மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் : இந்திய நிறுவனம் அதிரடி.!

By Meganathan
|

இந்தியாவில் மலிவு விலை கருவிகளை அறிமுகம் செய்யும் இன்டெக்ஸ் நிறுவனம் புதிய கருவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இன்டெக்ஸ் அக்வா பவர் எம் கருவியைத் தொடர்ந்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய கருவி இன்டெக்ஸ் அக்வா E4 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் ஆன்லைனில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய இன்டெக்ஸ் அக்வா E4 கருவிக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டன.

முன்பதிவு

முன்பதிவு

கருவியை முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு ஷாப்க்ளூஸ் தளம் சார்பில் ரூ.100/- தள்ளுபடி வழங்கப்படுகிறது. இச்சலுகை கருவியை 24 ஆம் தேதி பிற்பகல் 4.00 மணிக்குள் முன்பதிவு செய்வோருக்கு மட்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகைக்கான கூப்பன் கோடு பயனர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

குறுந்தகவல்

குறுந்தகவல்

4ஜி வோல்ட்இ மற்றும் இன்பில்ட் SOS அம்சம் கொண்டிருக்கும் இந்தக் கருவி தேர்வு செய்யப்பட்ட காண்டாக்ட்களுக்கு ஆபத்துக் காலங்களில் குறுந்தகவல் அனுப்பும். குறுந்தகவல் அனுப்ப வால்யூப் அப் மற்றும் வால்யூம் டவுன் பட்டன்களை மூன்று விநாடிகளுக்கு அழுத்திப் பிடிக்க வேண்டுமாம்..

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிராசஸர்

பிராசஸர்

சிறப்பம்சங்களைப் பொருத்த வரை இன்டெக்ஸ் அக்வா E4 கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டுள்ளது. இத்துடன் 4.0 இன்ச் TFT டிஸ்ப்ளே, 1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் கொண்டுள்ளது. மேலும் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

கேமரா

கேமரா

கேமராவை பொருத்த வரை இன்டெக்ஸ் அக்வா E4 கருவியில் 2 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் ஆட்டோ ஃபோகஸ் வசதி வழங்கப்படுகிறது. செல்பீ எடுக்க 2 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அழகிய செல்பீ எடுக்க ஏதுவாக ஃபேஸ் பியூட்டி மோட் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களைப் பொருத்த வரை ப்ளூடூத் 4.0, மைக்ரோ யுஎஸ்பி 2.0, ஜிபிஎஸ் மற்றும் வை-பை வழங்கப்பட்டுள்ளது. இத்தனை அம்சங்களுக்கு சக்தியூட்ட 1800 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இன்டெக்ஸ் அக்வா E4 கிரே நிறம் கொண்டுள்ளது. இந்திய சந்தையில் இன்டெக்ஸ் அக்வா E4 விலை ரூ.3,333 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Intex launched Ultra Low cost Aqua E4 With 4G VoLTE Support in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X