ஆஹான் ஸ்பெஷல், கூகுள் குறித்த வியப்பூட்டும் விஷயங்கள்
யாருக்கு எதில் சந்தேகம் என்றாலும் முதலில் நம் நினைவுக்கு வருவது கூகுள் தான், உலகம் முழுவதிலும் நாள் முழுக்க கற்பனை செய்ய முடியாத அளவிலான கேள்விகளை எதிர்கொள்ளும் கூகுள் குறித்து உங்களுக்கு தெரிந்திராத வியப்பூட்டும் தகவல்களை கீழே வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
கூகுள் பணியாளர்களில் 14% பேர் கல்லூரி செல்லாதவர்கள் ஆவர். உண்மையில் கூகுள் பேக்ரப் என்று அழைக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனர்கள் கூகுளை 1 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர். கூகுளின் முதல் டூடுள் பர்னிங் மேன் விழாவிற்காக தயாரிக்கப்பட்டது, இவ்விழாவில் கூகுள் இணை நிறுவனர்கள் கலந்து கொண்டனர். கூகுளில் "askew" என்று டைப் செய்து தேடினால் அதற்கான தகவல்கள் வலது புறம் சாய்ந்து இருக்கும். கூகுள் நிறுவனத்தினன் ஊழியர் யாரேனும் மரணித்தால் அவர்களின் குடும்பத்தாருக்கு உயிர் இழந்தவர் பெற்று வந்ததில் பாதி சம்பளம் வழங்கப்படுதோடு அவர்களது குழந்தைகளுக்கு 19 வயது ஆகும் வரை மாதம் $1000 வழங்கப்படுகின்றது. கூகுள் நிறுவனம் புழக்கத்தில் இருக்கும் 129 மில்லியன் புத்தகங்களை 2020 ஆம் ஆண்டிற்குள் ஸ்கேன் செய்து முடிக்க திட்டமிட்டிருக்கின்றது. நாள் ஒன்றுக்கு கூகுளில் தேடப்படுவதின் 16% தேடல்களை கூகுள் அதற்கு முன் கேள்விப்படாததாகவே இருக்கின்றது. கூகுள் நிறுவனம் ஒட்டகம் ஒன்றை வாடைக்கு எடுத்து பாலைவனங்களின் ஸ்ட்ரீட் வியு புகைப்படங்கள் எடுக்க பயன்படுத்தியது. கூகுளுக்கு பதிலாக பிங் தளத்தை பயன்படுத்த மைக்ரோசாப்ட் பணம் கொடுக்கின்றது. கூகுளில் "I'm feeling lucky" பட்டன் மூலம் கூகுள் நிறுவனம் ஆண்டிற்கு $110 மில்லியன்களை ஈட்டி வருகின்றது. கூகுள் நிறுவனம் விளம்பரங்களின் மூலம் ஆண்டிற்கு $20 பில்லியன்களை சம்பாதிக்கின்றது. ஒவ்வொரு நிமிடமும் கூகுளில் 20 லட்சம் தேடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ஜிமெயில் சேவை துவங்கப்பட்டதால் அது முட்டாள் தினத்தை முன்னிட்டு மக்களை குறும்பு செய்ய துவங்கப்பட்டதாக கருதப்பட்டது. ஃபயர்பாக்ஸ் வெப் ப்ரவுஸரின் முதன்மை டெவலப்பர் இன்று கூகுள் க்ரோம் ப்ரவுஸருக்காக பணியாற்றி வருகின்றார். 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி கூகுள் தன் பணியாளர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது. அதில் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது, அந்த மின்னஞ்சல் குறும்பு செய்ய அனுப்பப்படவில்லை. கூகுளின் முதல் டுவீட் பைனரி கோடு மூலம் எழுதப்பட்டது, அந்த டுவீட்டில் "I'm feeling lucky" என எழுதப்பட்டிருந்தது. கூகுளின் முதல் கம்ப்யூட்டர் ஸ்டோரேஜ் லெகோ மூலம் வடிவமைக்கப்பட்டது. தன்னை தானே ப்ரோகிராம் செய்து கொள்ளும் கம்ப்யூட்டர் ஒன்றை கூகுள் நிறுவனம் தயாரித்து வருகின்றது. தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக கூகுள் நிறுவனம் பணியாற்ற சிறந்த நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கூகுள்

கூகுள்

கூகுள்

டூடுள்

கூகுள்

கூகுள்

கூகுள்

கூகுள்

கூகுள்

கூகுள்

கூகுள்

கூகுள்

கூகுள்

கூகுள்

கூகுள்

கூகுள்

கூகுள்

கூகுள்

கூகுள்

கூகுள்


Click it and Unblock the Notifications