பட்ஜெட் விலையில் உயர் ரக ஸ்மார்ட்போன் வெளியீடு
இன்டெக்ஸ் நிறுவனம் புதிய வகை ஸ்மார்ட்போனினை ரூ.6,999க்கு இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய இன்டெக்ஸ் க்ளவுட் பேஸ் பிரத்யேகமாக ஷாப்க்ளூஸ் தளத்தில் மட்டும் தான் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் கையில் கூகுள்..!!
சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.5 இன்ச் க்யூஎச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே 540*960 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருப்பதோடு 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

டூயல் சிம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளமும் 16ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
ஷாக் அடிக்கும் ஃபேஸ்புக் தகவல்கள்..!
3ஜி, வை-பை, ப்ளூடூத் 4.0, மைக்ரோ யுஎஸ்பி 2.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 1700 எம்ஏஎச் பேட்டரி மூலம் 180 மணி நேர ஸ்டான்ட்பை நேரமும் 5 மணி நேர டாக்டைமும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications