இப்படி செய்தால் சேவையை நிறுத்துவோம்: பாகிஸ்தானுக்கு Google, facebook, twitter எச்சரிக்கை
இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு எல்லா டிஜிட்டல் கம்பெனிகளுக்கும் சமூக இணைய தளங்களுக்கும் புதிய தணிக்கை விதிகளை வெளியிட்டது.

கூகுள், பேஸ்புக், டுவிட்டர்
அந்த அறிவிப்பில் சமூகவலைதளங்களில் பிரதானமாக திகழும் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நிறுவனங்களிடம் பாகிஸ்தானில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு நிறுவனங்கள் ஏதாவது குறிப்பிட்ட தகவல்கள் கேட்டால் அதை சமூகவலைதள நிறுவனங்கள் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

பாகிஸ்தான் அலுவலகம் அமைக்க உத்தரவு
அதேபோல் குடிமக்களின் பாதுகாப்பு என்ற பெயரில் சமூக வலைதள நிறுவனங்கள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும், அங்கேயே தகவல்களைச் சேமிக்க தரவு சேவையகங்களை அமைப்பதையும் பாகிஸ்தான் அரசு கட்டாயமாக்கியது.

அறிவிப்பை பின்பற்றவில்லை என்றால் 3 மில்லியன் டாலர் அபராதம்
பாகிஸ்தான் அரசு வெளியிட்ட புதிய தணிக்கை விதிகளை 3 மாத காலத்துக்குள் அமுல் செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறிவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 3 மில்லியன் டாலர் அபராதமாக விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம்
பாகிஸ்தான் அரசின் அறிவிப்புக்கு எதிராக பிப்ரவரி 15ஆம் தேதி, டிஜிட்டல் நிறுவனங்கள் சார்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் இவற்றைத்தவிர அமேசான் ஆப்பிள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன.

புதிய விதிகளை திருத்த வேண்டும் என மனு
பாகிஸ்தான் அரசு புதிதாக அறிவித்துள்ள தணிக்கை விதிகளை பாகிஸ்தான் அரசு திருத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது போன்ற புதிய விதிகளை திரும்பபெறாவிட்டால், தங்களது நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என கூகுள், பேஸ்புக், டுவிட்டர் ஆகியவை கூட்டாக பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளன.

பாகிஸ்தான் நாட்டு பயனர்களுக்கு வழங்குவதில் சிக்கல் வரும்
இந்நிலையில் ஆசிய இணைய கூட்டணி சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், பாகிஸ்தான் அரசால் விதிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின் காரணமாக தங்களது சேவைகளை, பாகிஸ்தான் நாட்டு பயனர்களுக்கு வழங்குவதில் சிரமம் ஏற்படும் எனவும் மேலும் இதன்மூலம் தனிப்பட்ட வெளிப்பாடு மற்றும் தனியுரிமைக்கான சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளுக்கு தீர்வுக் காண தவறும் விதமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
source: gulfnews.com


Click it and Unblock the Notifications