எச்சரிக்கையா?- 500 டன் எடை., அப்படியே இந்தியா மீது விழுந்தா என்ன செய்வீங்க- ரஷ்யா கேட்ட பரபரப்பு கேள்வி!
அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், கனடா உள்ளிட்ட 12 நாடுகள் 1949 உலகப் போருக்கு பின்பு ஒப்பந்தங்கள் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு தான் நேட்டா. இதன்பின் இதில் கூடுதலாக 30 நாடுகள் இதில் உறுப்பு நாடுகளாக இணைந்தன. மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து பார்க்கையில், நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் மீது பிற நாடுகள் போர் தொடுக்கும் பட்சத்தில் அமைப்பில் பிற நாடுகள் உதவிக்கு வர வேண்டும் என்பதாகும். இந்த நிலையில் ரஷ்யா தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு உக்ரைன், தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய நேட்டோ அமைப்பில் இணைய விரும்பியது.

நேட்டோ அமைப்புடன் இணைக்கக் கூடாது
இதையடுத்து உக்ரைன் நாட்டை நேட்டோ அமைப்புடன் இணைக்கக் கூடாது என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தியதோடு இதற்கான உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. இது கைகூடாததை அடுத்து ரஷ்யா நேரடியாக உக்ரைன் மீது போர் தொடக்க தொடங்கியது. தற்போது உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து இருக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா கவுன்சில் கொண்டு வரும் தீர்மானத்தில், இந்தியா எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என ரஷ்யா கேட்டுக் கொண்டது.
சர்வதேச விண்வெளி நிலையம்
இந்த நிலையில் சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) இந்தியா அல்லது சீனா நிலப்பரப்பு மீது விழுந்தால் என்ன செய்வீர்கள் என ரஷ்யா கேள்வி எழுப்பி இருக்கிறது. கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற பல ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஐஎஸ்எஸ் திட்டத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் முக்கிய பங்குதாரர்கள் ஆவார்கள்.
ரஷ்யா மீது அமெரிக்க விதித்துள்ள பொருளாதார தடை
இந்த நிலையில் ரஷ்யா மீது அமெரிக்க விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக, சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்)-க்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடை நமது ஒத்துழைப்பை அழிக்கக்கூடும் எனவும் இந்தியா மற்றும் சீனாவை அச்சுறுத்த விரும்புகிறீர்களா எனவும் வாஷிங்டன்-க்கு ரஷ்ய விண்வெளி ஆய்வு மைய தலைவர் ரோஸ்கேோஸ்மஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ரோஸ்கோஸ்மஸ், தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய விண்வெளி ஆய்வு மைய தலைவர் ரோஸ்கேோஸ்மஸ் கேள்வி
ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ரோஸ்கோஸ்மஸ் பதிவிட்ட பதிவில், அமெரிக்கா ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) மீது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 500 டன் எடையுடன் கட்டமைக்கப்பட்டுள்ள விண்வெளி ஆய்வு மையம் இந்தியா அல்லது சீனா மீது விழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் அவர்களை அச்சுறுத்த விரும்புகிறர்களா? ஐஎஸ்எஸ் ரஷ்யாவுக்கு மேல் பறக்க வில்லை, உங்களுக்கு தான் ரிஸ்க் அதிகம், சந்திக்க தயாரா? என ரஷ்ய விண்வெளி ஆய்வு மைய தலைவர் ரோஸ்கேோஸ்மஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஆய்வு நிலையம்
விண்வெளியில், பூமிக்கு மேலே பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஆய்வு நிலையம் சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) ஆகும். இதனை நாம் நமது வெறும் கண்ணல்கூட பார்க்கலாம். இந்த நிலையத்தை 1998ஆம் ஆண்டில் விண்வெளியில் கட்டத் தொடங்கினர். தினமும் இந்த நிலையம் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது. இந்த நிலையத்தில் தங்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 16 சூரியன் உதயத்தையும், மறைதலையும் காண்கின்றனர். இந்த நிலையத்தின் நீளம் 239 அடி, அகலம் 356 அடி, உயரம் 66 அடி ஆகும். இது பூமியை நீள் வட்டப்பாதையில் மணிக்குச் சராசரியாக 27600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








