மூன்றாம் தரப்பு ஆஃப்ஸ்களும் அதிலுள்ள சிக்கல்களும் தீர்வுகளும்.!

கூகுள் பிளே ஸ்டார் அல்லாது வேறு தளங்களில் இருந்து ஆப்களை டவுன்லோட் செய்யும் பொது செய்ய வேண்டியவை மற்றும் அதன் விளைவுகள்.

By Ilamparidi
|

ஆண்ட்ராய்ட் போன் உபயோகிப்பாளர்களுக்கு தங்களுக்கு தேவையான செயலிகளை கூகுள் பிளே ஸ்டார் மூலம் டவுன்லோட் செய்துகொள்வதே எளிய மற்றும் பாதுகாப்பான வழிமுறையாகும்.ஏனெனில் ஆண்ட்ராய்ட் போனை பயன்படுத்துபவர்கள் தங்களது அத்தியாவசிய மற்றும் பொழுதுபோக்கு விடயங்களுக்காக பெரும்பாலும் அதற்கான ஆப்களையே டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

அவ்வாறு,நமக்கு தேவையான ஆஃப்களை நமது மொபைல் போன்களில் டவுன்லோட் செய்து உபயோகப்படுத்துகையில் அதிக கவனம் தேவை.வைரஸ் போன்றவைகள் பரவும் அபாயமும் உள்ளது.கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ஆப்களை டவுன்லோட் செய்து உபயோகிக்கப்படுத்தலாம்.

ஏதேனும் தவிர்க்க இயலாத நேரங்களின் போது வேறு தளங்களில் இருந்து ஆப்களை டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்னவென்று விளக்குகிறது இந்தப் பதிவு.

செட்டிங்ஸ்:

செட்டிங்ஸ்:

கூகுள் பிளே ஸ்டார் அல்லாத தளங்களிலிருந்து ஆப்களை டவுன்லோட் செய்யவேண்டிய சூழல் நேர்கையில் உங்கள் மொபைலின் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று செட்டிங்ஸ்>செக்யூரிட்டி>பிற தளங்களிலிருந்து ஆப்களை டவுன்லோட் செய்து பயன்படுத்துவதற்கான ஆப்ஷனை செலக்ட் செய்வதின் வழியாக நாம் கூகுள் பிளே ஸ்டார் அல்லாத வேறு தளங்களிலிருந்தோ பிற மொபைல் போன்றவற்றிலிருந்தோ பெற்று இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

பிற தளங்களில் இருந்து:

பிற தளங்களில் இருந்து:

பிற தளங்களின் ஆப்கள் தேவைப்படுகையில் நமது மொபைலின் வெப் ப்ரவுசர் வழியே தேவையான ஆப்பினை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.இதற்கு நீங்கள் உங்கள் மொபைலில் செட்டிங்ஸ் பகுதியில் மேற்கொண்ட மாற்றம் உதவியாக இருக்கும்.

பாதுகாப்பாக:

பாதுகாப்பாக:

ஆண்ட்ராய்ட் மொபைல்கள் கூகுள் பிளே ஸ்டார் அல்லாத தளங்களில் இருந்து ஆப்களை டவுன்லோட் செய்வதனை அனுமதிப்பதில்லை.ஆனால் நாம் செட்டிங்ஸ் பகுதியில் செய்கின்ற மாற்றத்தின் மூலம் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.ஆனால் அது பாதுகாப்பான ஒன்றல்ல.சில செயலிகள் நமது மொபைலை பாதிப்படையச் செய்யும்.முற்றிலுமாக செயலிழக்கச் செய்யும் நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே டவுன்லோட் செய்த ஆப்கள் உங்கள் மொபைலை பதிப்படையச்செய்வதாக உணர்ந்தால் அதனை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு ரிஸ்டோர் பாக்டரி செட்டிங்ஸ் செய்வதன் மூலம் நமது மொபைலை பாதிப்படைவதிலிருந்து காக்கலாம்.

சேதம் விளைவிக்க கூடியவற்றிலிருந்து:

சேதம் விளைவிக்க கூடியவற்றிலிருந்து:

சில ஆப்களை நாம் கூகுள் பிளே ஸ்டோர் அல்லாத இணைய தளங்களிலிருந்து டவுன்லோட் செய்து உபயோகப்படுத்தினோமானால் வைரஸ் உள்ளிட்ட தீம்பொருட்கள் நமது மொபைலில் பரவி மொபைலை சேதப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.எனவே அத்தகைய ஆப்களை இன்ஸ்டால் செய்யும் போது நமது ஆப்ஸ் வழியே நமது மொபைலில் உள்ள சில பகுதிகளை பயன்படுத்துவதற்கான அனுமதியக்கேட்கும்.

அப்போது,நாம் எந்த காரணத்துக்காக குறிப்பிட்ட ஆஃப்பினை இன்ஸ்டால் செய்கிறோமோ அதற்கான தேவைகளை தவிர்த்து நமது மொபைலில் வேறு சில பகுதிகளை பயன் படுத்துவதற்கான அனுமதிகேட்குமேயானால் அவை நமது மொபைலுக்கு தீங்கிழைக்கக்கூடியவை என்று தெரிந்துகொள்ளலாம்.
எனவே இயன்றவரையில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ஆஃப்களை இஸ்டால் செய்து பயன்படுத்துவதே சிறந்த வழியாகும்.

மேலும் படிக்க:

மேலும் படிக்க:

யூட்யூப்க்கு மாற்றான சில வீடியோ தளங்கள்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Installing apps from third-party app stores: The process, risks involved, and more.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X