வாட்ஸ் ஆப்,யூடியூப்,பேஸ்புக் அப்களில் இன்டர்நெட் எடுக்காது.!இந்திய இணையப் பாதுகாப்புத் துறை விளக்கம்
சர்வதேச அளவில் இணையதள ஷட்டவுன் ஏற்படும் என்று ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து அதனால் இந்தியாவிற்குப் பாதிப்பில்லை என்று மத்திய இணையப் பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது.
வாட்ஸ் ஆப், யூடியூப், பேஸ்புக், கூகுள் மேப்ஸ் போன்ற மொபைல் செயலிகள் மற்றும் பணம் செலுத்தும் நுழைவாயில்கள் அனைத்தும் இணையதள ஷட்டவுனினால் பாதிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் வந்த செய்திகளுக்கும் பதிவுகளுக்கும், இந்திய இணையப் பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது.
டெல்லி: சர்வதேச அளவில் இணையதள ஷட்டவுன் ஏற்படும் என்று ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து அதனால் இந்தியாவிற்குப் பாதிப்பில்லை என்று மத்திய இணையப் பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது.

இணையதளத் துண்டிப்பு
வெள்ளிக்கிழமை காலை ரஷ்யா சர்வதேச அளவில் இணையதள ஷட்டவுன் ஏற்படும் என்றும் பல இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகளவில் இணையதளத் துண்டிப்பு ஏற்படும் என்று தெரிவித்து இருந்தது.

முன் ஏற்பாடு
இதற்கு விளக்கம் அளித்த இந்திய இணையப் பாதுகாப்புத் துறை ‘இந்தியாவில் இணையதள ஷட்டவுன் ஏற்படாத அளவிற்கு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது'.

பாதிப்பு
உலகின் பிற நாடுகளில் இந்த இணையதள ஷட்டவுன் ஏற்பட்டாலும் இணையதளப் பயனர்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில சிக்கல்
நீங்கள் நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வாடிக்கையாளர் என்றால், உங்களுடைய எல்லா நிகழ்ச்சிகளையும் ஆப்லைனில் பதிவிறக்கிக்கொள்ளும் படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கேம் விளையாட்டாளர்களுக்கு நிச்சயம் சில சிக்கல்களைச் சந்திக்க வெந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications