ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.!

சீனா தற்போது ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் வகையில் பிரமாண்ட போர் கப்பலை அறிமுகம் செய்துள்ளது. இது மற்ற நாடுகளைகளுக்கும் இது நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கடல் பகுதியிலும் ஆதிக்கம் செலுத்தி வர

|

சீனா தற்போது ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் வகையில் பிரமாண்ட போர் கப்பலை அறிமுகம் செய்துள்ளது. இது மற்ற நாடுகளைகளுக்கும் இது நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.!

தற்போது கடல் பகுதியிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா, அணு ஆயுத கப்பலையும் சொந்த உள் நாட்டு தயாரிப்பில் அசத்தியுள்ளது.

இது அமெரிக்காவுக்கு பெரும் அசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சீனா கப்பல் படை அணி வகுப்பு

சீனா கப்பல் படை அணி வகுப்பு

: சீனாவில் கப்பல்படை தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக பிரம்மாண்ட கப்பல் அணி வகுப்பு இன்று முதல் வரும் 26ம் தேதி வரை நடக்கின்றது.

10 நாடுகள் பங்கேற்பு:

10 நாடுகள் பங்கேற்பு:

சீனாவில் மிக பிரமாண்டமாக நடக்கும் இந்த போர் கப்பல் அணி வகுப்பில், இந்தியா, ரஷ்யா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளின் 20 போர் கப்பல்கள் பங்கேற்கின்றன என்று சீனா அறிவித்துள்ளது.

இந்தியாவின் 2 போர் கப்பல்:

இந்தியாவின் 2 போர் கப்பல்:

இந்தியா சார்பில் இரண்டு போர் கப்பல்கள் பங்கேற்கின்றன. இதற்காக ஐஎன்எஸ் கொல்கத்தா மற்றும் ஐஎன்எஸ் சக்தி கப்பல்கள் அந்நாட்டின் குவிங்டவோ (Qingdao) துறைமுகத்திற்கு சென்றடைந்தன.

பாகிஸ்தான் மட்டும் பங்கேற்கவில்லை:

பாகிஸ்தான் மட்டும் பங்கேற்கவில்லை:

சீனாவில் நடக்கும் போர் கப்பல் அணி வகுப்பில் பாகிஸ்தான் மட்டும் பங்கேற்கவில்லை. மேலும், பல்வேறு நாடுகளின் உந்துதால், பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

சீனா அதிபர் கொண்டாட்டம்:

சீனா அதிபர் கொண்டாட்டம்:

சீனக் கப்பற்படையின் 70ஆவது ஆண்டு விழாவை வீரர்களுடன், அந்நாட்டு அதிபர் ஸீ ஸின்பிங் கொண்டாடினார்.

சீனக் கப்பற்படை நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட டெஸ்டிராயர் என்ற ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் பிரம்மாண்ட விமானம் தாங்கி போர் கப்பலை, அந்நாட்டு கப்பற்படை வெளி உலகுக்கு அறிமுகம் செய்தது.

வீரர்களுக்கு தலை வணங்கினார்:

வீரர்களுக்கு தலை வணங்கினார்:

மழை, பனிமூட்டத்திற்கிடையிலும் கிங்டாவில்(quingdao) நடைபெற்ற விழாவில் அதிபர் ஸீ ஸின்பிங் பங்கேற்றார். அப்போது வீரர்களின் கடின உழைப்புக்கு தலை வணங்குவதாகத் தெரிவித்தார். அதற்கு வீரர்கள் நன்றி கூறினர்.

பல்வேறு நாடுகள் பங்கேற்பு:

பல்வேறு நாடுகள் பங்கேற்பு:

இந்த நிகழ்ச்சியின் போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 32 போர்க் கப்பல்கள், 39 போர் விமானங்கள் பங்கேற்றன. இந்தியாவின் ஐ.என்.எஸ். கொல்கத்தா, சக்தி ஆகிய இரு போர்க் கப்பல்களும் இதில் பங்கேற்று இருந்தன.

 அமெரிக்கா திகைப்பு:

அமெரிக்கா திகைப்பு:

ஏற்கனவே தனது கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. அமெரிக்காவின் வர்த்தகம் தாங்கிய போர் கப்பலை ஏற்கனவே மோதுவது போல் சீனா கப்பல் சென்றது. இந்நிலையில் சீனா தற்போது அறிமுகம் செய்துள்ள போர் கப்பலால் அமெரிக்காவும் சற்று நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
introducing a huge ship that will attack and destroy missiles in china : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X