Instagram-ல் 700 பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்தவர் கைது! மிரட்டலுடன் சம்பாத்தியமும்!

|

இந்த லாக்டவுன் காலத்தில் இன்ஸ்டாகிராமில் பெண்கள் பதிவிட்ட புகைப்படங்களின் எண்ணிக்கை தான் அதிகமாகவுள்ளது. குறிப்பாக பெண்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படுவது பாதுகாப்பானது இல்லை என்று பலதரப்பில் கருத்து தெரிவிக்கப்படுகிறது. அதற்கு சான்றாக தற்பொழுது 700 பெண்களின் படத்தை மார்பிங் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்

குஜராத் மாநிலத்தில் உள்ள பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள மஹுவா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அல்பாஸ் ஜமானி (20) என்பவர் தான் இந்த காரியத்தை செய்திருக்கிறார். 12ம் வகுப்பு முடித்துவிட்டு உள்ளூரிலேயே இருக்கும் ஆலை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

சர்ஃப்

வேலை நேரம் போக மற்ற நேரங்களில் இன்ஸ்டாகிராமில் சர்ஃப் செய்து இளம் பெண்களின் கணக்குகளை ஆராய்ந்து அதில் உள்ள அவர்களின் புகைப்படங்களை சேகரித்து வந்திருக்கிறார்.அல்பாஸ் ஜமானி தான் தேர்ந்தெடுக்கும் இளம் பெண்களின் புகைப்படங்களை அவர்களின் கணக்குகளில் இருந்து தொடர்ச்சியாக பயனர் அனுமதியின்று திருடி வந்துள்ளார்.

வலுவான, கட்டமைப்பு

பின்னர் சேகரித்து வைத்த புகைப்படங்களை நிர்வாண புகைப்படங்களாகவே மார்பிங் செய்து, அவற்றை இன்ஸ்டாகிராமில் உள்ள மற்ற பெண்களுக்கு அனுப்பி இதுபோன்ற வலுவான, கட்டமைப்புடைய உடலினை பெற என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று தனிநபர் விளம்பரமும் செய்திருக்கிறார்.

ஏமாற்று வேலை

இதை உண்மை என்று பல பெண்களும் இவரிடம் சிக்கி ஏமாற்றம் அடைந்துள்ளனர். இப்படி பல பெண்களிடம் ஏமாற்று வேலை செய்வது வந்த அல்பாஸ் ஜமானியை தற்போழுது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

700க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படம்

கைது செய்யப்பட்ட அல்பாஸ் ஜமானியிடம் விசாரித்த காவல்துறையினருக்கு பல பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது. இதுவரை சுமார் 700க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணை

இப்படி அழகான பெண்களின் புகைப்படங்களை தேடி எடுத்து அவற்றை நிர்வாணமாக்கி மார்பிங் செய்து, அதை வைத்து மற்ற பெண்களை நம்ப வைத்து மோசடி செய்திருக்கிறார். அதேபோல், தனது வலையில் சிக்கும் இளம் பெண்களின் அந்தரங்க புகைப்படங்களையும் திருடி அவற்றை பணத்திற்காக மற்றவர்களுடன் பகிர்ந்து, அதன் மூலம் தனியாக சம்பாதித்து வந்ததும் போலீசார் விசாரணையில் வெளியாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
Instagram User Alfaz Jamani Morphed 700 Plus Instagram Girls Pics And Blackmailed : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X