இனி இலவசம் இல்ல., இன்ஸ்டா ரீல்ஸ் பார்க்க மாத கட்டணம் செலுத்தனும்- சோதனை தொடக்கம்., விரைவில் வரும் புது அம்சம்!

|

இன்ஸ்டாகிராம் ஒரு புதிய சந்தா பயன்முறைக்கான சோதனையை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த முறையானது பணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு என பிரத்யேக உள்ளடக்கத்தை வழங்க படைப்பாளர்களுக்கு அனுமதி வழங்குகிறது.

இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் கிரியேட்டர்களுக்கு வருமானம்

இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் கிரியேட்டர்களுக்கு வருமானம்

இது ஃபேன்ஸ், சப்ஸ்டாக் மற்றும் பேட்ரியன் ஆகியவற்றால் பிரபலப்படுத்தப்பட்ட அம்சமாகும் என்று நிறுவனம் புதன்கிழமை அறிவித்தது. இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் கிரியேட்டர்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கு வழிவகை செய்யும் என கூறப்படுகிறது. குறிப்பிட்ட பயனர்கள் ரீல்ஸ் சேவையை மிகவும் பிரத்யேகமாகவும் சுவாரஸ்யமாகவும் வெளியிடுவார்கள் அவர்களது ரீல்ஸ்களை பார்ப்பதற்கு என தனி பார்வையாளர்கள் இருப்பார்கள். இதன் மூலம் இனி ரீல்ஸ் சேவையை சந்தா செலுத்தி பார்க்க வைக்கும் பட்சத்தில் கிரியேட்டர்களுக்கு வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ரீல்ஸை சந்தா செலுத்தி பார்க்கும் வசதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது இந்த முறை சோதனையில் இருக்கிறது.

அமெரிக்காவின் பிரபலமான 10 கிரியேட்டர்களுக்கு இந்த சேவை

அமெரிக்காவின் பிரபலமான 10 கிரியேட்டர்களுக்கு இந்த சேவை

இந்த அம்சமானது அமெரிக்காவின் பிரபலமான 10 கிரியேட்டர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பின் தொடர்பவர்களை கொண்ட அமெரிக்காவின் 10 கிரியேட்டர்களுக்கு இந்த சேவை கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் சோதனை அடிப்படையில் இருக்கிறது. இதில் நடிகர் ஆலன் சிக்கின்ஷா, பேஸ்கட் பால் வீரர் செடோனா பிரின்ஸ், மாடல் க்ளேஷி குக் ஆகியோர் இந்த பட்டியலில் இருக்கின்றனர். இந்த திட்டம் சோதனை அடிப்படையில் இருக்கிறது. விரைவில் வரும் மாதங்களில் பல படைப்பாளர்களுக்கு இது கிடைக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மாத சந்தா கட்டணம் இந்திய மதிப்புப்படி ரூ.89

மாத சந்தா கட்டணம் இந்திய மதிப்புப்படி ரூ.89

தி வெர்ஜ் தகவலின்படி, படைப்பாளிகள் தங்கள் சொந்த சந்தா விலையை ஒரு மாதத்திற்கு 0.99 டாலர் முதல் 99.99 டாலர் வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மாத சந்தா கட்டணம் இந்திய மதிப்புப்படி ரூ.89 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு பணம் செலுத்தும் சந்தாதாரர்கள் பிரத்யேக லைவ் ஸ்ட்ரீம் அமர்வுகள், ஸ்டோரிகள் மற்றும் பேட்ஜ்களை வழங்க முடியும். இந்த அம்சம் படைப்பாளிகளை அதிகம் சம்பாதிக்க உதவும் என தாய் நிறுவனமான மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகார மார்க் ஜுக்கர்பெர்க் குறிப்பிட்டார். இன்ஸ்டாகிராம் ப்ரொபைல் பக்கத்தில் காணப்படும் சப்ஸ்கிரைப் என்ற ஆப்ஷனை தேர்வு செய்வதன் மூலம் இந்த அம்சத்தில் இணைய முடியும் என கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் இந்த புதிய சேவை மூலமாக கிரியேட்டர்கள் தங்கள் பார்வையாளர்கள் உடன் நெருக்கமாக தொடர்பில் இருக்க முடியும் மேலும் இதன் மூலம் கிரியேட்டர்கள் வருவாயை அதிகரிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

இளம் பயனர்களின் பாதுகாப்பு

இளம் பயனர்களின் பாதுகாப்பு

இளம் பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலி தயாரிப்புக்கான பணி இடை நிறுத்தம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசேரி கூறுகையில், குழந்தைகள் பதிப்பை உருவாக்குவது என்பது நீண்டு காலத்திற்கு தேவைப்படும் சரியான விஷயம் என நம்புவதாக குறிப்பிட்டார். பேஸ்புக் இன்ஸ்டாகிராம் கிட்ஸ் உருவாக்கும் பணியை இடைநிறுத்துவதாக அறிவித்தது. மேலும் இளம் வயதினர் மீது ஏற்படும் தாக்கத்தினை குறித்து கவலை கொள்வதாக குறிப்பிட்டார்.

இன்ஸ்டாகிராம் கிட்ஸ் பயன்பாடு

இன்ஸ்டாகிராம் கிட்ஸ் பயன்பாடு

இன்ஸ்டாகிராம் வளர் இளம் வயதினருக்கான இன்ஸ்டாகிராம் கிட்ஸ் பயன்பாட்டிற்கான பணியை தற்காலிமாகவே நிறுத்தி வைத்திருக்கிறது எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற பயன்பாடு உருவாகும் எனவும் உறுதியளித்தார். குழந்தைகள் முன்னதாகவே ஆன்லைனில் தொடர்ந்து இருப்பதாலும், இன்ஸ்டாகிராம் அணுகலுக்கான வயதை தவறாக சித்தரிப்பதன் காரணமாகவும் இந்த அம்சம் உருவாக்கம் செய்யப்படுகிறது. தற்போது 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அணுகக்கூடியவை ஆகும். இதையடுத்து 10 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்ற வகையிலான சேவையை அர்ப்பணிப்பது என்பது சிறந்தது என இன்ஸ்டாகிராம் நினைத்ததாக கூறினார். இருப்பினும் தற்போது உருவாக்கப்படும் பதிப்பு விளம்பரமில்லாமல் இருக்கும் எனவும் பெற்றோர்கள் நேரடியாக மேற்பார்வையிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
Instagram Testing New Feature its Allow to Subscription Service for Reels Creators

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X