பட்ஜெட் விலையில் அபாரம், இன்டெக்ஸ் கருவி அறிமுகம்..!!

Written By:

பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களுக்கு பிரபலமான இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய கருவியை இறக்குமதி செய்திருக்கின்றது இன்டெக்ஸ் நிறுவனம். ரூ.10,000 பட்ஜெட்டில் அடங்கும் புதிய கருவியானது க்ளவுட் ஸ்விஃப்ட் என்றும் இதன் விலை ரூ.8,888 என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலையில் அபாரம், இன்டெக்ஸ் கருவி அறிமுகம்..!!

விற்பனைக்கு ஏற்ற தேதியாக அக்டோபர் 20 ஆம் தேதியை இன்டெக்ஸ் நிறுவனம் தேர்வு செய்திருப்பதோடு வாடிக்கையாளர்கள் தற்சமயம் கருவியை ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக முன்பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை 5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர், 3ஜிபி ரேம் கொண்டிருப்பதோடு ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளமும் கொண்டிருக்கின்றது.

பட்ஜெட் விலையில் அபாரம், இன்டெக்ஸ் கருவி அறிமுகம்..!!

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமராவும், மெமரியில் 16 ஜிபி இன்டர்னல் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் 4ஜி சப்போர்ட் மற்றும் டூயல் ஸ்லிம் ஸ்லாட் கொண்டிருக்கின்றது. மேலும் 2500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

 

English summary
Intex Cloud Swift launched in India. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot