ஆயுத விளம்பரங்களுக்கு செக் வைக்கும் பேஸ்புக்.!

நாங்கள் ஏற்கனவே ஆயுதங்களின் விற்பனை மற்றும் மாற்றங்கள் சம்பந்தப்பட்ட விளம்பரங்களுக்கு தடைவிதித்துள்ளோம்.

|

பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், நாங்கள் பேஸ்புக்கில் மேம்படுத்தக்கூடிய பகுதிகளை கண்டறியும் வகையில் தொடர்ந்து விதிமுறைகளை மற்றும் கொள்கைகளை மறுஆய்வு செய்துவருகிறோம். இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக பேஸ்புக்கில் வரும் ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை வெளியிடும் வழிமுறையில் சில மாற்றங்கள் செய்ய செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஆயுத விளம்பரங்களுக்கு செக் வைக்கும் பேஸ்புக்.!

நாங்கள் ஏற்கனவே ஆயுதங்களின் விற்பனை மற்றும் மாற்றங்கள் சம்பந்தப்பட்ட விளம்பரங்களுக்கு தடைவிதித்துள்ளோம். ஆனாலும் விளம்பரதாரர்கள் துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களான கண்ணாடி லென்ஸ், ப்ளாஸ் லைட், லேசர் போன்ற குறி பார்க்க உதவும் பாகங்கள் மற்றும் தோல் பொருட்கள் உள்ளிட்ட மற்ற ஆயுத உதிரிபாகங்களை விளம்பரப்படுத்த முடியும். மேலும் ஜூன்21 முதல் விளம்பரதாரர்கள்களுக்கு தங்களுடைய ஆயுத உதிரிபாகங்கள் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே சென்றடையும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்

பேஸ்புக்

பேஸ்புக் நண்பர்கள் மற்றும் பேஸ்புக் பக்கங்களின் மூலம் வரும் பதிவுகளை போலில்லாமல், விளம்பரங்கள் பணம் பெற்றுக்கொண்டு பேஸ்புக்கில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம் வெளியிடப்படும் விளம்பரங்கள் அதிக தரத்தில் உள்ளனவா என்பதையும், ஆயுத உதிரிபாகங்கள் சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே சென்றடையும் வகையிலும் கட்டுப்படுத்த முடியும்.

விதிமுறைகள்

விதிமுறைகள்

இந்த புதிய விதிமுறைகள்/கொள்கைகள் பற்றிய தகவல்களும், எவை அனுமதிக்கப்படுகின்றன, எவை அனுமதிக்கப்படுவதில்லை போன்ற தகவல்கள் எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டுள்ளன

 ஆயுத விளம்பரங்களின் கொள்கை

ஆயுத விளம்பரங்களின் கொள்கை

ஆயுதங்கள், வெடிபொருட்கள் போன்றவற்றின் பயன்பாடுகள் மற்றும் விற்பனை சம்பந்தப்பட்ட விளம்பரங்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இது ஆயுதங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் உதிரிபாகங்களுக்கும் பொருந்தும்.

எடுத்துக்காட்டுகள்:

எடுத்துக்காட்டுகள்:

இந்த புதிய கொள்கையின் அடிப்படையில் கீழ்கண்டவற்றிக்கு தடையில்லை.

° ஆயுத விற்பனையில் ஆர்வமாக உள்ள நபர்கள் இணைந்துள்ள க்ரூப் மற்றும் ப்ளாக்குகள், ஆயுத விற்பனை சார்ந்த சேவைகளில் ஈடுபடாதவரை தடையில்லை

°ஆயுதங்கள் பற்றிய பயிற்சிகள் தரும் புத்தகங்கள், வீடியோக்கள், லைசென்ஸ்

°பிளாஸ்டிக் துப்பாக்கி, கத்தி மற்றும் பொம்மை ஆயுதங்கள்

°ஆயுதங்களுக்கான ப்ளாஸ் லைட்,ஸ்கோப், லென்ஸ்

°வேட்டையாடுதல், தற்காப்பு, இராணுவ ஆடைகள்

°ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் தோல் சம்பந்தப்பட்ட பொருட்கள்

°ஆயுதங்களின் மீதான ஓவியங்கள், கோட்டிங் மற்றும் சுற்றும் பொருட்கள்

இந்த புதிய கொள்கையின் அடிப்படையில் கீழ்கண்டவற்றிக்கு தடை விதிக்கப்படுகிறது.

இந்த புதிய கொள்கையின் அடிப்படையில் கீழ்கண்டவற்றிக்கு தடை விதிக்கப்படுகிறது.

°துப்பாக்கிகள், வெடி பொருட்கள் உள்ளிட்ட அனைத்துவகை ஆயுதங்கள்

° துப்பாக்கிகளில் சத்தத்தை அடக்கும் சைலன்சர் மற்றும் சப்ரஸ்சர்கள்

° பெப்பர் ஸ்ப்ரே, கத்தி, ப்ளேடு உள்ளிட்ட அனைத்து தற்காப்பு சார்ந்த ஆயுதங்கள்

°பட்டாசுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள்

°ஆயுதங்களை பிரபலப்படுத்தும் விளம்பரங்கள்

பேஸ்புக்

பேஸ்புக்

வரும் வாரங்களில், இந்த கொள்கையால் பாதிக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் தொழில் நடத்துபவர்களுடன் பணியாற்றி, இவற்றை புரிய வைத்து தகுந்த மாற்றந்களை செய்யப்போவதாக பேஸ்புக் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Introducing New Age Restrictions on Weapon Accessory Ads: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X