ரிஸ்க் எடுக்கும் NASA .. முடி அளவு மிஸ் ஆனாலும் சிதறி பூமி மேல் விழும் ISS.. பதட்டத்தில் விஞ்ஞானிகள்..
நாசா (NASA), சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) பாதுகாப்பாக மீட்பதற்கான வழிகளை மூளைச்சலவை செய்து வருகிறது. நாசா இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. ஏனெனில், முடி அளவு சிறிய தவறு நடந்தால் கூட, இது பூமியில் பேரழிவை ஏற்படுத்தக்கூடும்.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, வியாழன் அன்று நடந்த கலந்தாய்வில் தெரிவித்த தகவலின் படி, விண்வெளி ஏஜென்சியின் ஏரோஸ்பேஸ் சேஃப்டி அட்வைசரி பேனல் (ASAP), ISS-ஐ நிலத்தில் எந்த மனித உயிரிழப்புகளையும் ஏற்படுத்தாத வகையில், முடிந்த வரை பத்திரமாக தரையிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. ஆனால், இதில் பயங்கரமான ஆபத்தொன்று இருக்கிறது என்றும் கூறியுள்ளது.

ரிஸ்க் எடுக்காவிட்டால், விளைவுகள் இன்னும் மோசமாகிவிடும் என்றும் நாசா கூறியுள்ளது. வயதடைந்துவிட்ட ISS தரையிறக்க இப்போது இருக்கும் ஒரே வாய்ப்பாக நாசா 'ஸ்பேஸ் டக்' (space tug) என்ற முறையை பரிந்துரைத்துள்ளது. இது பாதிப்பில்லாத மற்றும் துல்லியமான முறைகளில் ISS ஐ "ஸ்பேஸ் டக்" செய்து, நாசா திட்டமிட்டுள்ள பாதுகாப்பான இடத்தில் தரையிறக்க உதவும்.
ஸ்பேஸ் டக் என்பது ஒரு விண்கலம் ஆகும். இது விண்வெளியில் ISS நிலையத்தை ஒரு சுற்றுப்பாதையில் இருந்து மற்றொன்றுக்கு மாற்ற பயன்படுத்தப்பட போகிறது. ஆனால், இந்த முறை செலவு குறைந்ததாக இல்லை என்பது மற்றொரு பக்க சிக்கலாக இருக்கிறது. அதேபோல், ஜோ பிடனின் அரசாங்கம் அதன் விண்வெளி பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
ISS நிலையத்தை ரிட்டைர்மென்ட் செய்ய நாசா ஏன் முடிவு செய்தது?
சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) 1980-களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. இது 15 ஆண்டு கால ஆயுட்காலத்துடன் செயல்படும் படி உருவாக்கப்பட்டது. ஆனால், ஐ.எஸ்.எஸ் ஏற்கனவே விண்வெளியில் அதன் நேரத்தை மீறிவிட்டது. இது கடந்த 24 ஆண்டுகளாக சுற்றுப்பாதையில் இன்னும் நிலைத்து நிற்கிறது. கணக்கிடப்பட 15 ஆண்டுகால கெடுவை தாண்டி ISS இன்னும் விண்வெளியில் பறந்து கொண்டிருக்கிறது.
ISS அதன் இறுதி நேரத்தை நெருங்கிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் ISS நிலையம் அதன் ஆயுட்காலத்தின் முடிவை நெருங்கும் என்பதனால், நாம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். ISS எப்போது செயல் இழக்கும் என்று அந்த சரியான நாளை நம்மால் கணக்கிட முடியாது என்பதனால், இப்போது இது பூமி மேல் விழக்கூடிய பேர் ஆபத்தாக பார்க்கப்படுகிறது.
2030 ஆம் ஆண்டிற்குள் ISS ஐ தரையிறக்க விரும்புவதாக நாசா கூறியுள்ளது. ஆனால், இதில் இருக்கும் பெரும் சிக்கலே, சர்வதேச விண்வெளி நிலையம் பெரிய அளவு பொருளாக விண்வெளியில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதன் மிகப்பெரிய அளவு காரணமாக, பூமியின் (earth) பரந்த பகுதியில் உள்ள மக்களுக்கு இது ஒரு தீவிர ஆபத்தை ஏற்படுத்தும் என்பதனால் விஞ்ஞானிகள் பதட்டத்தில் உள்ளனர்.
இதனால், தான் நாசா முடிந்தவரை வேகமாக ISS ஐ தரையிறக்க பாதுகாப்பான எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. நாசா, விண்வெளி இழுவையை பயன்படுத்தி ஐ.எஸ்.எஸ். நிலையத்தை ஸ்பேஸ் டக் செய்து, துல்லியமான திட்டமிடப்பட்ட வளிமண்டலத்தில் தள்ளும். அங்கு அது மீண்டும் நுழையும் போது எரிய ஆரம்பித்து, பாயின்ட் நிமோ (Point Nemo) எனப்படும் கடலின் தொலைதூரப் பகுதியில் விழும் என்று நாசா கூறியுள்ளது.
இந்த விஷயத்தை துல்லியமாக செய்து முடிக்க நாசாவிற்கு பல சவால்கள் காத்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் உள்ள முக்கிய சவால்கள் என்று பார்க்கையில், இவ்வளவு பெரிய அளவு கொண்ட நிலையத்தை துல்லியமாக பாயிண்ட் நிமோ பகுதியில் விழவைக்க வேண்டும். அடுத்தபடியாக இதை செய்து முடிக்க பெரிய பட்ஜெட் தேவைப்படுகிறது. இந்த திட்டத்திற்காக 180 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.
ஆனால், இதன் உண்மையான கட்டுமானத்திற்கு $1 பில்லியன் வரை தேவைப்படலாம் என்று நாசா கூறியுள்ளது. எது எப்படியாக இருந்தாலும் நாசா ISS ஐ பத்திரமாக தரையிறக்க வேண்டும். இல்லையென்றால், அது பூமியில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் விழுந்து சேதப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








