கைரேகை ஸ்கேனர் கொண்ட இந்தியாவின் மலிவு விலை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது!

Written By:

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான இன்டெக்ஸ் மலிவு விலையில் புதிய ஸ்மார்ட்போன் கருவியினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மலிவு விலை என்றாலும் தரமுள்ள, அதிக சக்தி வாய்ந்த அம்சங்களையே தனது புதிய கருவிக்கு இன்டெக்ஸ் வழங்கியுள்ளது.

கைரேகை ஸ்கேனர் கொண்ட இந்தியாவின் மலிவு விலை ஸ்மார்ட்போன் அறிமுகம்!

அக்வா பிரான்டிங் கொண்ட புதிய கருவியானது இன்டெக்ஸ் அக்வா எஸ்2 என அழைக்கப்படுகின்றது. இந்தியாவில் கைரேகை ஸ்கேனர் கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போன் என்ற பெருமையை இந்தக் கருவி பெற்றிருக்கின்றது. மற்ற அம்சங்களைப் பொருத்த வரை 5 இன்ச் டிஸ்ப்ளே, குவாட் கோர் ஸ்ப்ரெட்ரம் SC7731 பிராசஸர், ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் 5 எம்பி பிரைமரி மற்றும் முன்பக்க கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.

விரிவான சிறப்பம்சங்களை பொருத்த வரை 5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் SC7731 பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கைரேகை ஸ்கேனர் கொண்ட இந்தியாவின் மலிவு விலை ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டிருக்கும் இந்தக் கருவியில் டூயல் சிம் ஸ்லாட், 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா, 3.5 எம்எம் ஜாக், கைரேகை ஸ்கேனர், 3ஜி HSPA+, வை-பை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ் மற்றும் 2450 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

இத்தனை அம்சங்கள் கொண்டுள்ள புதிய இன்டெக்ஸ் அக்வா எஸ்2 கருவி ஷேம்பெயின், வெள்ளை மற்றும் கிரே நிறங்களில் கிடைப்பதோடு இந்திய சந்தையில் ரூ.4,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்English summary
Intex Aqua S2 with fingerprint sensor launched for Rs. 4990
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot