ஐஎஸ்டி கால்களின் கட்டணங்களை அதிரடியாக குறைக்க புதிய திட்டம்

Posted By: Karthikeyan
ஐஎஸ்டி கால்களின் கட்டணங்களை அதிரடியாக குறைக்க புதிய திட்டம்

இதுவரை வெளிநாடுகளுக்கு போன் செய்ய வேண்டும் என்றால் அதிக கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் தொலைத் தொடர்புத் துறை தற்போது ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது. அதாவது டிஆர்எஐ என்ற ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது. இந்த திட்டத்தின் மூலம் இனி ஐஎஸ்டி கால்களின் கட்டணம் கணிசமாக குறையும் என்று கூறப்படுகிறது.

இந்த டிஆர்எஐ மூலம் ஒரு தொலைத் தொடர்பு நிறுவத்தைத் சேர்ந்தவர் வேறொரு தொலைத் தொடர்பு நிறுவனம் வழங்கும் கார்டு மூலம் ஐஎஸ்டி கால்களை விடுக்க முடியும்.

எடுத்துக்காட்டாக இதுவரை இந்தியாவில் உள்ள வோடோபோன் வாடிக்கையாளர்கள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு போன் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் நெட்வொர்க்கின் மூலமே செய்ய முடியும். ஆனால் இந்த புதிய திட்டத்தின் மூலம் அவர்கள் ரிலையன்சின் குளோபல் காலிங் கார்டை பயன்படுத்தி ஐஎஸ்டி கால்களை விடுக்க முடியும்.

இந்த புதிய திட்டம் பன்னாட்டு நிறுவனங்களான பிடி, எடி&டி மற்றும் ஆரஞ்சு போன்ற நிறுவனங்கள் தங்கள் வாய்ஸ் காலிங் கார்டுகளை இந்தியாவில் விற்பதற்கு அனுமதிக்கிறது. மேலும் இந்த திட்டம் எல்லா நெட்வொர்க் ஆபரேட்டர்களின் வாய்ஸ் காலிங் கார்டுகளையும் பயன்படுத்த அனுமதிக்கிறது.

இதன் மூலம் ஐஎஸ்டி கால்களின் கட்டணம் கணிசமாக குறையும் என்று நம்பலாம். குறிப்பாக வளைகுடா நாடுகளில் அதிகமான நெட்வொர்க்கை வைத்திருக்கும் ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தின் வாய்ஸ் காலிங் கார்டைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு போன் செய்யும் போது அந்த நிறுவனம் குறைந்த கட்டணத்தையே வாடிக்கையாளர்களிடமிருந்து வசூல் செய்யும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot