முதன்முதலில் இண்டர்நெட்டில் தோன்றிய பத்து விஷயங்கள் என்ன தெரியுமா?

By Siva
|

படைப்பாளிகள், உருவாக்குபவர்கள், கற்பனையாளிகள் ஆகியோர் ஒவ்வொரு காலகட்டத்திலும் இண்டர்நெட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருந்துள்ளனர். இன்று இண்டர்நெட் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. பல நாட்கள் செய்த வேலையை இண்டர்நெட் ஒருசில நிமிடங்களில் முடித்து விடுகிறது.

முதன்முதலில் இண்டர்நெட்டில் தோன்றிய பத்து விஷயங்கள் என்ன தெரியுமா?

எனவே இண்டர்நெட் என்பது மனித வளர்ச்சிக்கு மிக அவசியமான ஒன்று என்று அனைவரும் ஒப்புக்கொள்ளும் இந்த நேரத்தில் இண்டர்நெட்டில் முதன்முதலில் என்னென்ன அம்சங்கள் வெளியானது என்பதை தெரிந்து கொள்வதில் அனைவரும் ஆர்வமாக இருப்போம் அல்லவா? அதுகுறித்து தற்போது பார்ப்போம்

இண்டர்நெட்டில் பதிவான முதல் புகைப்படம்:

இண்டர்நெட்டில் பதிவான முதல் புகைப்படம்:

இன்று இண்டர்நெட்டில் கோடிக்கணக்கான புகைப்படங்கள் கொட்டி கிடக்கின்றன. எத்தனை புகைப்படங்கள் இருக்கின்றது என்பது இண்டர்நெட்டை கண்டுபித்தவரே எண்ணிவிட முடியாது. இருப்பினும் இண்டர்நெட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் புகைப்படம் எது தெரியுமா? இளம்பெண்களின் காமெடி குரூப் புகைப்படம்தான்.

CERN என்ற அமைப்பின் வருடாந்திர இசை நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் முதன்முதலில் இண்டர்நெட்டில் பதிவு செய்யப்பட்டது. GIF வடிவில் இருந்த இந்த புகைப்படத்தை எடுத்தவர் சில்வானோ டி ஜென்னாரா என்பவர்தான்.

முதல் யூடியூப் வீடியோ:

முதல் யூடியூப் வீடியோ:

யூடியூப் வீடியோ இணையதளம் என்பது கடந்த 2005ஆம் ஆண்டு மூன்று பேபால் பணியாளர்களால் தொடங்கப்பட்டது. இன்று உலக அளவில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள இந்த இணையதளம் உலகின் அதிக வீடியோக்களை கொண்ட இணையதளமாக உள்ளது. ஆனாலும் இந்த யூடியூப் இணையதளத்தில் முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட வீடியோ 'மி அட் த ஜூ (Me at the Zoo) என்ற வீடியோதான். 19 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ ஜாவித் கரிம் என்பவர் எடுத்தது. அவர் சான் டிகியோ ஜூவில் யானைகள் முன் எடுத்த வீடியோதான் இது.

இபே'வில் விற்பனையான முதல் பொருள்:

இபே'வில் விற்பனையான முதல் பொருள்:

இன்று ஆன்லைன் வர்த்தம் செய்ய பல நிறுவனங்கள் உள்ளது. ஆனால் கடந்த 1995ஆம் ஆண்டு முதன்முதலில் இபே என்ற நிறுவனம் அன்றைய ஆக்சன்வெப் என்ற பெயரில் விற்பனை செய்த முதல் பொருள் என்ன தெரியுமா? $14.83க்கு விற்பனை செய்த புரோக்கன் லேசர் பாயிண்ட் என்ற கருவிதான்.

அமேசான் நிறுவனம் விற்பனை செய்த முதல் புத்தகம்:

அமேசான் நிறுவனம் விற்பனை செய்த முதல் புத்தகம்:

அமேசான் நிறுவனம் முதலில் புத்தகங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிறுவனம் கடந்த 1995ஆம் ஆண்டு விற்பனை செய்த 'Fluid Concepts and Creative Analogies' என்ற புத்தகம் தான் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்ட முதல் புத்தகம். கம்ப்யூட்டர் மாடல்கள் மற்றும் அடிப்படை மெக்கானிசம் குறித்த இந்த புத்தகத்தை எழுதியவர் டக்லஸ் ஹாஃபஸ்டேடர் என்பவர்

இரவில் இண்டர்நெட் வேகம் குறைய நீங்கள் செய்யும் பிழைகள்தான் காரணம்.!இரவில் இண்டர்நெட் வேகம் குறைய நீங்கள் செய்யும் பிழைகள்தான் காரணம்.!

முதல் இமெயில்:

முதல் இமெயில்:

முதல் இமெயிலை அனுப்பியர் ராய் டால்லின்சன். கடந்த 1971ஆம் ஆண்டு இவர் அனுப்பிய இமெயில்தான் முதல் இமெயில் என்ற புகழை பெறுகிறது. மேலும் இவர்தான் @ என்ற அடைகுறியை இமெயில் பெயருக்கும் இமெயில் முகவரிக்கும் இடையில் வைத்து பயன்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முதலில் டவுன்லோடு செய்யப்பட்ட இசை:

முதன்முதலில் டவுன்லோடு செய்யப்பட்ட இசை:

ஜெப் பாட்டர்சன் மற்றும் ராப் லார்ட் ஆகியோர்கள் கடந்த 1993ஆம் ஆண்டு அப்லோடு செய்த முதல் இசை தான் முதன்முதலில் டவுண்லோடு செய்யப்பட்ட இசையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இவர்கள் MP2 ஆடியோ ஃபைல் வடிவில் 'தி அக்லி மக்ஸ்' என்ற இசையை FTP மூலம் அப்லோட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நேரடி லைவ் ஸ்ட்ரீம் இசை:

முதல் நேரடி லைவ் ஸ்ட்ரீம் இசை:

இன்று சர்வசாதாரணமாக லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும் இசையை முதன்முதலில் 1993ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி அன்றைய தேதியில் பெரிய அளவில் புகழ் பெறாத Severe Tire Damage' என்ற இசைக்குழுவினர்தான் நேரலை ஸ்ட்ரீம் இசையை ஒளிபரப்பினர். ராக் இசையான இந்த இசை ஜெராக்ஸ், டிஜிட்டல் உபகரணங்கள், உள்பட ஒருசில டெக்னாலஜி மூலம் லைவ் செய்யப்பட்டது.

முதல் தேடுதளம்:

முதல் தேடுதளம்:

www என்று கூறப்படும் World Wide Webக்கு முன்பே தேடுதளங்கள் தோன்றிவிட்டாலும் இண்டர்நெட்டில் முதன்முதலில் உருவான தேடுதளம் என்பது WebCrawler என்பதுதான். 1994ஆம் ஆண்டு இந்த தேடுதளம் உருவானது

முதல் டொமைன் என்ன தெரியுமா?

முதல் டொமைன் என்ன தெரியுமா?

இண்டர்நெட்டில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட முதல் டொமைன் பெயர் '"symbolics.com'' என்பதுதான். இந்த டொமைன் கடந்த 1985ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான '"symbolics என்ற நிறுவனம் தற்போது இல்லை என்றாலும் முதல் டொமைன் செய்த நிறுவனம் என்ற அளவில் பெருமை பெற்றுள்ளது

உலகின் முதல் இணையதளம்:

உலகின் முதல் இணையதளம்:

இண்டர்நெட்டில் தோன்றிய முதல் இணையதளம் info.cern.ch என்றா இணையதளம்தான், கடந்த 1990ஆம் ஆண்டு நெக்ஸ்ட் என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் உருவாக்கியதுதான் இந்த இணையதளம். இந்த இணையதளத்தின் முகவரி http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html என்பதுதான் என்றாலும் இந்த இணையதளம் தற்போது இல்லை. ஆனாலும் இதன் காப்பி ஒன்று World Wide Web Consortium (W3C) என்ற இணையதளத்தில் உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Here are the 10 things they did for the first time on the Internet such as first picture, video, email, etc. and we continue doing the same.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X