இனி இன்டர்நெட்டிலும் டிவி பார்க்கலாம்?! இன்டல் புதிய திட்டம்!

Posted By: Staff
இனி இன்டர்நெட்டிலும் டிவி பார்க்கலாம்?! இன்டல் புதிய திட்டம்!

இன்டர்நெட் டிவி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது, தொழில் நுட்பத்தின் சிறப்பை உணர்த்தும் இன்டல் நிறுவனம். தகவல்களையும், வீடியோக்களையும் பார்க்க பயன்படுத்தப்பட்டு வந்த இன்டர்நெட் சேவையில், இனி டிவி சேவையையும் பெற முடியும் என்ற தகவல் நிச்சயம் அனைவருக்கும் மனதில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும்.

கம்ப்யூட்டரை காட்டி இதில் டிவியும் பார்க்க முடியுமா? என்ற நையாண்டித்தனமான வார்த்தைகளை மெய்பிக்க வருகிறது இன்டர்நெட்டின் புதிய டிவி சேவை. அதே சமயம் இந்த இன்டர்நெட் டிவி திட்டம், கேபில் ஆப்ரேட்டர்களுக்கெல்லாம் ஒரு நெருக்கடியை உண்டு செய்யும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இது சம்மந்தமாக இன்டல் நிறுவனம் மற்ற மீடியாக்களிடம், 'வெர்ச்சுவல் கேபில் ஆப்பரேட்டர்' பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றது.

அதாவது இன்ட்ரநெட் மூலமாக டிவி சேனல்களை பார்க்கும் தொழில் நுட்பத்தினை வழங்குவதற்கு இன்டல் நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்று தெரிய வந்துள்ளது. நவீன வாழ்க்கைக்கு பழகிய அனைவரும் எந்த நேரமும் இன்டர்நெட் முன்பு தான் இருக்கின்றனர். ஏதோ டிவி பார்ப்பது போன்ற விஷயங்களுக்காக மட்டும் தான் கம்ப்யூட்டரை விட்டு வெளியே வருகின்றனர்.

இனி இன்டல் நிறுவனம் முயற்சி செய்து வரும் இந்த இன்டர்நெட் டிவி சேவை வந்துவிட்டால் அனைவரும் எப்பொழுதும் இன்டர்நெட் முன்பு தான் இருப்பார்கள் என்று தான் தோன்றுகிறது. 2012-ஆம் ஆண்டு இந்த இன்டர்நெட் டிவி சேவையை இன்டல் நிறுவனம் வெளியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்