இந்தியாவே வெறுக்கும் ஒரு முகம் : நம்ம ஏர்டெல் 4ஜி பொண்ணு..??!
அதற்கு காரணம் சாஷா இல்லை, அவர் நடித்த ஏர்டெல் 4ஜி விளம்பரம்.!
இந்திய டிவி விளம்பரங்களிலேயே மிகவும் வெறுக்க கூடிய முகம் என்ற கடந்த சர்வே ஒன்றில், சாஷா சேத்ரிக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டது.
ஆனால் அதற்கு காரணம் சாஷா இல்லை, அவர் நடித்த ஏர்டெல் 4ஜி விளம்பரம் அதீதமான முறையில் தொடர்ச்சியாக டிவிக்களில் வெளியாகி கொண்டிருந்தது தான் அதற்கு காரணம். ஏனெனில் ஏர்டெல் 4ஜி-யை விட, சாஷா தான் நம் நினைவில் அதிகம் நிற்கிறாள்.
சாஷா பற்றிய மேலும் சில சுவாரசியமான் தகவல்களை தெரிந்து கொண்டால், ஏர்டெல் நிறுவனம், அதன் விளம்பரங்கள் என்பதையும் தாண்டி அவள் மேலும் நம் நினைவில் அதிகம் நிற்பாள் என்பது தான் நிதர்சனம்.

பட்டம் :
சாஷா, மும்பையில் உள்ள சேவியர் இன்ஸ்ட்டியூட் ஆஃப் கம்யூனிக்கேஷன் னில் விளம்பரத்துறையில் பட்டம் பெற்றவர் ஆவார்.

ட்ரெய்னீங் காப்பிரைட்டர் :
ஏர்டெல் விளம்பரத்தில் அறிமுகம் ஆவதற்கு முன்பு ஒரு விளம்பர நிறுவனத்தில் ட்ரெய்னீங் காப்பிரைட்டர் ஆக பணிபுரிந்துள்ளார்.

விளம்பரத்துறை :
ஏர்டெல் 4ஜி விளம்பரம் மூலம் தான் இவர் விளம்பரத்துறைக்குள் நடிக்க நுழைந்தார், பின்பு தான் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமூடி :
ஏர்டெல் 4ஜி விளம்பரத்திகாகத்தான் சாஷா தனது நீளமான தலைமூடியை வெட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மியூசிக் :
சாஷா இசையோடு கலந்த ஒரு நபர் என்பதும், தற்போது சில மியூசிக் ஆல்பங்களில் பங்களித்து வருகிறார்.

பாலிவுட் :
2015-ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படமான 'கட்டி பட்டி' திரைப்படத்தில் இசை கலைஞர் வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேராதூன் :
சாஷா, உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரமான தேராதூனில் இருந்து தற்போது மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications