தெரியுமா..? கூகுள், உங்களை தற்கொலை செய்து கொள்ள விடாது..!

|

என்ன கேள்வி கேட்டாலும் 'டக் டக்' என்று பதில் சொல்லும் கூகுள், ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் 'குண்டக்க மண்டக்க' பதில் சொல்லும் அது என்ன கேள்வி என்று உங்களுக்கு தெரியுமா..? சரி அதை விடுங்கள்... கூடுள் இமேஜஸில் ஒரு கேம் விளையாடலாம் அது பற்றியாவது உங்களுக்கு தெரியுமா..??

கூகுள் மேப்ஸ் : மறைக்கப்படும் 'ரகசிய பகுதிகள்'..!

சரி, தெரிந்து கொள்வோம் வாருங்கள். கூகுள் - உலகின் மிகப்பெரிய தேடுபொறி தளம் மட்டும் தான் என்று நினைப்பவர்களின் எண்ணம் இன்று மாறிவிடும். சரி வாருங்கள் அந்த 'குண்டக்க மண்டக்க' கேள்வி என்ன, அந்த சுவாரசியமான கேம் என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொள்வோம்...!

தற்கொலை :

தற்கொலை :

நான் தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூகுள் சர்ச் செய்தால், உங்கள் நாட்டின் தற்கொலை ஹெல்ப்லைன் தொலைபேசி எண்ணை தான் கூகுள் முதலில் காட்டும்..!

கடிதம் :

கடிதம் :

தன் தந்தை பிறந்த நாளுக்கு ஒரு நாள் விடுமுறை கேட்டு கூகுள் நிறுவனத்திற்கு சிறுமி எழுத கடிதம் ஒன்றிற்கு பதில் அளித்தது மட்டுமின்றி, அவள் தந்தைக்கு 1 வாரம் விடுமுறையும் வழங்கியது கூகுள் நிறுவனம்.

நினைவு :

நினைவு :

தனது கலிபோர்னியா தலைமையகத்தில் அழிந்து போன டைனோஸர் வகை ஒன்றின் எலும்புக்கூடை நிறுவியுள்ளது. கூகுள் நிறுவனமும் அதுபோல அழிந்துவிடக்கூடாது என்பதை தங்கள் ஊழியர்களுக்கு நினைவுபடுத்தவே அது நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேம் :

கேம் :

அடாரி ப்ரேக்அவுட் (atari breakout) என்று டைப் செய்தால் கூகுள் இமேஜஸ்-ல் கேம் ஒன்று விளையாடலாம். இப்போதே முயற்சி செய்திடுங்கள்.

வாரம் ஒரு நிறுவனம் :

வாரம் ஒரு நிறுவனம் :

2010-ஆம் ஆண்டில் இருந்து வாரம் ஒரு நிறுவனத்தை பெற்றுக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ஸ் கிரகத்தின் மேப் :

மார்ஸ் கிரகத்தின் மேப் :

கூகுள் மார்ஸ் (Google Mars) என்ற தேடுபொறிக்கு செல்லுங்கள் உங்களால் மார்ஸ் கிரகத்தின் மேப்களை அங்கு பார்க்க முடியும்.

வார்த்தை :

வார்த்தை :

நீங்கள் எந்த நம்பரை டைப் செய்தாலும், அதை வார்த்தையாக சொல்லிவிடும், கூகுள்.

இதுவரை மொத்தம் :

இதுவரை மொத்தம் :

கூகுள் முகப்பு பக்கம் இதுவரை மொத்தம் 28 வேலிடேஷன் எரர்ஸ் (validation errors) மற்றும் 5 வார்னிங் (Warning) பெற்றுள்ளது. அதை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

திருமண திட்டம் :

திருமண திட்டம் :

கூகுள் வெட்டிங் (Google wedding ) மூலம் உங்கள் திருமண திட்டங்களை வகுக்கலாம்.

நட்சத்திரம் :

நட்சத்திரம் :

கூகுள் ஸ்க்கை மேப் (Google Sky Maps) மூலம் நீங்கள் நட்சத்திரங்களை பார்க்க முடியும்.

ஸூம் அவுட் :

ஸூம் அவுட் :

கூகுள் மேப்ஸ்-ல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஸூம் அவுட் செய்து பார்த்தால் பூமி உருண்டை மட்டுமின்றி நிஜமான மேகங்கள் மிதப்பதையும் பார்க்க முடியும்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
கூகுள் வெறும் ஒரு தேடுபொறி தளம் மட்டும்மல்ல. மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X