2ஜி சேவை மற்றும் பல்வேறு விதிகள்: காஷ்மீரில் இணைய சேவை தொடக்கம்

|

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து அங்கு மிகவும் பரபரப்பான நிலவியது. தற்போது வரை காஷ்மீரின் முக்கிய பகுதிகள் ராணுவ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

மத்திய அரசு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இதையடுத்து அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்கு அந்த பகுதியில் 144 தடை பிறப்பிக்கப்பட்டது. அதோடு அந்த பகுதியில் இருந்து தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் விதமாக இணைய சேவை முடக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் மீண்டும் இணைய சேவையை தொடங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மேலும் இது தொடர்பாக 7 நாட்களில் பரிசீலிக்க வேண்டும் எனவும் 144 தடை உத்தரவிற்கு கீழ் அரசு பிறப்பித்த உத்தரவுகள் என்ன என்பது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் அரசு சமர்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

மீண்டும் தொடங்கப்பட்ட இணைய சேவை

மீண்டும் தொடங்கப்பட்ட இணைய சேவை

ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட இணைய சேவைகள் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இன்று முதல் அவை சில கட்டுப்பாட்டுகளுடன் மீண்டும் இயங்கத் தொடங்கும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. இணையத்திற்கு 2 ஜி வேகம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்களுக்கு தடை நீடிக்கும்

சமூகவலைதளங்களுக்கு தடை நீடிக்கும்

சோதனை முயற்சியாக இன்று முதல் இம்மாத இறுதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய இணைய சேவை வழங்கப்படும் என்று அரசுத்தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வெள்ளைப் பட்டியலில் உள்ள இணைய தளங்களின் சேவையை பயன்படுத்தலாம் என்றாலும் முகநூல், டிவிட்டர் , வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்களுக்கான தடை நீடிக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..!24000 கடிதங்களை வீட்டிலேயே ஒளித்து வைத்த தபால்காரர்: காரணம் கேட்டால் ஷாக் ஆவிங்க..!

இணைய வங்கி சேவை

இணைய வங்கி சேவை

இணைய வங்கி சேவையை பயன்படுத்த பரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டதையடுத்து இந்த இணைய முடக்கம் நீக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Internet back in kashmir from today

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X