இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 2022 ஜூனில் விடைபெறும்: மைக்ரோசாப்ட் முக்கிய அறிவிப்பு.!

|

இன்று கம்பியூட்டர் உலகில் பலவித புது பிரவுசர்கள் வந்ததால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் கணிசமாகத்தான் உள்ளது. அதாவது கடந்த 1996 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்கிற தேடுதளத்தை உருவாக்கியது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்

மேலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அறிமுகமான காலம் முதல் கடந்த 2004-ம் ஆண்டு வரை இணைய உலகில் தனி சாம்ராஜ்யம் செய்து வந்தது என்று தான் கூறவேண்டும். அப்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட தேடுதளங்களில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தான் முதலிடம் பெற்றது. அதாவது ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு 95 சதவிகிதம் பயனர்கள் இந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்பிரவுசரை தான் அதிகம் பயன்படுத்தி வந்தனர்.

கூகுள் பிரவுசர், பயர்பாக்ஸ் போன்ற

மேலும் கூகுள் பிரவுசர், பயர்பாக்ஸ் போன்ற பல்வேறு பிரபலமான பிரவுசர்களின் வரவினால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை குறைந்தது. குறிப்பாக பல பிரவுசர் வரவினால் தனது இருப்பிடத்தை மெல்ல இழக்க தொடங்கியது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்.

சத்தமின்றி கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்த சாம்சங்.!சத்தமின்றி கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்த சாம்சங்.!

 2022ஆம் ஆண்டு ஜூன் 15-

இந்நிலையில் வரும் 2022ஆம் ஆண்டு ஜூன் 15-க்கு பிறகு இன்டர்நெட் எகஸ்ப்ளோரர் சில விண்டோஸ் 10 வெர்ஷன் கொண்ட கணினிகளில் இயங்காது என அதிகாரப்பூர்வமாகஅறிவித்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். ஆனாலும் இதற்கு மாற்றாக மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர் இருக்கும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ்

மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ்

மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் சாதனம் ஆனது இன்டெல் கோர் ஐ3 முதல் ஐ7 வரை 11th Gen இன்டெல் கோர் சிபியு உடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக மேம்பட்ட விண்டோஸ் ஹார்டுவேர் செக்யூரிட்டி வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

ர்பேஸ் ப்ரோ 7 சாதனத்தின் பேஸ் மாட

இந்த மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 சாதனத்தின் பேஸ் மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது. ஆனால் நீங்கள் 32ஜிபி ரேம், 1டிபி எஸ்எஸ்டி வரை கான்பிகர் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வைஃபை 6 மற்றும் புளூடூத் 5.0-ஐ ஆதரிக்கிறது இந்த அட்டகாசமான சாதனம்.

கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

இந்த புதிய மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 சாதனம் 4கே பிக்சல்-சென்ஸ் டச் மற்றும் இன்க் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதில் மைக்ரோசப்ட் டீம்ஸ் சான்று பெற்ற ஆடியோ மற்றும் வீடியோ அம்சங்கள்வழங்கப்பட்டு உள்ளன. அதேபோல் இந்த சாதனம் அதிகநேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கிறது. எனவே கணினி அதிக நேரம் பயன்படுத்தும் மக்களுக்கு இந்த சாதனம் பயனுள்ள வகையில்இருக்கும். பின்பு யூ.எஸ்.பி-சி போர்ட், யூ.எஸ்.பி-ஏ போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

ர்பேஸ் ப்ரோ 7 சாதனத்தில் டால்பி ஆடியோ வசதியுடன் இரண்டு ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன

இந்த மைக்ரோசப்ட் சர்பேஸ் ப்ரோ 7 சாதனத்தில் டால்பி ஆடியோ வசதியுடன் இரண்டு ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சாதனம் ஈசிம் மற்றும் நானோ சிம் என இரண்டிலும் வேலை செய்கிறது.

Best Mobiles in India

English summary
Internet Explorer bids farewell in June 2022: Microsoft Announcement: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X