இனி டிரைவிங் லைசன்ஸ் காட்டினால் தான் Instagram-க்குள் அனுமதி! எதற்காக இந்த முடிவு? இது பாதுகாப்பானதா?

|

சோசியல் மீடியா அல்லது சமூக வலைத்தளம் என்ற வார்த்தைகள் மனிதர்களுடன் மிகவும் நெருக்கமாக, பசை தடவி ஒட்டி வைத்தது போல் பின்னிப் பிணைந்துவிட்டது. சமூக வலைத்தளங்கள் ஒரு வகையில் நமக்கு தேவையான சில நல்ல விஷயங்கள் பற்றிய தகவலைக் கொண்டு வந்து சேர்த்தாலும், பல நேரங்களில் இது மோசமான விளைவுகளையே ஏற்படுத்துகிறது. அளவுக்கு மீறினாள் அமிர்தமும் நஞ்சு என்பதற்கான சிறந்த உதாரணமாக சோசியல் மீடியா தளங்கள் மாறிவிட்டது.

சமூக வலைத்தளங்களில் சிறார்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து

சமூக வலைத்தளங்களில் சிறார்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து

குறிப்பாக, இது இப்போது சிறார்களின் பாதுகாப்பிற்குப் பங்கம் விலைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், சமூக வலைத்தள நிறுவனங்கள் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் (Instagram), இப்போது புதிய பாதுகாப்பு நடவடிக்கையை அமல்படுத்தவிருக்கிறது. இதன் படி, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அவர்களின் வயதை உறுதி செய்தாக வேண்டும்.

இன்ஸ்டாகிராம் வெளியிட்ட அதிரடி உத்தரவு

இன்ஸ்டாகிராம் வெளியிட்ட அதிரடி உத்தரவு

மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் படி, இனி இன்ஸ்டாகிராம் பயனர்கள் அவர்களின் ஓட்டுநர் உரிமம் அல்லது அடையாள அட்டை போன்ற ஐடியைப் பதிவேற்றும் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இதன் மூலம், மக்கள் தங்கள் வயதைச் சரிபார்க்க உதவும் புதிய விருப்பங்களை நிறுவனம் சோதிப்பதாகக் கூறியுள்ளது.

இனி இன்ஸ்டாகிராம் தளத்தில் வயதுக்கு ஏற்ற அனுபவங்கள் மட்டுமே

இனி இன்ஸ்டாகிராம் தளத்தில் வயதுக்கு ஏற்ற அனுபவங்கள் மட்டுமே

மேலும், இன்ஸ்டாகிராம் தளத்தில் வயதுக்கு ஏற்ற அனுபவங்களை வழங்கும் முயற்சியிலும் நிறுவனம் களமிறங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான, முக்கிய காரணம் என்னவென்றால், கடுமையான சமூக ஊடக பயனர்களுக்கு மனச்சோர்வு, பதட்டம், தனிமை, சுய-தீங்கு மற்றும் தற்கொலை போன்ற எண்ணங்கள் தோன்றவும்,

சமூக வலைத்தளம் பற்றி அதிர்ச்சி அடைய செய்த ஆய்வின் முடிவுகள்

சமூக வலைத்தளம் பற்றி அதிர்ச்சி அடைய செய்த ஆய்வின் முடிவுகள்

அதிக ஆபத்துக்கு இடையே பயனர்கள் செல்ல ஒரு வலுவான தொடர்பு உள்ளதென்றும் பல ஆய்வின் முடிவுகள் ஒப்புக்கொண்டுள்ளன. தீவிரமான சமூக ஊடக பயன்பாடு ஒரு பயனரின் மனதில் எதிர்மறையான அனுபவங்களை ஊக்குவிக்கலாம் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகச் சிறார்களுக்கு எதிரான பாதுகாப்பு பிரச்சனைகள் சமூக வலைத்தள தளங்களில் அதிகரிப்பதனால்,

Amazon-ல் இப்படி ஒரு ரோபோ வேலை செய்கிறதா? உங்கள் பார்சல் சரியாக வர ரோபோ தான் காரணமா?Amazon-ல் இப்படி ஒரு ரோபோ வேலை செய்கிறதா? உங்கள் பார்சல் சரியாக வர ரோபோ தான் காரணமா?

குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை

குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை

குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்காவில் தொடங்கி, இன்ஸ்டாகிராமில் 18 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தங்கள் பிறந்த தேதியைத் திருத்த முயன்றால், இனி Instagram அவர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டிய விருப்பங்களைக் காட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்

குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்

அந்த பயனர்கள், தங்கள் ஐடியைப் பதிவேற்றுவதன் மூலம் தங்கள் வயதைச் சரிபார்க்கலாம், தங்கள் வயது பற்றிய விபரங்களை வீடியோ செல்ஃபியாக பதிவு செய்து சமர்ப்பிக்கலாம் அல்லது வயதைச் சரிபார்க்கப் பரஸ்பர நண்பர்களைக் கேட்கலாம் என்று Instagram கூறுகிறது. பயனரின் வயதை உறுதியளிக்கும் நபருக்குக் குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

Instagram நிறுவனம் Yoti என்ற நிறுவனத்துடன் கூட்டு

Instagram நிறுவனம் Yoti என்ற நிறுவனத்துடன் கூட்டு

அதே நேரத்தில் அந்த நபர் வேறு யாருக்கும் உறுதியளிக்கக் கூடாது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அம்சத்தை Instagram சோதித்து வருகிறது. இதன் மூலம் டீனேஜ் வயதினரும், பெரியவர்களும் தங்கள் வயதினருக்கான சரியான அனுபவத்தில் இருப்பதை நிறுவனம் உறுதி செய்ய முடியும். மக்களின் தனியுரிமையை உறுதிப்படுத்த உதவுவதற்காக, ஆன்லைன் வயது சரிபார்ப்பில் நிபுணத்துவம் பெற்ற Yoti என்ற நிறுவனத்துடன் Instagram கூட்டுச் சேர்ந்துள்ளது.

நீங்கள் சமர்ப்பிக்கும் ID மற்றும் தகவல் பாதுகாப்பானதா?

நீங்கள் சமர்ப்பிக்கும் ID மற்றும் தகவல் பாதுகாப்பானதா?

பயனர்கள் வயதை உறுதிப்படுத்தச் சமர்ப்பிக்கும் ஐடி மற்றும் மற்ற விபரங்கள் இன்ஸ்டாகிராம் சேவையகங்களில் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பயனரின் வயது சரிபார்க்கப்பட்டு அடுத்த 30 நாட்களுக்குள் அந்த ஆவணம் முழுமையாக சர்வரில் இருந்து நீக்கப்படும் என்று இன்ஸ்டாகிராம் அதன் அறிக்கையில் கூறியுள்ளது. இதன் மூலம் உங்கள் ஐடி தகவல் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை நிறுவனம் பிரதிபலிக்கிறது.

செவ்வாயில் சிக்கிய பாம்பு தலை போன்ற உருவம்.. வியப்பில் விஞ்ஞானிகள்.. இது என்ன தெரியுமா?செவ்வாயில் சிக்கிய பாம்பு தலை போன்ற உருவம்.. வியப்பில் விஞ்ஞானிகள்.. இது என்ன தெரியுமா?

எப்படி இந்த செயல்முறை செயல்படுத்தப்படும்?

எப்படி இந்த செயல்முறை செயல்படுத்தப்படும்?

சரி, இது எப்படிச் செயல்படும் என்று தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். பயனர்கள் தங்கள் வயதைச் சரிபார்க்கக் கோரும் வீடியோ செல்ஃபியைப் பதிவேற்றிய பிறகு, இன்ஸ்டாகிராம் அதை Yoti நிறுவனத்துடன் உடன் பகிர்ந்து கொள்ளும். இந்த தகவல் வேறு யாருடனும் பகிரப்படாது மற்றும் இந்த தொழில்நுட்பத்தால் உங்கள் அடையாளத்தைக் கண்டறிய முடியாது என்று நிறுவனம் கூறுகிறது. இது உங்கள் வயதை மட்டும் அடையாளம் காணும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பயன்படுத்த குறைந்தது எத்தனை வயதாக வேண்டும்?

இன்ஸ்டாகிராம் பயன்படுத்த குறைந்தது எத்தனை வயதாக வேண்டும்?

தெரியாதவர்களுக்கு, கடந்த 2019 ஆம் ஆண்டில், இன்ஸ்டாகிராம் முதலில் பதிவுபெறும் பயனர்களிடம் இருந்து அவர்களின் வயதை வழங்குமாறு கேட்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. சில நாடுகளில் இன்ஸ்டாகிராமில் பதிவுபெற அந்த பயனர் குறைந்தபட்சம் 13 வயது இருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. இன்னும் சில நாடுகளில், குறைந்தபட்ச வயது என்பது 13 வயதிற்கு மேல் அதிகமாக உள்ளது என்று Instagram தெரிவித்துள்ளது.

13 முதல் 17 வயதிற்குள் இருக்கும் பயனர்களுக்கு இனி இன்ஸ்டாகிராம் இதை தான் செய்யும்

13 முதல் 17 வயதிற்குள் இருக்கும் பயனர்களுக்கு இனி இன்ஸ்டாகிராம் இதை தான் செய்யும்

டீனேஜ் வயதான 13 முதல் 17 வயதிற்குள் இருக்கும் பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் அவர்களின் வயதுக்கு ஏற்ற அனுபவங்களை வழங்குகிறது. அதாவது அவர்களை பிரைவேட் கணக்குகளில் வைப்பது முதல், அவர்களுக்குத் தெரியாத பெரியவர்களிடமிருந்து தேவையற்ற தொடர்பைத் தடுப்பது மற்றும் விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் அவர்களை அடைய வேண்டிய விருப்பங்கள் என்று பலவற்றை பில்டர் செய்து கட்டுப்படுத்துகிறது.

Best Mobiles in India

English summary
Instagram Wants Your IDs Like Driver License and Other Documents To Verify Age : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X