அலெக்சாண்டர் கிரஹாம் பெல் பிறந்த நாள் சிறப்பு தொகுப்பு
இன்று தொலைபேசியை கண்டறிந்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் அவர்களின் பிறந்த தினம். 1847 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார் கிரஹாம் பெல். அமெரிக்க கண்டுபிடிப்பாளரும், காது கேளாதவர்களுக்கு ஆசிரியராகவும் திகழ்ந்த கிரஹாம் பெல் குறித்து உங்களுக்கு தெரிந்திராத சில விஷயங்களை பாருங்கள்..

ட்ரான்ஸ்மிட்
கிரஹாம் பெல் தனது 18 வயது முதல் பேச்சுகளை ட்ரான்ஸமிட் செய்யும் பணியினை துவங்கினார்.

டெலிகிராஃப்
1874 ஆம் ஆண்டு தொலைபேசியை உருவாக்கும் ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபட்டார்.

பணி
மார்ச் 10, 1876 ஆம் ஆண்டு தன் உதவியாளர் தாமஸ் வாட்ஸ்னுடன் ஆய்வுகளை துவங்கினார்.

ட்ரான்ஸ்மிட்
முதன் முதலில் பெல் ட்ரான்ஸ்மிட் செய்தது "Watson, come here; I want you."

அறிமுகம்
1876 ஆம் ஆண்டு பென்சில்வேனியாவில் தொலைபேசி உலகிற்கு அரிமுகம் செய்யப்பட்டது.

நிறுவனம்
பெல் தொலைபேசி நிறுவனம் 1877 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

பரிசு
1880 ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசு பெல் அவர்களின் கண்டுபிடிப்பிற்கு சுமார் 50,000 பிரான்சஸ்களை வழங்கியது.

ஆய்வகம்
கிடைத்த பரிசு தொகையை வாஷிங்டன் நகரில் பெல் வோல்டா ஆய்வகத்தை நிறுவ பயன்படுத்தியதோடு தன் உதியாளர்களுடன் சேர்ந்து போட்டோபோனையும் கண்டறிந்தார்.

கண்டுபிடிப்புகள்
1886 ஆம் ஆண்டு பெல் ஆடியோமீட்டர், இன்டக்ஷன் பேலன்ஸ் மற்றும் முதல் வேக்ஸ் ரெக்கார்டிங் சிலண்டர் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தினார்.

புவியியல்
தேசிய புவியியல் சமூகத்தின் இணை நிறுவனராக இருந்ததோடு, 1896 முதல் 1904 ஆம் ஆண்டு வரை கிரஹாம் பெல் அதன் தலைவராகவும் இருந்தார்.


Click it and Unblock the Notifications