மிரட்டும் ஸ்பீட்! 5 நிமிடத்தில் 100% சார்ஜ்.! Oppo-வின் புது பாஸ்ட் சார்ஜிங் ஸ்பீட் என்ன தெரியுமா?
ஸ்மார்ட்போன் பயனர்கள் இப்போது எதிர்பார்க்கும் ஒரு முக்கியமான அம்சங்களில் ஒன்றாக ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் திகழ்கிறது. இப்போதைக்கு, 240W பாஸ்ட் சார்ஜிங் தான் உலகின் மிகவும் வேகமான சார்ஜிங் ஸ்பீடாக இருக்கிறது. ஆனால் ஒப்போ இதை 300W உடன் முறியடிக்கப் பார்க்கிறது.
ஆம், மக்களே நேரடியாக ஒப்போ நிறுவனம் 300W சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் (Fast charging) அம்சத்தை அறிமுகம் செய்யும் வேலையில் களமிறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. Redmi நிறுவனம் அதன் 300W அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தைப் பிப்ரவரியில் அறிமுகம் செய்தது. வணிக சாதனத்தில் புதிய சார்ஜிங் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், தொழில்நுட்பமானது Realme இன் 240W சார்ஜிங் தீர்வை விஞ்சியது என்பதே உண்மையாகும்.

இப்போது OPPO நிறுவனம் இவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் நோக்கத்தில், புதிதாக 300W சார்ஜிங் விகிதத்துடன் பொருந்தக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பத்தைத் தயாரிப்பதாகத் தெரிகிறது. இது குறிப்பிடப்பட்ட டிப்ஸ்டர் DigitalChatStation வழியாக சமீபத்திய தகவல் மூலம் வெளியாகியுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் தற்போது வளர்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது 4,600mAh பேட்டரி உடன் இணைக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள், இந்த புதிய Fast Charging தொழில்நுட்பத்தை ரெடி செய்து நிறுவனம் உலகிற்கு அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது. Redmi நிறுவனம் தனது அறிவிப்பில், அதன் 300W சார்ஜிங் தொழில்நுட்பம் 50 சதவீதத்தை அடைய 2 நிமிடங்கள் 11 வினாடிகள் எடுத்ததாகவும், முழுமையாக சார்ஜ் செய்ய 5 நிமிடங்களுக்குள் ஆனது என்றும் கூறியுள்ளது.
சோதனைக்குப் பயன்படுத்தப்பட்ட பிராண்டின் பேட்டரி திறன் 4,100mAh அளவை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. OPPO ட்ரை செய்யும் இந்த 300W தொழில்நுட்பத்திலும் இதே திறனை நாம் எதிர்பார்க்கலாம். அல்லது இதற்கு மேல் சிறந்த மேம்படுத்தல்களை நிறுவனம் கொண்டுவரவும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால், பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் எப்போதும் பேட்டரி திறனைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Redmi இன் 300W சார்ஜிங் தொழில்நுட்பம் முழுமையாக 300W ஐ தொடவில்லை. அதற்குப் பதிலாக இது 290W ஐ மட்டுமே தொட முடிந்ததாக சில தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதே தொழில்நுப்டத்தை பயன்படுத்திய ஒப்போ சுமார் 3 வினாடிகளுக்கும் குறைந்த நேரத்தில் இந்த தீர்வை அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒப்போவின் SuperVOOC சார்ஜிங் குறைந்தபட்சம் 80 சதவீத பேட்டரியை அடையும் வரை அதே வேகத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








