Home
News

ஆக்டா கோர் பிராசஸர் கொண்ட ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் ரூ.8,990 தான்

இன்டெக்ஸ் நிறுவனம் அக்வா டிசையர் ஹெச்டி ஸ்மார்ட்போனினை ரூ.8,990 விலைக்கு விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. பிப்ரவரி மாதம் விலை குறிப்பிடாமல் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் விலையை இன்டெக்ஸ் நிறுவனம் ஒரு வழியாக வெளியிட்டு விட்டது.

டூயல் சிம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆன்டிராய்டு கிட்காட் இயங்குதளத்தையும் 5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. மேலும் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸரும் 1 ஜிபி ராமும் இருக்கின்றது.

ஆக்டா கோர் பிராசஸர் கொண்ட ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் ரூ.8,990 தான்

8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருப்பதோடு 10 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன் பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, GPRS/ EDGE, வைபை 802.11 b/g/n, GPS/ A-GPS, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

2000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டபடும் இந்த ஸ்மார்ட்போன் 5 மணி நேர டால்க் டைம் , 210 மணி நேர ஸ்டான்ட்பை மற்றும் கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கின்றது.

Best Mobiles in India

English summary
Intex Aqua Desire HD Launched at Rs. 8,990. Intex has now revealed the pricing of the smartphone. The Intex Aqua Desire HD has been launched at Rs. 8,990.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X