தெரியுமா உங்களுக்கு-இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்கள் 450 மில்லியன்.!

இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2017 ஜூன் மாதம் 450-465 அளவினுக்கு அதிகரிக்கும் என இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோஸியேஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

By Ilamparidi
|

இணையத்தினை மையப்படுத்தியே நமது வாழ்வானது அமைந்துவிட்ட சூழலில்,மனித வாழ்வின் அன்றாட தேவைகள் முதல் அத்தியாவசிய தேவைகள் வரை அனைத்திற்கும் நாம் இணையத்தினை பெருமளவில் சார்ந்திருக்கிறோம்.பணப்பரிமாற்றம்,வேலை,கல்வி,வியாபாரம் உள்ளிட்ட அனைத்திலும் இணையத்தின் பங்கு அலாதியானது.

இணையமும்,கணிணியுமின்றி ஒரு நாளை கழித்திடச் சொன்னால் எவருமிங்கே தயாரில்லை.காரணம் நமது கல்வி முதல் வேலை வரை எல்லாவற்றிற்கும் நாம் இணையத்தினையே சார்ந்திருக்கிறோம்.இவைகள் யாவற்றிலும் இணையத்தின் பங்கும் குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய சூழலில்,இந்தியாவில் ஜூன் 2017 காலகட்டத்தில் இணைத்தினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 450 முதல் 460 மில்லியன் வரை அதிகரிக்குமென கூறப்படுகிறது.அதுகுறித்த மேலதிக தகவல்கள் கீழே.

இணையம்:

இணையம்:

நாம் மேற்குறிப்பிட்டது போலவே மனித வாழ்வின் தவிர்க்க இயலாத ஓர் அங்கமாக ஆகிப்போய்விட்டது இணையம்.அதற்கான காரணம்,மனிதர்களுக்கு அத்துனைப் பயன்களையும் அவர்கள்தம் வாழ்வினை மேம்படுத்துகிற ஓர் இன்றியமையாத காரணியாகவும் இருக்கிறது இணையம்.செய்திகளை உடனடியாக தெரிந்து கொள்வது துவங்கி கல்வி,வியாபாரம் பணப்பரிமாற்றம்,வர்த்தகம்,திருமணத்திற்கான வரன் தேடல் உள்ளிட்ட மனித வாழ்வின் அத்துணை அம்சங்களிலும் இணையம் தவிர்க்க இயலாததாக உள்ளது.

சமூகவலைத்தளங்கள்:

சமூகவலைத்தளங்கள்:

இணையத்தின் பயன்பாடும்,அதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதற்கு சமூகவலைத்தளங்களும் ஓர் குறிப்பிடத்தகுந்த காரணமாகும்.செய்திகளை உடனடியாகத் தெரிந்துகொள்வதில் துவங்கி தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்தல் உள்ளிட்ட அத்துணை வசதிகளினையும் வழங்குவதால் சமூக வலைத்தளங்களும் இணையத்தினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம்.

கிராமப்புறம்:

கிராமப்புறம்:

இந்தியாவில் கிராமப்புற பகுதிகளில் இணையத்தினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது 17 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும்,நாள் ஒன்றுக்கு கிராமப்பகுதிகளில் இணையத்தினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது 48 சதவிகிதம் அதாவது 78 மில்லியனாகவும் அதுவே மாதத்திற்கு 242 மில்லியன் அளவிலானோர் இணையத்தினை பயன்படுத்துவதாகவும் ஆய்வு தெரிவித்துள்ளது.

நகர்ப்புறம்:

நகர்ப்புறம்:

அதுவே நகர்ப்புறங்களைப் பொருத்தமட்டில் நாள் ஒன்றுக்கு 57 சதவிகிதம் அதாவது 137.19 மில்லியன் அளவிலானோர் இணையத்தினைப் பயன்படுத்துவதாகவும்,அது ஓர் மாதத்திற்கு 90 சதவிகிதம் அதாவது 242 மில்லியன் அளவிலானோர் இணையத்தினை பயன்படுத்துவதாகவும் இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா தெரிவிக்கிறது.

அதிகரிக்கும்:

அதிகரிக்கும்:

இந்த அளவீடுகளானது 2017 ஜூன் மாதம் 450 மில்லியன் அளவினுக்கு அதிகரிக்கும் என இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா தெரிவிக்கிறது.இதற்கான காரணங்களாக பெறுமதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செயலிழப்பு இணைய வழி பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சிலவற்றைக் குறிப்பிடலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

வரப்போகுது "அதிக உறுதியோடு"-சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 4.!

Best Mobiles in India

English summary
Internet users in India to cross 450 million by June: IAMAI.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X