இன்று முதல் அனைவருக்கும் இ-பாஸ் உண்மையா? இவர்களுக்கு மட்டும் நிச்சயம் இ-பாஸ் கிடையாது!

|

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழக முதல்வரின் சமீபத்திய அறிவிப்பின் படி இன்று முதல் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது உண்மை தானா? இன்று முதல் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறதா? யாருக்கெல்லாம் இந்த நேரத்திலும் இ-பாஸ் கிடையாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது

குறிப்பாக வெளியூரிலிருந்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்பொழுது இந்த இ-பாஸ் முறையை மத்திய அரசு ரத்து செய்து கொள்ளலாம் எனத் தனது சமீபத்திய அன்லாக் செயல்முறையில் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும் மாநில அரசு அதன் அதிகாரத்தை வைத்து அதை அமல்படுத்தப் போவதில்லை என அறிவித்தது.

இ-பாஸ் ஒப்புதல்

இதற்கிடையே மாநிலத்தில் இ-பாஸ் ஒப்புதல் வழங்கும் பணியில் குளறுபடிகள் நடப்பது பற்றி புகார் அளிக்கப்பட்டது. இ-பாஸ் ப்ரோக்கர்கள் மூலம் காசு கொடுத்து மட்டுமே ஒப்புதல் கிடைக்கும் நிலையும் உருவானது, இதற்கு சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. லஞ்சம் கொடுத்தால் இ-பாஸ் கிடைக்கும் என்ற விவகாரத்தை ஆதாரத்தோடு மக்களுக்குத் தெரியப்படுத்தியது.

சென்னையில் ஜப்பான் ஸ்டைலில் புதிய டிராபிக் சிக்னல் அறிமுகம்! அடுத்து தமிழக முழுவதும் இதுதான்!சென்னையில் ஜப்பான் ஸ்டைலில் புதிய டிராபிக் சிக்னல் அறிமுகம்! அடுத்து தமிழக முழுவதும் இதுதான்!

ஆகஸ்ட் 17ஆம் தேதி

இந்த குற்றச்சாடுகளை மறுத்த தமிழ்நாடு முதல்வர், "மாநிலத்தில் இ-பாஸ் முறையை இப்போதைக்கு ரத்து செய்யப் போவதில்லை" என்று தெளிவாகக் கூறியிருந்தார். இதற்குப் பதிலாக இன்று முதல் இ-பாஸ் முறையில் இப்போது சில தளர்வுகளை ஏற்படுத்தி அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இன்று முதல் இ-பாஸ்

அதன்படி, ஆகஸ்ட் 17ஆம் தேதி, இன்று முதல் இ-பாஸ் கோரி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஒப்புதல் உடனடியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உடனடி ஒப்புதல் என்பது மாநிலத்திற்குள்ளான போக்குவரத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்கள் செல்ல முயற்சிக்கும் பயணிகளுக்கு பழைய இ-பாஸ் முறையே தொடரும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏன் இந்த நடைமுறை

இன்று முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அனைவருக்கும் இ-பாஸ் வழங்குவதற்குப் பதிலாக இந்த திட்டத்தை அரசு கைவிடலாம் என்று பலர் கருது தெரிவித்துள்ளனர்.விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் என்றால், ஏன் இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசை நோக்கி திமுக உள்பட பல்வேறு அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளது.

விரைவில் களமிறங்கும் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் மாடல்.!விரைவில் களமிறங்கும் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் மாடல்.!

கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும்

கொரோனா கண்காணிப்பைத் தீவிரப்படுத்தப் பரிசோதனை முறையை அரசு அதிகரிக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் இ-பாஸ் என்ற அரசின் தற்போதைய அறிவிப்பு நிச்சயம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும் என்று மருத்துவ வல்லுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Instant e-passes for everyone who applies from August 17 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X