ஆன்டிராய்டு லாலிபாப் கொண்ட இன்டெக்ஸ் அக்வா பவர்+ ரூ.8,999க்கு வெளியானது

Written By:

இன்டெக்ஸ் நிறுவனம் அக்வா பவர் வகையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய இன்டெக்ஸ் அக்வா பவர்+ ரிலையன்ஸ் ரீடெயில் கடைகளில் ரூ.8,999க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அக்வா பவர்+ ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு 20 மணி நேர டாக்டைம் வழங்குகின்றது. இதன் மூலம் இதே வகை பேட்டரி கொண்ட லெனோவோ பி780, லெனோவோ ஏ5000, லாவா ஐரிஸ் ஃபூயல் 60 மற்றும் சோலோ க்யூ3000 போன்ற மாடல்களுக்கு போட்டியாக விளங்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

ஆன்டிராய்டு லாலிபாப் கொண்ட இன்டெக்ஸ் அக்வா பவர்+ ரூ.8,999க்கு வெளியானத

மேலும் டூயல் சிம் மற்றும் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் கொண்டு இயங்குகின்றது. 5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈ ட ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமாரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, GPRS/ EDGE, GPS/ A-GPS, வைபை, ப்ளூடூத் வி3.0, யுஎஸ்பி ஓடிஜி வழங்கப்பட்டுள்ளன.

 

English summary
Intex has launched an upgraded version of the Aqua Power in India, the Aqua Power+. The company has announced that the Intex Aqua Power+ will be initially available exclusively via Reliance retail stores, priced at Rs. 8,999.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot