இணையதளங்களை முடக்க ஹேக்கர்கள் சதி: கூகுள் எச்சரிக்கை

Posted By: Staff
இணையதளங்களை முடக்க ஹேக்கர்கள் சதி: கூகுள் எச்சரிக்கை

உலகின் அனைத்து கம்ப்யூட்டர்களையும் கட்டுப்படுத்தும் வகையில், புதிய வைரசை ஹேக்கர்கள் பரப்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த புதிய வைரஸ்களால் வரும் ஜூலை மாதம் இணையதளங்கள் முடக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வைரஸால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களை சரிசெய்து தருவதாக, ஹேக்கர்கள் மூலம் சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தினால் இந்த கம்ப்யூட்டர் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் அம்பலமாகி உள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பினால் இதுவரை 3 லட்சத்தி 80 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சம்மந்தமாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு(எப்பிஐ), வைரஸ் பாதிப்பிலிருந்து கம்ப்யூட்டர்களை பாதுகாக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டது.

கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியவும், அப்படி பாதிக்கப்பட்டிருந்தால் அதை சரி செய்யும் வழியினையும், அமெரிக்க புலனாய்வு அமைப்பு ஏற்படுத்திய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், சிக்கன நடவடிக்கை காரணமாக இந்த பாதுகாப்பு இணையத்தை மூடுவதற்கு எப்பிஐ முடிவு செய்துள்ளது. இதனால் புதிய வைரசால் இணையதளங்கள் முடக்கப்படும் அபாயம் இருப்பதாக கூகுள் எச்சரித்துள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot