Home
News

ஆப்பிள் நிறுவனத்தை காப்பியடிக்கும் சீனாவின் சியோமி,!!

By Meganathan

சீனா நாட்டினர் போலிக்கு பெயர் போனவர்கள் என்பது உலகம் அறிந்த ஒன்று தான். சிறிய கருவியில் துவங்கி, ஸ்மார்ட்போன், உணவு, வங்கி என நாம் கற்பனையில் நினைக்காதவற்றையும் போலியாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இது போன்ற போலி சந்தையில் இருந்து அறிமுகமாகி, கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் தான் சியோமி. சீனாவின் ஆப்பிள் நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கும் இந்த நிறுவனத்தின் சில கருவிகள் அச்சு அசலாக ஆப்பிள் கருவிகளை போன்றே இருக்கின்றது.

சியோமி எம்ஐ4

சியோமி எம்ஐ4

மெட்டல் வடிவமைப்பு, ஸ்பீக்கர், ஆன்டெனா பொருத்தப்பட்டிருக்கும் முறை என பல்வேறு அம்சங்கள் சியோமி நிறுவனத்தின் எம்ஐ4 கருவியை ஐபோன் போன்று காட்டுகின்றது.

வார்த்தை

வார்த்தை

இதே போல் எம்ஐ4 கருவியின் வெளியீட்டு விழாவில் ஸ்டீவ் ஜாப்ஸ் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை மற்றும் அவர் சாயலில் உடையணிந்து வந்திருந்தார் சியோமி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஹியுகோ பாரா.

எம்ஐ பேட்

எம்ஐ பேட்

பார்க்க ஐபேட் மினி போன்றே காட்சியளிக்கும் இந்த கருவி சியோமியின் எம்ஐ பேட் கருவியாம். இரண்டும் ஒரே மாதிரி காட்சியளிப்பதோடு, ஐஓஎஸ் 7 போன்றே காட்சியளிக்கும் வகையில் இண்டர்ஃபேஸ் வடிவமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எம்ஐ பாக்ஸ்

எம்ஐ பாக்ஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் டிவி போன்றே சியோமி நிறுவனமும் தனது பங்கிற்கு அறிமுகம் செய்த கருவி தான் எம்ஐ பாக்ஸ்.

சியோமி எம்ஐ ரவுட்டர் மினி

சியோமி எம்ஐ ரவுட்டர் மினி

ஆப்பிள் நிறுவனத்தின் மேஜிக் பேட் கருவி கருப்பு நிறத்தில் இருந்தால் அது சியோமியின் ரவுட்டர் மினி.

எம்ஐ ஸ்டோர்

எம்ஐ ஸ்டோர்

கருவிகளோடு இல்லாமல் சியோமி விற்பனை நிலையங்களும் ஆப்பிள் ஸ்டோர் போன்றே காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எம்ஐ3 கேமரா லென்ஸ்

எம்ஐ3 கேமரா லென்ஸ்

சற்றே உற்று நோக்கினால் எம்ஐ3 கருவியின் கேமராவும் ஆப்பிள் கேமரா லென்ஸூம் ஒரே மாதிரி இருக்கின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Read here in some Interesting Things Xiaomi blatantly ripped off from Apple.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X