சுற்றுலா தேதி டிசம்பர் 8., டிக்கெட் கட்டணம் ரூ.500 கோடி., வேற லெவல் பயணம்- தீவிர பயிற்சியில் தொழிலதிபர்!

|

விண்வெளி சுற்றுலாவை மேற்கொள்ள தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் முணைப்புடன் செயல்படுத்தி வருகிறது. விர்ஜின் கேலக்டிக், ஸ்பேஸ் எஸ்க், ப்ளூ ஆர்ஜின் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு விண்வெளி பயணத்துக்கான நடவடிக்கையில் அடுத்தடுத்த கட்டம் முன்னேறி வருகின்றன. பெரும் பணக்காரர்களான ஜெஃப் பெசோஸ், ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் தங்களது விண்வெளி பயணத்துக்கான நடவடிக்கையில் தொடர்ந்து முன்னேற்ற ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். விண்வெளி பயணம் என்ற குறி பலரது கனவாக இருக்கிறது. பயனர்களை விண்வெளிக்கு சுற்றுலா பயணம் அழைத்து செல்வதே இந்த அனைத்து நிறுவனங்களின் நோக்கமாகும்.

ஜப்பானை சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் யுசகு மேசவா என்பவர் விண்வெளி சுற்றுலா மேற்கொள்வதற்கு முன்பதிவு செய்திருந்தார். இவருடன் இவரது உதவியாளராக இருக்கும் யோசோ ஹிரானோவும் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த சுற்றுலா பயணத்துக்கு ஜப்பான் தொழிலதிபர் ரூ.500 கோடி கட்டணம் செலுத்தியுள்ளார்.

விண்வெளி பயணம்

விண்வெளி பயணம்

ஜெஃப் பெசோஸ்-ன் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம், எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ், ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் ஆகிய நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலா பயணத்தில் முணைப்புகள் காட்டி வருகின்றனர். தொழிலதிபரான பிரான்சன் தனது விர்ஜின் கேலக்டிக் மூலம் உருவாக்கப்பட்ட ஷிப்-ல் விண்வெளி பயணம் மேற்கொண்டார். ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஷிப் கர்மன் கோட்டிற்கு மேலே பயணம் செய்தது. இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விண்வெளி எல்லை ஆகும். ஸ்பேஸ் எக்ஸ் தொடர்ந்து நாசா அளவிலான தங்களது சேவையை மேம்படுத்தி வருகிறது.

விண்வெளி பயணம் சோயஸ் விண்கலம் மூலம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. சோயஸ் விண்கலம் மூலம் தனது உதவியாளருடன் தொழிலதிபர் பயணிக்க இருக்கிறார். இவர்களுக்கு விண்வெளி செய்தவற்கான தீவிர பயிற்சி கஜகஸ்தானில் உள்ள ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தில் நடத்தப்பட்டு வருகிறது. ஜப்பான் தொழிலதிபர் யுசகு மேசவா மற்றும் அவரது உதவியாளருக்கு ரஷ்ய வீரரான அலெக்சாண்டர் மிகர்கின் பயிற்சி அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய தொழிலதிபர் யுசாகு மேசாவா

ஜப்பானிய தொழிலதிபர் யுசாகு மேசாவா டிசம்பர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளை ஒருங்கிணைக்கும் நிறுவனமான ஸ்பேஸ் அட்வென்ச்சர்ஸ், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வு அறிவப்பை வெளியிட்டுள்ளது. அதில் மெய்ஸ்வா மற்றும் அவரது தயாரிப்பு உதவியாளர் யோசோ டிசம்பர் 8 2021 அன்று பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து ரஷ்ய சோயுஸ் விண்கலம் எம்எஸ் 20 மூலம் பறக்க திட்டமிட்டுள்ளார்.

சோயுஸ் விண்கலம் மூலம் விண்வெளி பயணம்

அதேபோல் மெய்ஸ்வா குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் எனவும் அவர் விண்வெளி பயணம் மேற்கொள்வதான வாய்ப்பை வழங்குவதில் பெருமை கொள்வதாகவும் ஸ்பேஸ் அட்வென்சர்ஸ் இன்க் தலைவர் மற்றும் சிஇஓ எரிக் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இவர்கள் சோயுஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு பறக்க இருக்கின்றனர். அதேபோல் விண்வெளியில் பயணம் மேற்கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் தனது சொந்தமான யூடியூப் சேனல் மூலம் நேரலை யூடியூப்பில் இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் அங்கு 12 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்

தனியார் நிறுவனம் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா முதன்முறையாக கடந்த மே மாதம் சோதனை செய்தது. சரியாக 9 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க மண்ணில் இருந்து முதன் முறையாக மனிதர்களை ஏந்திக்கொண்டு ராக்கெட் விண்ணுக்கு சென்றது. தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மூலம் இந்த திட்டம் வெற்றிப்பெற்றதையடுத்து வரும்காலங்களில் பல தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு விண்வெளித்துறையில் அதிகரிக்கும் என்று நாசா அமைப்பு நம்பிக்கை தெரிவித்தது.

முதல் தனியார் நிறுவனம் என்றும் பெருமை

முதல் தனியார் நிறுவனம் என்றும் பெருமையை எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றது. முன்னதாக ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூலம் மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிறுவனம் ஒரு இருக்கைக்கு சுமார் ரூ.600 கோடி கட்டணம் வசூலிக்கும் என கூறப்பட்டது. உலகளவில் உள்ள ஆன்லைன் வர்த்தக தளங்களில் முன்ணிகளில் ஒன்றாக இருப்பது அமேசான். இதன் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரர் மார்க்கும் விண்வெளிக்கு அவர்களது சொந்த நிறுவனத்தின் மூலம் பறந்தார்.

கர்மன் கோட்டிற்கு மேலே பயணம்

உலகளவில் உள்ள ஆன்லைன் வர்த்தக தளங்களில் முன்ணிகளில் ஒன்றாக இருப்பது அமேசான். இதன் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அடுத்த மாதம் 20 ஆம் தேதி ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரர் மார்க்கும் விண்வெளிக்கு பயணித்தார். பயனர்களை விண்வெளிக்கு சுற்றுலா பயணம் அழைத்து செல்வதே இந்த அனைத்து நிறுவனங்களின் நோக்கமாகும். ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஷிப் கர்மன் கோட்டிற்கு மேலே பயணித்தது குறிப்பிடத்தக்கது.

விர்ஜின் கேலக்டிக் விண்வெளி பயணம்

விர்ஜின் கேலக்டிக் விண்வெளி பயணம் மிகக் குறைவு என்பதை சுட்டிக்காட்டப்பட்டது. ரிச்சர்ட் பிரான்சனின் நிறுவனமான விர்ஜின் கேலக்டிக் உருவாக்கிய சூப்பர்சோனிக் விண்வெளி பயணம் செய்த முதல் நபர் ஆனார். ப்ளு ஆர்ஜின் நிறுவனம் விண்வெளி ஓடங்களையும், விண்வெளி வாகனங்களுக்குத் தேவையான பொருட்களையும் தயாரிக்கிறது. பயணிகளை மிகப் பாதுகாப்பாக விண்வெளிக்கு அழைத்துச் சென்று, திரும்ப அழைத்து வருவதற்கான ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வுக்காக நியூ செப்பர்டு (என்எஸ்) என்ற பெயரில் ராக்கெட்டை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பிச் சோதித்தது.

Best Mobiles in India

English summary
Intensive training for Japanese businessman to go on a space trip in December

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X