90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..

|

"90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்" என்ற இந்த தலைப்பைப் படித்ததும் சிலருக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கும். இன்னும் சிலருக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கும். எப்படி சூரியனை இரண்டு முறை பார்த்திருக்க முடியும்? அதுவும் வெறும் 90 நிமிடங்களில் எப்படி சூரியனை இரண்டு முறை பார்க்க முடியும்? இது சாத்தியமே இல்லையே.! என்று உங்கள் புத்தி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போலப் பல கணக்குகளைப் போட்டுக் கணித்திருக்கும்.

இந்த நிகழ்வு நிகழ்ந்தது உண்மை தானா? இது எப்படி சாத்தியம்?

இந்த நிகழ்வு நிகழ்ந்தது உண்மை தானா? இது எப்படி சாத்தியம்?

இந்த நிகழ்வைப் புரிந்துகொள்ள நீங்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆக இருக்க வேண்டியதில்லை. ஆனால், ஸ்டீபன் ஹாக்கிங் போல யோசிக்க வேண்டும். இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்று கணித்தவர்களின் கவனத்திற்கு, உண்மையிலேயே இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அதுவும், இந்த நிகழ்வு பற்றி ISS வீரர்களே பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நமது பிரபஞ்சம் நம்மை வியக்க வைக்கும் பல மில்லியன் கணக்கான அதிசயங்களை அதனுள் ஒளித்து வைத்துள்ளது.

90 நிமிடத்தில் இரண்டு முறை சூரியனைப் பார்க்க முடியுமா?

90 நிமிடத்தில் இரண்டு முறை சூரியனைப் பார்க்க முடியுமா?

இதைக் கண்டறிவதே மனித இனத்தின் தற்போதைய முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. விண்வெளி பற்றி நமக்குத் தெரியாத பல அதிசயங்கள் இன்னும் வெளிவராமல் தான் இருக்கிறது. அப்படி தான் இந்த தகவலும் கூட, நமக்கு இன்று வரை தெரியாமல் இருந்துள்ளது. ஆனால், ஒரே ஒரு தனி நபர் கேட்ட கேள்வியால், இந்த உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. '90 நிமிடத்தில் இரண்டு முறை சூரியனைப் பார்த்த நிகழ்வு' உண்மையிலேயே விண்வெளியில் தான் நடந்துள்ளது.

LPG சிலிண்டரில் உள்ள எண்ணின் அர்த்தம் என்ன தெரியுமா? இது உங்கள் பாதுகாப்பிற்கானதா? இனி கூர்ந்து கவனியுங்கள்..LPG சிலிண்டரில் உள்ள எண்ணின் அர்த்தம் என்ன தெரியுமா? இது உங்கள் பாதுகாப்பிற்கானதா? இனி கூர்ந்து கவனியுங்கள்..

ஏழு மணி நேரம் ஸ்பேஸ் வாக் செய்த விண்வெளி வீரர்கள் கூறிய உண்மை

ஏறக்குறைய ஏழு மணி நேரம் விண்வெளி நடைப்பயணத்தை முடித்துவிட்டு வந்த விண்வெளி வீரர்கள் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளனர். விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் திரும்பிய பின்னர் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் நடத்தப்பட்ட சமீபத்திய கலந்துரையாடல் அமர்வில், சர்வதேச விண்வெளி நிலையம் அதன் டிவிட்டர் பயனர்களின் கேள்விகளுக்கு வரவேற்பு வழங்கி பதில் அளித்தது.

விண்வெளி வீரர்களிடம் கேட்கப்பட்ட

விண்வெளி வீரர்களிடம் கேட்கப்பட்ட "அந்த" கேள்வி இது தானா?

உரையாடலின் போது, ​​ஒரு டிவிட்டர் பயனர் "விண்வெளி வீரர்கள் தங்கள் உடைகளில் ஏதேனும் வெப்பநிலை வேறுபாடுகளை உணர்கிறார்களா?" என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு, சமீபத்தில் ஸ்பேஸ் வாக் செய்து, நிலையம் திரும்பிய இரண்டு விண்வெளி வீரர்கள் (ஜப்பானின் அகிஹிகோ ஹோஷைட் மற்றும் பிரான்சின் தாமஸ் பெஸ்குவெஸ்ட்) பதில் அளித்துள்ளனர். ஐஎஸ்எஸ்-ன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் ஹேண்டில் மூலம், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அந்த கேள்விக்கான பதில் பதிவிடப்பட்டது.

கிஸ்பாட் கிவ் அவே போட்டி-நீங்கள் லைக் மற்றும் ஷேர் செய்தால் போதும்- இலவசமாக நோக்கியா சி01 பிளஸ் வெல்ல வாய்ப்புகிஸ்பாட் கிவ் அவே போட்டி-நீங்கள் லைக் மற்றும் ஷேர் செய்தால் போதும்- இலவசமாக நோக்கியா சி01 பிளஸ் வெல்ல வாய்ப்பு

வெறும் 90 நிமிடத்தில் பூமியைச் சுற்றி வருகிறதா ISS நிலையம்?

வெறும் 90 நிமிடத்தில் பூமியைச் சுற்றி வருகிறதா ISS நிலையம்?

அதில் கூறியதாவது, "ஸ்பேஸ் வாக்கர்கள் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை அனுபவிக்கிறார்கள். @cquantumspin அவர்கள் உடைகளில் வெப்பநிலை வேறுபாடுகளை உணர்கிறீர்கள். #AskNASA." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நம்பமுடியாத நிகழ்வைப் பற்றிப் பேசிய நாசா நிபுணர் கூறுகையில், சர்வதேச விண்வெளி நிலையம் ஒவ்வொரு தொண்ணூறு நிமிடங்களுக்கும் பூமியைச் சுற்றி வருகிறது. ஒவ்வொரு நாற்பத்தைந்து நிமிடங்களுக்கும் ஒரு சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை ISS அனுபவிக்கிறது என்று விளக்கினார்.

- 250 டிகிரி வெப்பநிலை To 250 டிகிரி வெப்பநிலையைச் சந்திக்கும் விண்வெளி வீரர்கள்

- 250 டிகிரி வெப்பநிலை To 250 டிகிரி வெப்பநிலையைச் சந்திக்கும் விண்வெளி வீரர்கள்

அதனுடன், நெகட்டிவ் 250 டிகிரி வெப்பநிலை மாற்றத்தைச் சூரிய அஸ்தமனத்தின் போதும் மற்றும் 250 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை மாற்றத்தைச் சூரிய உதயத்தின் போது வீரர்கள் உணர்கிறார்கள் என்று பதில் அளிக்கப்பட்டிருந்தது. 90 நிமிடங்களுக்கு இடையே இரண்டு வெப்பநிலை மாறுபாடு இங்கு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எனவே மிகவும் வெப்பநிலை வேறுபாடை ஸ்பேஸ் வாக் வீரர்கள் உணர்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான இரண்டு வெவ்வேறு வெப்பநிலை மாற்றத்தை விண்வெளி வீரர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பது தான் அடுத்தகட்ட சுவாரசியம்.

ஏசியால் கரண்ட் பில் எகிறுகிறதா? இது தெரிஞ்சா கரண்ட் பில்லை நீங்க குறைக்கலாம்.. AC பற்றிய சூப்பர் டிப்ஸ்கள்..ஏசியால் கரண்ட் பில் எகிறுகிறதா? இது தெரிஞ்சா கரண்ட் பில்லை நீங்க குறைக்கலாம்.. AC பற்றிய சூப்பர் டிப்ஸ்கள்..

விண்வெளி வீரர்களுக்கான பாதுகாப்பு ஆயுதம் இது தான்

விண்வெளி வீரர்களுக்கான பாதுகாப்பு ஆயுதம் இது தான்

உண்மையைச் சொல்லப் போனால், விண்வெளி வீரர்களுக்கான ஒரு பாதுகாப்பு ஆயுதம் என்றால், அது அவர்களின் ஸ்பேஸ் சூட்கள் தான். விண்வெளியில் உள்ள வெவ்வேறு வெப்பநிலை மாறுபாடுகளைச் சமாளிக்கவும், விண்வெளி வீரர்கள் வசதியாக இருக்க உதவவும், அவர்களின் ஸ்பேஸ்சூட்களில் பிரத்தியேகமான குளிரூட்டும் ஆடை அம்சங்கள் மற்றும் அதிக வெப்பத்தைக் கட்டுப்படுத்த உதவும் பாதுகாப்பு அடுக்குகளும் சேர்த்துப் பொருத்தப்பட்டுள்ளன. இது அவர்களை அதிக குளிர் மற்றும் அதிக வெப்ப மயமான சூட்டிலிருந்து பாதுகாக்கிறது.

இந்த 12வது ஸ்பேஸ் வாக் எதற்காகச் செய்யப்பட்டது தெரியுமா?

இதற்கிடையில், ஸ்பேஸ் வாக் செய்த அகிஹிகோ ஹோஷைட் மற்றும் தாமஸ் பெஸ்குவெஸ்ட் விண்கலத்தை விட்டு வெளியேறி, எதிர்கால நிலையத்தின் மூன்றாவது புதிய சூரிய வரிசையை இணைக்க ஒரு ஆதரவு அடைப்பை நிலையத்துடன் நிறுவியுள்ளனர். விண்வெளி வீரர்கள் தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்து நிலையம் திரும்பினர். இந்த ஆண்டில் நடைபெற்ற 12வது விண்வெளி நடைப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 12வது ஸ்பேஸ் வாக் பிராஜெக்ட் எப்படிச் செயல்பட்டது என்று அறிந்துகொள்ள இந்த 08:46:00 மணிநேர முழு வீடியோ பதிவைப் பாருங்கள்.

Gmail இல் கொட்டிக்கிடக்கும் மெயில்களை எப்படி எளிமையாக டெலீட் செய்வது? இது தெரிஞ்சா உங்கள் மெயில் பாக்ஸ் கிளீன்Gmail இல் கொட்டிக்கிடக்கும் மெயில்களை எப்படி எளிமையாக டெலீட் செய்வது? இது தெரிஞ்சா உங்கள் மெயில் பாக்ஸ் கிளீன்

இந்த ஆபத்தான ஸ்பேஸ் வாக் வேலையை வீரர்கள் செய்வதற்கு இது தான் காரணமா?

இந்த ஆபத்தான ஸ்பேஸ் வாக் வேலையை வீரர்கள் செய்வதற்கு இது தான் காரணமா?

வணிக பயன்பாட்டிற்காக நிலையத்தைத் திறந்த நாசாவின் சமீபத்திய நடவடிக்கையால், ஆற்றல் தேவையும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிகரித்துள்ளது. இதை நாசா கட்டாயம் சமாளிக்க வேண்டியதுள்ளது. மேலும், இந்த வணிக பயன்பாட்டின் வளர்ச்சியின் காரணமாக, ISS குழுவானது தற்போதுள்ள எட்டு பவர் சேனல்களில் உள்ள ஆறு சேனல்களை மேம்படுத்தி, அதில் கவனம் செலுத்தி போதுமான அளவு மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. இதற்காக, ஆபத்தான வேலைகளை ISS வீரர்கள் திறந்த விண்வெளியில் ஸ்பேஸ் வாக் பயணம் மூலம் நிறைவேற்றி வருகிறார்கள்.

Best Mobiles in India

English summary
International Space Station Reveal Astronauts Witness A Sunset And Sunrise For Every 90 Minutes : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X