண்டுபிடித்த ரோஸீயர் பலூனில் (Rozière Balloon) ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் இழந்தார் ஜீன்-ப்ரான்ஸ்ஸோயிஸ்.

மைக்கில் டக்ரே (Michael Dacre) :

மைக்கில் டக்ரே (Michael Dacre) :

2009 : பறக்கும் டாக்ஸி கருவி (Flying Taxi Device) சோதனை ஓட்டத்தின் போது விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் உயிர் இழந்தார் மைக்கில்.

வான் ஹூ (Wan Hu) :

வான் ஹூ (Wan Hu) :

16-ஆம் நூற்றாண்டு : தான் உருவாக்கிய ராக்கெட் நாற்காலியை சோதனை செய்யும் போது இறந்துள்ளார் வான் ஹூ.

இஸ்மா இல் இப்ன் ஹம்மத் அல்-ஜவாரி (Isma'il ibn Hammad al-Jawhari) :

இஸ்மா இல் இப்ன் ஹம்மத் அல்-ஜவாரி (Isma'il ibn Hammad al-Jawhari) :

1000 -1008 இடைப்பட்ட காலம் : தான் உருவாக்கிய மரத்தால் செய்யப்பட்ட இறக்கைகளை அணிந்து கொண்டு மசூதியின் மேல் இருந்து குதித்த போது இறந்துள்ளார் அல்-ஜவாரி.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Check out here about Inventors Who were Killed by Their Own Creations. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more